இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் மிகலும் சிக்கலான காலகட்டத்தில் 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை பெரிய அளவில் அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நெருக்கடியில் பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர் கூட்டங்கள் 29 ஜனவரி துவங்க உள்ளது. இக்கூட்டத்தைக் கவர்னர் ராம் நாத் கோவிந்த் ராஜ்ஜிய சபா, லோக் சபா முன்னிலையில் ஜனவரி 29ஆம் தேதி காலை 11 மணிக்குத் துவங்கி வைக்க உள்ளார்.
இதேபோல் பிப்ரவரி 1ஆம் தேதி 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடக்க உள்ளது. 29 ஜனவரி முதல் 15 பிப்ரவரி வரை முதல் கூட்டமும், 2வது பகுதி கூட்டங்கள் 8 மார்ச் முதல் 8 ஏப்ரல் வரையில் நடக்க உள்ளது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி முடியும் முதல் பகுதி பட்ஜெட் கூட்டம், இந்தியாவில் அனைத்து துறைகளின் தேவைகள், கோரிக்கைகள் வரவேற்கப்படும். அதை மறு ஆய்வு செய்யும் பணிகள் மார்ச் 8ஆம் தேதி முதல் துவங்கும்.
கொரோனா தொற்று காரணமாக இந்த முறை, இந்தியச் சுதந்திரம் அடைந்து முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை பிரிண்ட் செய்யப்படாமல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் பேப்பர்லெஸ் முறையில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் அல்வா செய்யும் வழக்கத்தையும் இந்த ஆண்டுக் கடைப்பிடிக்க போவது இல்லை எனவும் தெரிகிறது. பொதுவாக இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி ஜனவரி 20ஆம் தேதி பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் ஒன்று சேர்ந்து தயாரிக்கப்படும்.