டைட்டன் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடிகாரத்துறையில் உலகளவில் மிகப்பெரிய ஆறாவது நிறுவனமான டைட்டன் நிறுவனம், கீழ்தட்டு மக்கள் முதல் கொண்டு மேல்மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான புதுமைகளை அளிப்பதில் தனித்துவமான ஒரு நிறுவனமாகும்.

 

இந்த நிறுவனம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் டாடா குழுமம் இணைந்து உருவாக்கிய ஒரு நிறுவனமாகும்.

டைட்டன் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

இது பெங்களூரை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கடந்த 2018ன் படியே 15,656 கோடி ரூபாய் வருவாய் கண்ட ஒரு பெரிய நிறுவனமாக இருந்துள்ளது.

ப சிதம்பரம் பளார் கேள்வி.. எல்ஐசி பங்கு விற்பனை எதற்கு.. விளக்கம் கொடுங்கள்..!

இந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் அதன் நிகரலாபம் 12.9% அதிகரித்து 470 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே போல மொத்த விற்பனையும் 9.4% அதிகரித்து 6,206 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஹெஸ்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் இந்த நிறுவனம் 461 கோடி ரூபாய் லாபம் காணும் என்றும், இதன் வருவாய் 6,351 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கணித்திருந்தது. இதன் நகை வர்த்தகம் 10.6% அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் மூன்றாவது காலாண்டில் வருவாய் 5,409 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 4,890 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

இதில் வாட்ச் பிரிவில் இருந்து கிடைத்த லாபம் 625 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பரில் மோசமான விற்பனை காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும், ஓரளவு சரிவையே காட்டியது. இதே கண் பார்வை தொடர்பான வர்த்தகம் 2.9% அதிகரித்து 133 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் டைட்டன் நிறுவனம் டிசம்பர் 31, 2019 நிலவரப்படி, 1,700க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளைக் கொண்டிருந்தது. இந்த சில்லறை பகுதி விற்பனை பகுதியானது 2.22 மில்லியன் சதுர அடியைத் தொட்டது என்றும் என்றும் கூறப்படுகிறது.

 

இது குறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் சிகே வெங்கட்ராமன், அக்டோபர் - நவம்பர் வரையிலான திருவிழா காலத்தில் நல்ல விற்பனையை கண்டதாகவும், டிசம்பர் மாதத்தில் வீழ்ச்சி கண்டதாகவும் தெரிவித்துள்ளார். எப்படி எனினும் எங்களது நகை வர்த்தகம் பரவாயில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 7.55% ஏற்றம் கண்டு 1275.50 ஆக வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Titan reported net profit rises near 13% to Rs.470 cr in q3

Jewellery maker Titan reported net profit rises 12.9%% to Rs.470 cr in ended December quarter. So Titan shares also trading were above 7% in the market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X