அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்காக செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000..! #tnbudget2022

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கிய துறைகளில் கவனம் என்று முன்னதாக கூறியிருந்த நிலையில், குறிப்பாக கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

 

குறிப்பாக இந்திய தொழில் நுட்ப கழகம், மருத்துவ கல்வி இயக்கம் என இணைந்து அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 6 - 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செலவை அரசே ஏற்கும்.

இது தவிர கல்லூரி செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, கல்வி இடை நிற்றலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசால் தமிழ்நாட்டு அரசுக்கு 20,000 கோடி ரூபாய் இழப்பு..! #TNBudget2022

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

அதன் படி, அரசு பள்ளியில் படிக்கும் பெண்கள் இடை நிற்றல் அதிகமாக உள்ளது. ஆக இதனை தடுக்க அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி செல்வோருக்கு மாதம் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது எந்த வகுப்பினை சார்ந்த குழந்தைகள் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம். உண்மையில் பெண் குழந்தைகளின் கல்வியை தொடர வழிவகுக்கும் எனலாம்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும்

பெண் கல்வியை ஊக்குவிக்கும்

பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்திருந்தாலே அந்த குடும்பமே பயனடையும். ஆக அப்படிப்பட்ட ஒரு சிறப்பான அறிவிப்பு தான் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் என மக்கள் நாடாமல், அரசு பள்ளிகளில் பயிலவும் இது பயனடையும். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களின் கல்வி வளர்ச்சியானது நிச்சயம் மேம்படும்.

நீண்டகால திட்டம்
 

நீண்டகால திட்டம்

இது எதிர்காலத்தில் பெண்கள் பலதுறைகளில் காலடி எடுத்து வைக்க பயனுள்ளதாக இருக்கும். பெண்களும் வேலைக்கு செல்வது அதிகரிக்கும். மொத்தத்தில் இது எதிர்காலத்தில் தமிழக பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் ஒரு நீண்டகால திட்டமாகத் தான் பார்க்கப்படுகிறது.

பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு?

பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு?

இதற்கிடையில் பள்ளிகல்வித் துறைக்கு மட்டும் இந்த பட்ஜெட்டில் 36,895.89 கோடி ரூபாய் நிதியானது ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லம் பள்ளிக் கல்வியோடு மட்டும் அல்ல மாப்னவர்கள் ஆராய்ச்சி படிப்புகளிலும் சிறந்து விளங்க அறிவுசார் நகரம் உருவாக்கப்படும், உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழக கிளைகளை கொண்டிருக்கும். இந்த நகரில் ஆராய்ச்சி பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கபபட்டுள்ளது. இது தவிர அரசு பள்ளிகளை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வி மேம்ப்பாட்டு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

tn budget 2022: Rs.1000 per month for students going for higher education in government schools

tn budget 2022: Rs.1000 per month for students going for higher education in government schools/ அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்காக செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000.. பிடிஆரின் சூப்பர் அறிவிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X