10 வருடத்தில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள்.. விவசாயிகளுக்கு நன்மை.. குடிநீர் பிரச்சனை தீர்க்க வழி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் நீர் சேமிப்பு அளவீட்டை மேம்படுத்தவும், விவசாயத்திற்கு வருடம் முழுவதும் போதுமான தண்ணீர் விநியோகம் செய்வதற்கும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல முக்கியமான திட்டங்களைத் தங்களது பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ளது.

 

பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் மாநிலங்களுக்கான பகிர்வு குறைந்தது..!

இந்த அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெரிய அளவில் நன்மை அளிப்பது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் விவசாய உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் கூடுதலான வருமானத்தைப் பெற முடியும்.

1,000 தடுப்பணைகள், கதவணைகள்

1,000 தடுப்பணைகள், கதவணைகள்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 10 வருடத்தில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.

நதிநீர் திட்டம்

நதிநீர் திட்டம்

மேலும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் திட்டத்தைச் செயல்படுத்தக் கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நிதி தண்ணீரைச் சென்னைக்குக் குழாய் வாயிலாகக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு வருகிறது எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.

50 குறு நீர்ப்பாசன குளங்கள்
 

50 குறு நீர்ப்பாசன குளங்கள்

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 50 குறு நீர்ப்பாசன குளங்களைத் தரப்படுத்தச் சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு, இதற்கான பணிகளை விரைவில் துவங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். மேலும் குளங்களைத் தூர் வாருவதற்குச் சுமார் ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை அணை

மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை அணை

இதோடு தமிழ்நாட்டின் நீர் தேவை அளவீட்டைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்த்தேக்க அளவு பழைய நிலைக்குக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும் கொசஸ்தலை ஆற்றில் ரூ87 கோடியில் வெள்ள நீர் வடிகால் அமைக்கவும் உள்ளதாகப் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

நீர் சேமிப்பு அதிகரிப்பு

நீர் சேமிப்பு அதிகரிப்பு

இந்த நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தில் நீர் சேமிப்பு அதிகரிப்பதன் வாயிலாகத் தமிழ்நாட்டில் இருக்கும் 79,395 குக்கிராமங்களில் ஒருநபருக்கு தலா 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.

தண்ணீர் மற்றும் காற்று மாசுபாடு

தண்ணீர் மற்றும் காற்று மாசுபாடு

இதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் தமிழ்நாட்டின் தண்ணீர் மற்றும் காற்று மாசுபாட்டு அளவீட்டைக் குறைக்க முக்கிய ஆறுகளின் மேல், கீழ் பகுதிகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு அமைப்புகளை அமைக்கவும், ஒருங்கிணைந்த சுற்றுச் சூழல் கண்காணிப்பு மையம் உருவாக்கவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாகப் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TN govt plans to build 1000 Detention dams in next 10 years: Tamilnadu Budget 2021

TN govt plans to build 1000 Detention dams in next 10 years: Tamilnadu Budget 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X