தமிழக அரசு சொன்ன நல்ல விஷயம்.. தொழில் பூங்காக்கள் தொடக்கம்.. ஆனால் வர்த்தகம் வழக்கம்போல இருக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் சில வாரங்களாக முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு வந்தது. எனினும் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை பூங்காக்கள் செயல்பாடுகளை நிறுத்தி, ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்பட 17 பெரிய தொழில்துறை பிரிவுகளுக்கு மீண்டும் பணிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். எனினும் வர்த்தகத்தினை இது இயல்பு நிலைக்கு கொண்டு வருமா? என்ற கேள்வியும் உடன் எழுகிறது.

கட்டுப்பாடுகளுடன் அனுமதி

கட்டுப்பாடுகளுடன் அனுமதி

அரசின் மேற்கண்ட தளர்வுகளினால் கிண்டி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட தொழில்துறை பிரிவுகள் திங்கள்கிழமை முதல், அதாவது இன்று முதல் மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளன. எனினும் பல கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றித் தான் தொடங்கபட்டுள்ளது என்றும் மாநில அரசு பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இது தான் விதிமுறைகள்

இது தான் விதிமுறைகள்

குறிப்பாக நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தொழிலாளர்களின் உடல் வெப்ப நிலை கண்கானித்தல் மற்றும் பேஸ் மாஸ்க் கட்டாயமாக்குவது, இரண்டு முறை கிருமி நீக்கம் செய்தல் என பல விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளது. அதோடு கட்டாயம் சரியான சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவும் அவசியம்
 

இதுவும் அவசியம்

மேலும் தொழில்துறை பூங்காக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதோடு அறிகுறி உள்ள தொழிலாளர்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டாம் என உள்ளிட்ட பல அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தான் பிரச்சனை

இது தான் பிரச்சனை

தமிழக அரசின் இந்த அதிரடியான நடவடிக்கையானது வரவேற்க தக்க விஷயம் என்றாலும், இதிலும் சில பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக இங்குள்ள நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களில் சிலர் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் திரும்ப இயலாத நிலையே நீடித்து வருகிறது. ஆக தொழிலாளர்களில் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், அவர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலையே நீடித்து வருகின்றது.

உற்பத்தியை உடனே தொடங்க முடியாது

உற்பத்தியை உடனே தொடங்க முடியாது

மேலும் தொடக்கத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தூய்மைப் பணி மற்றும் இயந்திரங்கள் பராமரிப்பு பணி, 2 மாதங்களாக செயல்படாத நிலையில், தற்போது அவற்றை சரி செய்தல் உள்ளிட்ட பல வேலைகள் உள்ளன. இதனால் உற்பத்தியினை உடனடியாக தொடங்க முடியாது. இதெல்லாவற்றையும் விட, உற்பத்திக்கு தேவையான மூலதன பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்குமா என்பதும் கேள்விக்குரியாகத் தான் உள்ளது.

மெதுவான வேகத்திலேயே மீண்டு வர தொடங்கியுள்ளது

மெதுவான வேகத்திலேயே மீண்டு வர தொடங்கியுள்ளது

ஏனெனில் கொரோனாவிற்கு பயந்து ஓட்டுனர்கள் தங்களது பணிக்கு திரும்ப ஆர்வம் காட்டாத நிலையில், ஓட்டுனர்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இதன் காரணமாக மீண்டும் இயல்பு நிலை திரும்புமா? இதுவே விநியோக சங்கிலியில் சில பிரச்சனைகளை கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக நலிந்து போன தொழில்துறையானது மிக மெதுவான வேகத்திலேயே மீண்டு வரத் தொடங்கியுள்ளது.

இவ்வளவு தான் உற்பத்தி செய்ய முடியும்?

இவ்வளவு தான் உற்பத்தி செய்ய முடியும்?

நாங்கள் எங்களது திறனில் 30 -40% உற்பத்தியினை ஜூன் மாதத்திலும், இதுவே 60 -70% ஆக்ஸ்டிலும் திரும்ப பெறலாம் எனவும் AIEMA தலைவர் சுஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் எங்களுக்கு ஊழியர்கள் தேவை. அவர்கள் திரும்பி வர வேண்டும். ஆனால் அவர்கள் பல பிரச்சனைகளில் உள்ளனர். அதிலும் தற்போது நிலவி வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்படுமோ என்ற பயம் நிலவி வருகிறது. அதோடு நிதி நிலைமையும் மோசமாக உள்ளது.

ஆக தொழில்துறை பூங்காக்கள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், இது வர்த்தகத்தினை உடனடியாக மீட்கும் என்று கூற முடியாது என்றும் கூறப்படுகிறது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TN industrial estates to open, but it won’t be business as usual

Tamilnadu government Sunday permitted 17 industrial estates, Including amabattur and guindy. But it won’t be business as usual
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X