2021ல் உலகளவில் முக்கிய முதலீடாக மாறியுள்ளது கிரிப்டோகரன்சி, சிறு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் பெரும் நிறுவனங்கள், பெரு முதலீட்டாளர்களுக்கும் இத்துறை முதலீட்டில் இறங்கியுள்ளதால் கிரிப்டோ சந்தை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்கள் மத்தியிலும் இருக்கும் முக்கியமான கேள்வி என்றால் இது, 2022ல் எந்தக் கிரிப்டோகரன்சி அதிகப்படியான வளர்ச்சியை அடையும் என்பது தான்.
2022ஆம் ஆண்டுக்கான டாப் 10 கிரிப்டோகரன்சியைத் தெரிந்துகொண்டால் இதில் முதலீடு செய்து விரைவாக லாபம் பார்க்க முடியும்.
இதைத் தெரிந்துகொள்வதற்கு முன் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மற்றும் கிரிட்டோ சந்தையின் போக்கை தெரிந்துகொண்டால் தான் சரியான முறையில் கணக்கிட முடியும்.
பிட்காயின் மதிப்பு மீண்டு உயர்வு.. கிரிப்டோ சந்தையில் நடப்பது என்ன தெரியுமா..?!

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி எண்ணிக்கையும், கிரிப்டோ முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வேளையில் ரீடைல் முதலீட்டாளர்கள் 2021ஆம் ஆண்டில் குறுகிய காலகட்டத்தில் அதிகப்படியான லாபத்தைப் பெற வேண்டும் என எண்ணம் கொண்டு இருந்த காரணத்தால் சிறிய மதிப்புகொண்ட கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபம் பார்த்து வந்தனர்.

லாபம் கிடைக்குமா
இந்த ஐடியா எந்த அளவிற்கு லாபத்தைக் கொடுக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த வருடம் பெரிய அளவில் பிரபலம் இல்லாத பல கிரிப்டோகரன்சிகள் அதிகப்படியான லாபத்தைப் பெற்று வந்தது மறுக்க முடியாத உண்மை.

ரீடைல் முதலீட்டாளர்கள்
இதைக் கவனித்து ரீடைல் முதலீட்டாளர்கள் வர்த்தகத் தளத்திற்குப் புதிதாக வந்துள்ள கிரிப்டோகரன்சி, பிரபலமான பெயரில் வரும் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்துவிட்டு லாபத்தைப் பெற ஆண்டவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஐடியா பல முறை லாபத்தையும் கொடுத்துள்ளது, பல முறை நஷ்டத்தையும் கொடுத்துள்ளது.

6000 கிரிப்டோகரன்சிகள்
உலகில் 6000 கிரிப்டோகரன்சிகள் இருக்கும் வேளையில் இத்தகைய முதலீட்டுப் போக்கு மிகவும் ஆபத்தானது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இதேபோல் உலக நாடுகள் தொடர்ந்து கிரிப்டோகரன்சி குறித்து எச்சரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களும் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இதனால் 2022ல் மக்களின் முதலீடு போட்டு கிரிப்டோ சந்தையில் பெரும் அளவில் மாற்றம் இருக்கும்.

டாப் 10 கிரிப்டோகரன்சி
இதன் மூலம் 2022ல் அதிகம் வளர்ச்சி அடையக் கூடிய டாப் 10 கிரிப்டோகரன்சி எனச் சந்தை வல்லுனர்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணித்துள்ளது. குறிப்பாகப் பாதுகாப்பு, பயன்பாடு, வர்த்தக அளவீடு, புதிய கிரிப்டோ உருவாக்குவதற்கான வாய்ப்பு அளவீடு ஆகியவற்றை வைத்துக் கணக்கிடும் போது சந்தையில் அதிகச் சந்தை மதிப்பு கொண்ட சில முக்கியக் கிரிப்டோ அதிகளவிலான வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

2022 டாப் 10 கிரிப்டோ
பிட்காயின்
எதிரியம்
பினான்ஸ் காயின்
போல்காடாட்
சோலானா
கார்டானோ
டெதர்
USD காயின்
டோஜ்காயின்
ரிப்பிள்