நடப்பு ஆண்டு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் நல்ல லாபம் கொடுத்த சில பென்னி பங்குகளை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.
நம் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ? அதனை பாதுகாப்பது அதனை விட முக்கியம். ஆக ஒன்றில் முதலீடு செய்யும் போது ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசிக்கலாம், பலரை அணுகலாம். ஆனால் இறுதி முடிவு என்பது நம்முடையதாக இருக்க வேண்டும்.
ஆக நாம் செய்யும் முதலீடு என்பது பத்திரமாக இருக்க வேண்டும். லாபமும் கொடுக்க வேண்டும். நஷ்டம் ஆக கூடாது. எல்லாவற்றிக்கும் மேலாக அதிக ரிஸ்க் இருக்க கூடாது என்று பலரும் நினைப்போம். கடந்த மார்ச் மாதத்தில் அதள பாதாளம் நோக்கி சென்ற பங்கு சந்தைகள், இன்று றெக்கை இல்லாமல் பறந்து கொண்டுள்ளன. அதிலும் பென்னி பங்குகள் சூப்பர் ஏற்றத்தினை கண்டுள்ளன. அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

பென்னி ஸ்டாக்ஸினை விரும்புவதில்லை
பங்கு சந்தையினை பொறுத்தவரையில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலானோர் நல்ல வளர்ச்சி கொண்ட, முதல் தர பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவர். ஆனால் பென்னி ஸ்டாக்ஸ் எனப்படும் மிகக் குறைந்த விலையில் வர்த்தகமாகி வரும் பங்குகளை வாங்குவதில்லை. அதன் மீது கவனமும் செலுத்துவதில்லை. ஆனால் இதுப்போன்ற பங்குகளை குறி வைத்தும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் உண்டு.

முதலீட்டாளர்களை ஈர்ப்பு
பங்கு சந்தையினை பொறுத்தவரையில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலானோர் நல்ல வளர்ச்சி கொண்ட, முதல் தர பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவர். ஆனால் பென்னி ஸ்டாக்ஸ் எனப்படும் மிகக் குறைந்த விலையில் வர்த்தகமாகி வரும் பங்குகளை வாங்குவதில்லை. அதன் மீது கவனமும் செலுத்துவதில்லை. ஆனால் இதுப்போன்ற பங்குகளை குறி வைத்தும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் உண்டு.

கவனம் தேவை
சில பங்குகள் முதலீட்டாளர்களின் முதலீடுகளை இரட்டிபாக்கியுள்ளன. எனினும் இதுபோன்ற சிறிய மற்றும் நடுத்தர, பென்னி ஸ்டாக்குகளில் முதலீட்டாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பென்னி ஸ்டாக்குகள் சில 10 ரூபாய்க்கு கீழாக வர்த்தகமாகும். இந்த நிறுவனங்கள் சாத்தியமான வணிகத்தினை கொண்டிருக்காது. ஆக இதில் முதலீடு செய்யும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று நாம் பார்க்கவிருக்கும் சில பங்குகள் 25 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி வரும் பங்குகளாகும். இதன் சந்தை மூலதனமும் 100 கோடி ரூபாய்க்குள் இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருக்கும் முதல் பங்கு அலோக் இண்டஸ்டீரிஸ் (Alok industries) இந்த பங்கின் விலையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 602% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2018 வெறும் 3.04 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 21.35 ரூபாயாக அதிகரித்துள்ளது.

400% வரையில் ஏற்றம்
இரண்டாவது சுபெக்ஸ் (SUBEX). இந்த பங்கின் விலையானது ஒரு வருடத்தில் 403% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 5.90 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 29.70 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே கர்தா கன்ஸ்ட்ரசன் (karta contruction) பங்கானது ஒரு வருடத்தில் 376% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 23.94 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 113.10 ரூபாயாக அதிகரித்துள்ளது.

300% வரையில் ஏற்றம்
கெல்டான் டெக் சொல்யூசன்ஸ் (kellton tech solutions) இந்த பங்கானது ஒரு வருடத்தில் 301% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 18.05 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 72.40 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சிஜி பவர் & இண்டஸ்ட்ரியல் சொல்யூசன்ஸ் (CG power & industrial solutions) பங்கானது ஒரு வருடத்தில் 299% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 10.82 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 43.20 ரூபாயாக அதிகரித்துள்ளது.

260% வரையில் ஏற்றம் கண்ட பங்குகள்
ரத்தான்இந்தியா இன்ப்ரடிரக்சர் (Rattanindia infrastructure) பங்கானது ஒரு வருடத்தில் 253% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 1.87 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 6.61 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மார்க்சேன்ஸ் பார்மா (Marksans Pharma) பங்கானது ஒரு வருடத்தில் 247% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 16.71 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 58.05 ரூபாயாக அதிகரித்துள்ளது.
டாடா டெலிசர்வீசஸ் பங்கானது ஒரு வருடத்தில் 237% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 2.25 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 7.59 ரூபாயாக அதிகரித்துள்ளது.

குறைவான பங்கு விலை
பாம்பே ராயோன் பேஷன்ஸ் பங்கானது ஒரு வருடத்தில் 220% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 4.20 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 13.44 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜெய்பிரகாஷ் அசோசியேஷன் பங்கானது ஒரு வருடத்தில் 214% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 31, 2019ல் 1.96 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 24, 2020ல் 6.16 ரூபாயாக அதிகரித்துள்ளது.