ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. கொட்டிக் கிடக்கும் ஏராளமான வாய்ப்புகள்.. சம்பளமும் அதிகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் ஐந்து முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா உள்ளிட்ட ஐடி ஜாம்பவாங்கள் 60,000 சாப்ட்வேர் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளன.

 

இதே கடந்த காலாண்டில் கிட்டதட்ட 50,000 ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது கொரோனா பரவலுக்கு மத்தியில் டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், ஐடி ஊழியர்களுக்கான தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

ஐடி நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறும் attrition விகிதம்.. முன்னணி நிறுவனங்கள் கவலை..!

டெக் மகேந்திரா பணியமர்த்தல்

டெக் மகேந்திரா பணியமர்த்தல்

இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள், கடந்த காலாண்டில், பணியமர்த்தலை கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக டெக் மகேந்திரா கடந்த காலாண்டு முடிவுகளின் படி, கிட்டதட்ட 7,000 பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

கவலையளிக்கும் அட்ரிஷன் விகிதம்

கவலையளிக்கும் அட்ரிஷன் விகிதம்

நாட்டில் உள்ள 4.5 மில்லியன் ஐடி பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினைக் கொண்ட ஐந்து நிறுவனங்களும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது அட்ரிஷன் விகிதமானது கணிசமான அதிகரிப்பினைக் கண்டுள்ளன. குறிப்பாக விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் கடந்த காலாண்டில் கிட்டதட்ட 14% மற்றும் 15.5% அட்ரிஷன் விகிதத்தினை கண்டிருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 20% மேலாக பதிவு செய்துள்ளன.

டிசிஎஸ் தலைமை மனிதவள அதிகாரி
 

டிசிஎஸ் தலைமை மனிதவள அதிகாரி

இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட், இந்த நிலையானது அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தொடரலாம் என கூறியுள்ளார். இது லேட்டரல் பணியமர்த்தல் செலவு விகிதம் அதிகரித்திருந்தாலும், ஒரு வலுவான திறமை கையகப்படுத்தலில் இறங்கியுள்ளது என கூறியுள்ளார்.

இன்ஃபோசிஸ் தலைமை இயக்க அதிகாரி

இன்ஃபோசிஸ் தலைமை இயக்க அதிகாரி

இதே இன்ஃபோசிஸ் தலைமை இயக்க அதிகாரி பிரவின் ராவ், வரவிருக்கும் காலாண்டுகளில் திறமைகளை பணியமத்தல் செலவுகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். ஆக ஐடி சேவை வழங்குனர்கள் அதனை சமாளிக்க வேண்டியிருக்கும். ஐடி துறையில் திறமைகளுக்கான அதிக தேவை, ஒரு விலை போருக்கு வழிவகுத்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட ஆஃபர்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட ஆஃபர்கள்

கொரோனாவுக்கு முன்பாக வேலைக்காக போராடிய ஊழியர்கள், இன்று மூன்று முதல் 4 ஆஃபர்களை பெறுகிறார்கள். ஏனெனில் இதுவரை இல்லாத அளவு டிஜிட்டல் தேவையானது உச்சம் தொட்டுள்ளது. இது கொரோனாவால் அதிகரித்துள்ளது. இதனால் 50 - 70% உயர்வினை ஊழியர்கள் பெறுகிறார்கள்.

ஐடி நிறுவனங்களின் மாபெரும் திட்டம்

ஐடி நிறுவனங்களின் மாபெரும் திட்டம்

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் 2022ம் ஆண்டில் ஆண்டில் 1.6 லட்சம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. இதே நடப்பு ஆண்டில் 82,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தியுள்ளன.

பயிற்சியுடன் பணியமர்த்தல்

பயிற்சியுடன் பணியமர்த்தல்

கடந்த தாசப்தத்தில் பிரெஷ்ஷர்களுக்கான ஊதியமான பெரியளவில் அதிகரிக்கவில்லை. இதற்கிடையில் 3 - 7 வருட அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு மத்தியில் தான் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் தற்போது பற்பல நிறுவனங்களும் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த தொடங்கியுள்ளன. அவர்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்திக் கொள்கின்றன.

பணியமர்த்தலில் ஏற்றம்

பணியமர்த்தலில் ஏற்றம்

இவ்வாறு பயிற்சி அளித்து பணியில் அமர்த்தும் ஊழியர்களை விரைவில் ஒப்பந்தங்களை முடிக்க பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் ஆட்சேர்ப்பு நிறுவனமான Experis நிறுவனத்தின் தலைவர் சஞ்சு பல்லூர்கர், நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் பணியமர்த்தலில் தற்போது மிகப்பெரியளவிலான ஏற்றம் காணப்படுகின்றது.

மந்தம் ஏதும் இல்லை

மந்தம் ஏதும் இல்லை

பொதுவாக அக்டோபர் - டிசம்பர் காலத்தில் பணியமர்த்தல் சற்று மந்தமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் அப்படி எந்த மந்தமும் இருப்பதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

உண்மையில் அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஐடி ஊழியர்களுக்கும், பிரெஷ்ஷர்களுக்கும் ஜாக்பாட் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 5 tech firms hire 60,000 employees in second quarter amid high demand; it may surge in coming quarters

IT companies latest updates.. Top 5 tech firms hire 60,000 employees in second quarter amid high demand; it may surge in coming quarters
Story first published: Monday, October 25, 2021, 22:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X