மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஆபீஸ்-ஐ காலி செய்யும் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..! #OYO

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வந்த OYO நிறுவனம் கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் சுற்றுலா, பயணங்கள் என அனைத்தும் முடங்கிய நிலையில் ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி வர்த்தகம் கடுமையாகப் பாதித்துள்ளது.

 

இதன் எதிரொலியாக வர்த்தகம் இல்லாமல் தவித்து வரும் OYO செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு தனது அலுவலகங்களைக் காலி செய்து வருகிறது.

இதில் OYO மட்டுமில்லை இந்தியாவில் இதுநாள் வரையில் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக இருக்கும் பல நிறுவனங்கள் அலுவலகத்தை காலி செய்துள்ளது.

64% லாபம்! தங்கம் விலை எகிறி வந்த கதை! தங்கம் வாங்கியவர்களுக்கு வாழ்வு தான்!

OYO திட்டம்

OYO திட்டம்

இந்திய OYO நிர்வாகம் தனது ஊழியர்களை 3 பிரிவாகப் பிரித்துள்ளது, 1) corporate employees 2) capability functions 3) field staff. இதில் field staff ஊழியர்கள் ஏற்கனவே வெளியில் தான் வேலை என்பதால் அவர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு அபீஸ் தேவையின்றிப் பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

capability functions இப்பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் தினசரி வர்த்தகம் மற்றும் நடைமுறைகளைக் கண்காணிக்கும் ஆப்ரேஷன்ஸ் பிரிவு அதிகாரிகள். இவர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றவும், தேவைப்பட்டால் CO-Working spaces பிரிவில் பணியாற்றவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

corporate employees 100% பேரும் வீட்டில் இருந்த பணியாற்ற முடியும் என்பதால் அலுவலகத்தின் தேவை இல்லை.

OYO ஊழியர்கள்

OYO ஊழியர்கள்

மேலும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக OYO ஊழியர்கள் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சொந்த ஊருக்குச் சென்றுள்ளதால் அலுவலகத்தின் தேவை என்பது மிகவும் குறைவாக உள்ளது.

அலுவலகம் மூடல்
 

அலுவலகம் மூடல்

இதன் எதிரொலியாகக் கூர்கிராம்-ல் இருக்கும் OYO அலுவலகத்தை முழுமையாகக் கைவிட்டது OYO நிர்வாகம். இதுமட்டும் அல்லாமல் இந்த அலுவலகத்துடனான ஒப்பந்தமும் முறித்துக்கொண்டுள்ளது OYO.

பிற முக்கிய நிறுவனங்கள்

பிற முக்கிய நிறுவனங்கள்

ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் மும்பை ஒரு அலுவலகத்தையும், பாலிசி பஜார் கூர்கிராம்-ல் இருக்கும் 12 அலுவலகத்தில் 4 அலுவலகத்தையும், ஸ்விக்கி இந்திய முழுக்க இருக்கும் சிறு அலுவலகத்தையும் முழுமையாக மூடியுள்ளது.

இந்த வரிசையில் தற்போது சோமேட்டோவும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லீஸ் ஒப்பந்தம்

லீஸ் ஒப்பந்தம்

2020ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் இந்தியாவில் லீஸ் ஒப்பந்தம் செய்யும் எண்ணிக்கை சுமார் 37 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 10 வருடத்தில் இல்லாத ஒரு மோசமான நிலை என Knight Frank ஆய்வறிக்கை கூறுகிறது.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

இன்றைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் பெரிய பெரிய அலுவலகத்தில் ஊழியர்களுக்குப் பல்வேறு சேவைகளும், வசதிகளும் இருக்கும் வகையில் தான் அலுவலகத்தை அமைக்கிறது. இதனால் வாடகை, பராமரிப்பு எனப் பல வகையில் செலவுகள் அதிகமாக உள்ளதாக ஸ்டார்அப் நிறுவனங்கள் கூறுகிறது.

இதுவும் இன்றைய மோசமான வர்த்தகச் சூழ்நிலையில் வாடகை என்பது மிகப்பெரிய சுமையாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பார்க்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Indian startups are closing office spaces permanently; Employees shocked

Top Indian startups are closing office spaces permanently; Employees shocked
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X