இந்திய வங்கி துறையின் கட்டமைப்பை மாற்றி அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள ரிசர்வ் வங்கி, புதிதாக யுனிவெர்சல் பேங்க் உரிமம் பெறும் நிறுவனங்களுக்கு Non-operative Financial Holding Company (NOFHC) கட்டமைப்பின் கீழ் கொடுக்கப்பட்டாலும், குழுமத்தில் மாற்று அல்லது வேறு வர்த்தகம் எதுவும் இல்லாத போது NOFHC தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
அதாவது ஒரு NBFC வங்கியில் சாதாரண வங்கி சேவைகள் மட்டும் அளிக்கப்படும் போது ஹோல்டிங் நிறுவனம் தேவையில்லை என்பதே இப்புதிய விதிமுறை மாற்றத்தின் பொருள்.
ஆனால் வங்கியின் ப்ரோமோட்டர்கள், ப்ரோமோட்டர்களின் நிறுவனங்கள், கிளை நிறுவனங்கள் வங்கி அல்லாத பிற சேவைகள் உதாரணமாக மியூச்சவல் பண்ட் முதலீட்டுச் சேவை கொடுத்தால் ஹோல்டிங் நிறுவனம் கட்டாயம் தேவை.
இந்த மாற்றம் NBFC வங்கிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் காரணத்தால் இந்நிறுவன பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தடாலடியாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி செய்வது முற்றிலும் தவறு.. ரகுராம் ராஜன் அதிரடி..!

ஐடிஎப்சி லிமிடெட்
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் ஐடிஎப்சி வங்கி பங்குகள் 19.88 சதவீதம் வரையில் உயர்ந்து அப்பர் சர்கியூட் அளவை அடைந்துள்ளது. இதனால் ஐடிஎப்சி பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 33.45 ரூபாய்க்கு முடிவடைந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 40.10 ரூபாய் வரையில் உயர்ந்தது.

Equitas ஹோல்டிங்க்ஸ் லிமிடெட்
ஐடிஎப்சி பங்குகளைப் போலவே Equitas ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 52.85 ரூபாய்க்கு முடிவடைந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 19.96 சதவீத வளர்ச்சி அடைந்து அப்பர் சர்கியூட் அளவை அடைந்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் Equitas ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் பங்கு மதிப்பு 63.40 ரூபாய் வரையில் உயர்ந்தது.

Ujjivan பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்
Ujjivan பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 248 ரூபாய்க்கு முடிவடைந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 16.59 சதவீத வளர்ச்சி அடைந்து வர்த்தகம் முடிவடைந்தது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் Ujjivan பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் பங்கு மதிப்பு 289.15 ரூபாய் வரையில் உயர்ந்தது.

புதிய மாற்றம்
தற்போது NOFHC கீழ் இருக்கும் வங்கிகள் அனைத்தும் மாற்றும் வர்த்தகம் இல்லாத போது ஹோல்டிங் நிறுவனத்தைக் களைத்து விட்டு வெளியேறலாம். இதேபோல் 2013ஆம் ஆண்டுக்கு முன் வங்கி உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கும் இந்தப் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், அடுத்த 5 வருடத்திற்கு ஹோல்டிங் கட்டமைப்பிலிருந்து வெளியேற அனுமதி உண்டு.