33 வருட வரலாற்றை உடைத்த பிரிட்டன்.. ஓரே வருடத்தில் புதிதாக 24 பில்லியனர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக் காலத்தில் உலகளவில் சாமானிய மக்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டார்களோ, அதற்கு நேர் எதிராகப் பெரும் பணக்காரர்கள் அதிகளவில் லாபத்தை அடைந்துள்ளனர் என்றால் மிகையில்லை.

 

உண்மையில் உலகளவில் கொரோனா தொற்று நிறைந்த 2020ஆம் ஆண்டில் அதிகளவிலான பில்லியனர்கள் உருவாகியுள்ளனர்.

போனா வராது பொழுது போனா கிடைக்காது.. மளமளவென சரியும் தங்கம் விலை..!

இதில் ஒரு படி அதிகமாகப் பிரிட்டன் தனது 33 ஆண்டு வரலாற்றை உடைக்கும் வகையில், பெரும் சாதனையைப் படைத்துள்ளது. 2020ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 24 பில்லியனர்கள் உருவாகியுள்ளனர்.

பிரிட்டன் பில்லியனர்கள்

பிரிட்டன் பில்லியனர்கள்

பிரிட்டன் நாட்டின் ஒரு வருடத்தில் புதிதாக 24 பில்லியனர்களை உருவாக்கி சாதனை படைத்தது மட்டும் அல்லாமல் 2020ல் பிரிட்டன் பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு என்பது 22 சதவீதம் அதிகரித்து 597.2 பில்லியன் டாலர் அளவீட்டை அடைந்துள்ளது.

மொத்த பில்லியனர்கள் எண்ணிக்கை

மொத்த பில்லியனர்கள் எண்ணிக்கை

மேலும் 2020ஆம் ஆண்டு முடிவில் பிரிட்டன் நாட்டின் மொத்த பில்லியனர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது எனத் தி சன்டே டைம்ஸ் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் நாட்டின் டாப் 3 பணக்காரர்கள் பட்டியலில் ஒருவர் கூடப் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது தான் வருத்தமான செய்தி.

உக்ரைன் லியோனார்ட் பிளேவட்னிக்
 

உக்ரைன் லியோனார்ட் பிளேவட்னிக்

உக்ரைன் நாட்டில் பிறந்த லியோனார்ட் பிளேவட்னிக் தான் பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் ஆகத் திகழ்கிறார். எண்ணெய் மற்றும் மீடியா துறையில் வர்த்தகம் செய்யும்

லியோனார்ட் பிளேவட்னிக் 2020ல் மட்டும் சுமார் 7.2 பில்லியன் பவுண்ட் சம்பாதித்துள்ளார்.

32.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

32.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

இதன் மூலம் லியோனார்ட் பிளேவட்னிக்-ன் மொத்த சொத்து மதிப்பு 23 பில்லியன் பவுண்ட் அல்லது 32.6 பில்லியன் டாலராக உயர்ந்து பிரிட்டன் நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: britain billionaires
English summary

UK gets 24 new billionaires in the pandemic year, the biggest rise in 33 yrs

UK gets 24 new billionaires in the pandemic year, the biggest rise in 33 yrs
Story first published: Saturday, May 22, 2021, 19:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X