பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம்.. முதல் இடம் யாருக்கு தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு வேகமாக அதிகரித்து வருகிறதோ அதே அளவிற்குப் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

பிரிட்டன் நாட்டின் சன்டே டைம்ஸ் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கையும், சொத்து மதிப்பும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

முதல் இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா..?

பெட்ரோல் விலை குறைப்பு முதல் சுங்க வரி வரை.. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கியமான விஷயங்கள்..! பெட்ரோல் விலை குறைப்பு முதல் சுங்க வரி வரை.. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கியமான விஷயங்கள்..!

ஹிந்துஜா பிரதர்ஸ்

ஹிந்துஜா பிரதர்ஸ்

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர்களான ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஹிந்துஜா சன்டே டைம்ஸ் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் 28.472 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

11 பில்லியன் பவுண்டு உயர்வு

11 பில்லியன் பவுண்டு உயர்வு

தொழில்துறை மற்றும் நிதியியல் சேவை துறையில் இருக்கும் ஹிந்துஜா குடும்பம் கடந்த ஆண்டுப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஹிந்துஜா குடும்பத்தின் சொத்து மதிப்பு 11 பில்லியன் பவுண்டு அதிகரித்தன் மூலம் முதலிடத்தைப் படித்துள்ளனர்.

சன்டே டைம்ஸ்

சன்டே டைம்ஸ்

சன்டே டைம்ஸ் தனது பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 250 பேரை பட்டியலிட்டு உள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் இருக்கும் நிலையில் டாப் 10 பட்டியலில் ஹிந்துஜா குடும்பத்துடன் சேர்த்து 2 பேர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி நிவாஸ் மிட்டல்

லட்சுமி நிவாஸ் மிட்டல்

ஸ்டீல் தொழிலதிபர் லட்சுமி நிவாஸ் மிட்டல் 17 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டுப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் லட்சுமி மிட்டல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அனில் அகர்வால்

அனில் அகர்வால்

வேதாந்தா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அனில் அகர்வால் 9.2 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 16வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு இவர் பட்டியலில் 15வது இடம் பிடித்தார்.

டாப் 10 இந்தியர்கள்

டாப் 10 இந்தியர்கள்

இவர்களைத் தொடர்ந்து 4.73 பில்லியன் பவுண்டு உடன் மோஷின் & சுபேர் ஈசா 39வது இடத்தையும், 4.37 பில்லியன் பவுண்டு உடன் ஸ்ரீ பிரகாஷ் லோஹியா 41வது இடத்தையும், 2.54 பில்லியன் பவுண்டு உடன் சைமன், பாபி, ராபின் அரோரா சகோதரர்கள் 69வது இடத்தையும், 1.82 பில்லியன் பவுண்டு உடன் ஜஸ்மிந்தர் சிங் குடும்பம் 99வது இடத்தையும், 1.65 பில்லியன் பவுண்டு உடன் சாகெத் பர்மன் 110வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கிரண் மஜும்தார்-ஷா

கிரண் மஜும்தார்-ஷா

பெண் கோடீஸ்வரர்களில், பயோகான் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் 2.5 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் பட்டியலில் 75வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல்

ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல்

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அவர் 56 வது இடத்தைப் பிடித்தார். கிரண் மஜும்தார்-ஷா சமீபத்தில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 913 வது இடத்தைப் பிடித்திருந்தது முக்கியமானதாகும்.

கீதா குப்தா

கீதா குப்தா

எலக்ட்ரிக் மோட்டார் வாகன நிறுவனமான ஃபிஸ்கர் இன்க் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும் தலைமைச் செயல் அதிகாரியுமான கீதா குப்தா-ஃபிஸ்கர், 1.20 பில்லியன் பவுண்ட் சொத்து மதிப்புடன் 149வது இடத்தில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK Rich List 2022: Hinduja brothers took first place again; 16 Indians listed

UK Rich List 2022: Hindujas took first place again; 16 Indians listed பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம்.. முதல் இடம் யாருக்கு தெரியுமா..?!
Story first published: Saturday, May 21, 2022, 19:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X