ரூ.3, 000 கோடி சம்பளம்.. சாதனையை முறியடித்த பிரிட்டன் சிங்கப்பெண்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பெட்365 என்கிற சூதாட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான டெனீஸ் கோட்ஸ் தனதுக்குத் தானே 3000 கோடி ரூபாய் சம்பளத்தைக் கொடுத்துக்கொண்டு தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

 

பிரிட்டன் நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான நிறுவனங்களில் யாரும் பெற்றிடாத சம்பளத்தை டெனீஸ் கோட்ஸ் பெறுகிறார். இது பிரிட்டன் நாட்டில் மிகப்பெரிய சாதனையாக விளங்குகிறது.

3000 கோடி ரூபாய்

3000 கோடி ரூபாய்

டெனீஸ் கோட்ஸ் கடந்த வருடம் (2018) தனது அடிப்படை சம்பளமாக 323 மில்லியன் பவுண்ட் அதாவது ஒரு நாளுக்கு 1.3 மில்லியன் பவுண்ட் எனக் கணக்கீட்டில் சம்பளத்தைப் பெற்றுள்ளார். இது மட்டும் அல்லாமல் டெனீஸ் கோட்ஸ் வைத்திருக்கும் பங்குகளுக்கு நிர்வாகம் ஒவ்வொரு வருடம் ஈவுத்தொகை கொடுத்திறது. இதையும் சேர்த்துத் தான் கடந்த வருடத்திற்கு மொத்தமாக 422 மில்லியன் பவுண்ட் தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

2017ஆம் ஆண்டில் இவருடைய அடிப்படை சம்பளம் 276 மில்லியன் பவுண்டாக இருந்தது.

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

422 மில்லியன் பவுண்ட் என்பது பிரிட்டன் நாட்டு ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விடவும் 9, 500 மடங்கு அதிகமாகவும். இதேபோல் பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெறும் சம்பளத்தை விடவும் 2000 மடங்கு அதிகச் சம்பளத்தைப் பெறுகிறார் இந்த 52 வயதாகும் Denise Coates.

50 சதவீத பங்குகள்
 

50 சதவீத பங்குகள்

Denise Coates தனது பெட்365 நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வைத்துள்ளார், இதனால் நிர்வாகத்தில் அவரது ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே தனக்கான சம்பளத்தைத் தானே இஷ்டம் போல் நிர்ணயம் செய்து ஒவ்வொரு வருடமும் சாதனை படைத்து வருகிறார்.

கடந்த 3 வருடத்தில் மட்டும் டெனீஸ் கோட்ஸ் சுமார் 817 மில்லியன் பவுண்ட் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

நிறுவன ஊழியர்கள்

நிறுவன ஊழியர்கள்

பெட்365 நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சராசரி சம்பளம் 66, 500 பவுண்டாக இருக்கும் நிலையில் டெனீஸ் கோட்ஸ் சுமார் 422 மில்லியன் பவுண்ட் சம்பளமாகப் பெறுகிறார்.

டெனீஸ் கோட்ஸ் பிரிட்டன் நாட்டின் 19வது மிகப்பெரிய பணக்காரர், மேலும் இவருடைய மொத்த சம்பளம் 6.9 பில்லியன் பவுண்ட் என்பது முக்கியமான தகவல்.

93 சதவீத பங்குகள்

93 சதவீத பங்குகள்

பெட்365 நிறுவனத்தை முழுவதும் டெனீஸ் கோட்ஸ் அவரின் குடும்பம் தான் நிர்வாகம் செய்கிறது. இவரின் சகோதரர் ஜான் இந்நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி, இவரது கணவர் ரிச்சர்ட் ஸ்மித் நிறுவனத்தின் தலைவர், தந்தை நிர்வாகக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார்.

டெனீஸ் கோட்ஸ் குடும்பம் மட்டுமே இந்நிறுவனத்தின் 93 சதவீத பங்குகளை நிர்வாகம் செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK's richest woman pays herself ₹3, 000 crore in 2018, breaks record

The UK's richest woman Denise Coates, the Founder and co-CEO of gambling company Bet365, paid herself $422 million (₹3, 000 crore) in salary and dividends last year. This is the highest amount paid to the boss of a British company and breaks the previous record of $347 million set by Coates a year earlier. The 52-year-old owns about half of Bet365.
Story first published: Friday, December 20, 2019, 10:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X