உலகமே ரெசசனை காணலாம்.. ஆனா சீனா இந்தியாவுக்கு மட்டும் சற்று தளர்வு.. சொல்வது UNCTAD..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் உலக நாடுகள் பெரிதும் ஸ்தம்பித்து போயுள்ளன. ஒரு புறம் வைரஸினால் மக்கள் அவதிப்படும் நிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

பாதிப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில், உலக பொருளாதாரமும் படு வீழ்ச்சி கண்டு வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் சமீபத்திய ஐக்கிய நாடுகள் வர்த்தக அறிக்கையில், உலகப் பொருளாதாரம் டிரில்லியன் டாலர் அளவில் நஷ்டத்தினை கண்டு வருகின்றது.

ரெசசன் கன்பார்ம்

ரெசசன் கன்பார்ம்

கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் உலக வருவாய் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் ஐ நா வர்த்தக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் உலகப் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவெனில், இந்தியா சீனாவினைத் தவிர வளர்ந்து வரும் நாடுகளுக்கு கடுமையான சிக்கலை கொடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சனையை எதிர்கொள்ளலாம்

மக்கள் பிரச்சனையை எதிர்கொள்ளலாம்

கொரோனா தொற்றின் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடியினால், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வளரும் நாடுகளில் சேதத்தினை எதிர்கொள்ளலாம் என்றும் கணித்துள்ளது. இவ்வாறு பொருளார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இந்த நாடுகளுக்கு 2.5 டிரில்லியன் அமெரிக்கா டாலர் மீட்பு நிதி தேவைப்படும் என்றும் ஐ நா வர்த்தக அறிக்கை கணித்துள்ளது.

அன்னிய முதலீடு
 

அன்னிய முதலீடு

மேலும் வளரும் நாடுகளுகளில், அதிக பொருட்கள் நிறைந்த ஏற்றுமதி நாடுகள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளி நாட்டு முதலீடுகளில் 2 டிரில்லியன் டாலர் முதல் 3 டிரில்லியன் டாலர் வரை வீழ்ச்சியினை எதிர்கொள்ளக் கூடும் என்றும் கூறியுள்ளது. இதன் மூலமும் வளரும் நாடுகள் சற்று பிரச்சனையை எதிர்கொள்ளக் கூடும்.

சீனா டாப்

சீனா டாப்

சீனா பற்றி கூறிய ஐநா வர்த்தக அறிக்கை, ஜி 20 நாடுகளில் சீனா தற்போது பல பொருளாதார முன்னேற்ற நடவடிக்கையினை எடுத்து வருகிறது. பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும் பல ரீலிப் பேக்கேஜ்களையும் கொடுத்து வருகிறது. இது கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு சற்று ஆறுதலைக் கொடுக்கும். அது உடல், பொருளாதாரம், உளவியல் ரீதியாகவும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தியா சீனாவுக்கு விதிவிலக்கு

இந்தியா சீனாவுக்கு விதிவிலக்கு

கொரோனா கோரப் பிடியில் சிக்கியுள்ள உலகப் பொருளாதாரம் நிச்சயம் மந்த நிலையை சந்திக்கலாம், டிரில்லியன் கணக்கான வருவாயினை இழக்கலாம். கோடி கணக்கில் நஷ்டத்தினை காணலாம். என்றெல்லாம் கூறும் ஐ நா அறிக்கை இது வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய பிரச்சனையாகவே அமையும் என்று கூறியுள்ளது. எனினும் இதில் சீனா, இந்தியா நாடுகள் மட்டும் சற்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விளக்கம் இல்லை

விளக்கம் இல்லை

எனினும் ஏன் சீனா இந்தியாவுக்கு மட்டும் இதில் இருந்து சற்று தளர்வு என்று எந்த விரிவான விளக்கமும் கொடுக்கப்படவில்லை. மோசடைந்து வரும் உலகளாவிய நிலைமைகளைப் பொறுத்தவரை, நிதி மற்றும் அன்னிய செலவாணி தடைகள் இந்த ஆண்டின் இறுதியில் சற்று கடினமானதாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நிதி சுனாமி வரலாம்

நிதி சுனாமி வரலாம்

இதுமட்டும் அல்ல, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் 2 -3 டிரில்லியன் டாலர் இடைவெளியை எதிர்கொள்ளக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நிதி சுனாமி மக்களை வாட்டி வதைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படியோ கொரோனாவினை விட பொருளதார சீர்குலைவினால் இன்னும் மக்கள் என்னவெல்லாம் கஷ்டபட வேண்டியுள்ளதோ தெரியவில்லை..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UNCTAD report said world economy will go into recession with likely exception of india, china

UNCTAD recent report said World economy will go into recession this year with a predicted heavy loss of global income in trillions of dollars. This will spell serious trouble for developing countries, but its likely exception of China the possible exception of India.
Story first published: Friday, April 3, 2020, 12:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X