மறக்கக்கூடாத ரகசியங்கள்.. நிதி சம்பந்தமான விவரங்களை எப்படி பாதுகாப்பது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக அந்த காலத்தில் எல்லாம் வயதானவர்கள், தாங்கள் சிறுக சிறுக சேமித்த தொகையினை சிறு சேமிப்பாகவோ அல்லது மற்றவர்களின் வட்டிக்கு கடன் கொடுத்தும் வைப்பார்கள்.

 

இது உறவினர்களுக்கு தெரிந்தால் அதற்கு பிரச்சனை ஏற்படுமோ என்ற பயம் இருக்கும். இதனால் யாரிமுடம் சொல்லமாட்டார்கள். தங்களின் கஷ்டமான காலகட்டத்தில் அதனை சொல்வார்கள். சிலர் சொல்லாமல் விட்டுவிடுவார்கள்.

ஆனால் கடைசியில் அந்த தொகையானது யாருக்கும் பயன்படாமலேயே போய்விடும். இன்னும் சிலர் வயதானவர்கள் இறந்த பிறகு அவர்களது அறையில் எங்கேனும் காசு பணம் எல்லாம் இருக்கும்.

தடை எதிரொலிகளை தாண்டி தொடரும் கிரிப்டோ முதலீடுகள்.. இந்திய முதலீட்டாளர்கள் அதிரடி..!

முக்கிய விவரங்கள்

முக்கிய விவரங்கள்

ஆனால் இன்றைய காலகட்டம் அப்படி இல்லை. பெரும்பாலும் வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் ஆகவும், அஞ்சலங்களில் வைப்பு நிதியாகவும், இன்னும் பல வகைகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால் நெருங்கிய உறவினர்களுக்கு தெரிந்தால், அதனை எடுத்து தர கேட்பார்களோ என்று இறுதி வரையில், யாரும் கூறுவதில்லை. இது மட்டும் அல்ல, இப்படி நிதி சார்ந்த முக்கிய ஆவணங்களை யாரும் பாதுகாப்பதில்லை. ஆனால் இது போன்ற பல விஷயங்கள் அடுத்தவரிடம் தெரியவிக்க வேண்டி உள்ளன.

நிதி சார்ந்த ஆவணங்கள்

நிதி சார்ந்த ஆவணங்கள்

இன்றைய காலகட்டத்தில் அதனை திரும்ப தெரிந்து கொள்ளலாம் என்றாலும், அதற்காக அலைச்சல் உண்டு. குறிப்பாக நிதி சார்ந்த ஆவணங்களை பத்திரப்படுத்த வேண்டும். இதை வீட்டிலுள்ள தீப்பிடிக்காத பெட்டியில் வைக்கலாம். அதற்கான சாவி உங்களிடமும் உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமும் இருக்க வேண்டும். அதோடு நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு முதலீட்டின் ஆவணங்களும் உங்களது சிஸ்டமிலோ அல்லது பேப்பர் ஆவணங்களாக வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

இன்சூரன்ஸ் & ஏடிஎம் விவரங்கள்
 

இன்சூரன்ஸ் & ஏடிஎம் விவரங்கள்

அதோடு ஏடிஎம் பாஸ்வேர்டு, இன்சூரன்ஸ் திட்டங்கள், குறிப்பாக மெடிக்கல் இன்சூரன்ஸ், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற நிதி ஆவணங்களின் விவரங்களையும், பேப்பர்களாக ஜெராக்ஸ் எடுத்தும், அல்லது பிடிஎஃப்களாக மாற்றி உங்களது கம்ப்யூட்டரிலோ அல்லது பென் டிரைவிலோ சேமிக்கலாம். அதோடு இன்சூரன்ஸ் பற்றிய விவரங்கள், பிரீமியம், போனஸ் தேதிகள், பங்குகள் வாங்கியிருந்தால், அதனை பற்றிய ஆவணங்கள் அல்லது விவரங்களை சேமிக்க வேண்டும்.

குடும்பத்தில் யாருக்கேனும் தெரிவது அவசியம்

குடும்பத்தில் யாருக்கேனும் தெரிவது அவசியம்

அதோடு கடன் பற்றிய விவரங்களையும் முறைப்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பின் நம்பர்களையும் பாஸ்வேர்டுகளையும் அடிக்கடி மாற்றும்படி சில வங்கிகள் கேட்டுக் கொள்கின்றன. எனவே குடும்ப உறுப்பினரிடம் அதை பகிர்ந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆக ஒரு ஃபைலை உருவாக்கி அதை உங்களுடைய பார்ட்னர் அல்லது பெற்றோர்களுடன் பகிர்ந்துகொண்டு, அதே ஃபைலில் உங்களுடைய பாஸ்வேர்டுகளை அப்டேட் செய்வது சிறந்த வழியாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் எந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிவதில்லை. ஆக நமக்காக இல்லாவிட்டாலும் நம் குடும்பத்தினருக்காக இதனை பத்திரப்படுத்துவது அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Unforgettable financial things in your life: how to save that?

Unforgettable financial things.. Unforgettable financial things in your life: how to save that?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X