மத்திய அரசின் கிஸ்ஸான் திட்டத்திற்கு 20 சதவீதம் குறைவான நிதி: பட்ஜெட் 2020

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல புதிய வர்த்தகமும் டெக்னாலஜி வந்தாலும் விவசாயம் தான் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இப்படியிருக்கையில் தற்போது மத்திய அரசு கொண்டு வரும் பல திட்டங்கள் விவசாய நிலங்களில் தான் செய்யப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்கப் பல இடங்களில் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இது இப்படியிருக்க மத்திய அரசு விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு 2020-21 ஆம் நிதியாண்டிற்கு முன்பு ஒதுக்கப்பட்ட அளவை விடவும் 20 சதவீதம் குறைவான தொகை இருந்தால் போதும் என மத்திய விவசாயத் துறை தெரிவித்துள்ளது.

 பிஎம் கிஸ்ஸான் திட்டம்
 

பிஎம் கிஸ்ஸான் திட்டம்

விவசாயிகளின் வாழ்க்கையைக் காக்கும் வகையில் வேளாண்மை துறை அமைச்சகம் மூலம் இந்திய விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது. சில மாநிலங்கள் இத்திட்டத்திற்கு விவசாயிகள் இணைக்கும் பணிகளில் தாமதம் காட்டி வருகிறது. மேலும் பல லட்சம் விவசாயிகள் ஆதார் வெரிபிகேஷன் செய்யாமல் இருக்கும் காரணத்தால் 6000 ரூபாய் பணத்தை முழுமையான விநியோகம் செய்ய முடியாமல் தவிக்கிறது வேளாண்மைத் துறை அமைச்சகம்

20 சதவீதம் குறைவான நிதி

20 சதவீதம் குறைவான நிதி

இதன் அடிப்படையில் 2020-21ஆம் நிதியாண்டில் மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 75,000 கோடி ரூபாய் நிதியில் 20 சதவீதம் குறைவான நிதி அதாவது 60000 கோடி ரூபாய் போதும் என வேளாண்மைத் துறை நிதியமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

பிராதான் மந்திரி கிஸ்ஸான் சம்மான் நிதி யோஜனா திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு வருடத்திற்கு 75,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது மாநிலங்களின் தாமதப் பணிகளாலும், ஆதார் வெரிபிகேஷன் காரணமாகவும் இதை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் உள்ளது.

சொல்லப்போனால் 2019-20ஆம் நிதியாண்டில் வேளாண்மைத் துறை வெறும் 44,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை மட்டுமே விநியோகம் செய்துள்ளது.

14.5 கோடி விவசாயிகள்
 

14.5 கோடி விவசாயிகள்

இத்திட்டத்தால் சுமார் 14.5 கோடி விவசாயிகள் பயன்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9.5 கோடி விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு, 7.5 கோடி விவசாயிகள் மட்டுமே ஆதார் வெரிபிகேஷ்ன் செய்துள்ளனர்.

பட்ஜெட் 2020

பட்ஜெட் 2020

இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்-க்கு சுமார் 20000 கோடி ரூபாய் நிதி கூடுதலாகக் கிடைக்க உள்ளது. இதை எப்படி நிதியமைச்சர் பயன்படுத்தப்போகிறார்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Union Budget 2020: PM-KISAN fund allocation may be trimmed by 20%

The agriculture ministry has sought 20% less funds for the PM-KISAN scheme — that pays farmers Rs 6,000 a year — for 2020-21 because some states have been slow in identifying beneficiaries, and many existing recipients are yet to be Aadhaar verified. The ministry has sought Rs 60,000 crore for the Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana for the next fiscal while the government had allocated Rs 75,000 crore for this year.
Story first published: Friday, January 31, 2020, 8:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more