பாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் நகர்புற வேலையின்மை விகிதம் கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 8.4% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 1.3% வளர்ச்சி கண்டுள்ளது.

இதுவே ஜூன் காலாண்டில் 8.9% ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தரவின் படி, கடந்த 2019வுடன் முடிவடைந்த காலாண்டிற்கான வேலைவாய்ப்பு குறிகாட்டிகளை வெளியிட்டது. இது கடந்த 2017 - 2018ம் ஆண்டில் தொடக்கப்பட்ட புதிய கால தொழிலாளர் படை கணக்கெடுப்பின் அடிப்படையிலான (PLFS) தரவுகள், நகர்புறங்களுக்கு மட்டுமே மதிப்பீடுகளை வழங்குகிறது.

பாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..!

 

கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில், நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.4% சரிவு கண்டுள்ளது. இந்த விகிதத்தில் 15 - 29 வயதுடையவர்காள் 20.6% ஆகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர்களுக்கு 8.3% ஆகவும் இருந்துள்ளது. இதே தொழிலாளர் பங்களிப்பு விகிதம் (LFPR) 36.8% ஆகவும் இருந்துள்ளது. இதில் 56.6% ஆண்களும், பெண்கள் 16%மும் பங்களித்துள்ளனர். இதே கடந்த ஜூலை - செப்டம்பர் 2018ம் காலாண்டில் இந்த LFPR 36.1% ஆகவும் இருந்துள்ளது.

செப்டம்பர் 2018ல் வேலையின்மை விகிதம் 9.7% இருந்துள்ளது. நடப்பு ஆண்டின் ஜூன் காலாண்டில் இந்த வேலையின்மை விகிதம் 8.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. நகர்புறங்களில் 2019 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் 49.6% பேர் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது வழக்கமான கூலி தொழிலாளர்கள்.

இதில் 38.3% பேர் சுயதொழில் செய்பவர்கள், 12.1% பேர் சாதாரண தொழிலாளர்கள். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் 2019 காலாண்டுடன் ஒப்பிடும்போது, சுயதொழில் செய்பவர்களின் பங்கு 1.6% அதிகரித்துள்ளது. இதுவே வழக்கமான ஊதியம் மற்றும் சாதாரண தொழிலாளர்களின் பங்கு முறையே 0.8% மற்றும் 1.6% குறைந்துள்ளது.

இதே கடந்த 2018வுடன் ஒப்பிடும்போது, சுயதொழில் மற்றும் வழக்கமான கூலித் தொழிலாளர்கள் 0.3% மற்றும் 1% ஆக அதிகரித்துள்ளது. எனினும் சாதாரணமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 4.7% குறைந்துள்ளது.

இதில் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய நகர்புற தொழிலாளர்களில் 62% பேர் மூன்றாம் நிலைத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதே 32.8% பேர் இரண்டாம் நிலைத் துறையிலும், 5.2% விவசாயத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜூன் 2019ம் காலாண்டுடன் ஒப்பிடும்போது விவசாயத்துறையில் வேலை விகிதம் 6.1% அதிகமாகவும், இரண்டாம் நிலை துறையில் பணிபுரிபவர்களின் பங்கு 1.2% குறைவாகவும் இருந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Urban unemployment fell to 8.4% in September quarter 2019

Urban unemployment, unemployment rate, unemployment rate in india, NSO data, employment rate, national statistics office, urban unemployment in india, urban unemployment rate in india, unemployment rate in india. unemployment rate in india in 2020, unemployment news, unemployment news in tamil, நகர்புற வேலையின்மை விகிதம், வேலையின்மை விகிதம், கிராமப்புற வேலையின்மை விகிதம், வேலையின்மை விகிதம், வேலையின்மை, வேலையின்மை சரிவு 8.4%, தேசிய புள்ளிவிவர தரவு, இந்தியாவில் வேலையின்மை விகிதம்
Story first published: Tuesday, October 20, 2020, 14:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X