இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்... அமெரிக்க நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மீண்டும் அன்னிய நேரடி முதலீடுகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சமீபகாலமாக அமெரிக்காவில் இருந்து முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

 

இந்தியா தற்போதுள்ள இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீள, இது மிக அவசியமாகும்.

ஒரு புறம் அன்னிய நேரடி விதிகள் கட்டுப்பாட்டால் சீனாவில் இருந்து முதலீடுகள் குறையலாம் என்று கூறப்பட்டாலும், மறுபுறம் அமெரிக்காவில் இருந்து முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

பவல் சொன்ன ஒத்த வார்த்தை.. பொருளாதாரத்திற்கு சாதகம் தான்.. ஆனால் தங்கம்?

இந்தியாவில் முதலீடு

இந்தியாவில் முதலீடு

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Air Products and Chemicals நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 5 - 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது இந்தியாவின் நிலக்கரி வாய்வாக்கத்தில் (coal gasification) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. நிலக்கரி வாயுவாக்கலில் உலகத் தலைவரான Air Products and Chemicals, இந்தியாவில் பல உலகத்தரம் நிலக்கரி வாய்வாக்கங்களை உருவாக்க முடியும்.

இந்தியாவில் திட்டம்

இந்தியாவில் திட்டம்

அதோடு இதன் மூலம் கோல் இந்தியா போன்ற சப்ளையர்களோடு இணைந்து தொழிதுறையினருக்கு வாயுக்களை வழங்க உதவும். ஆரம்பத்தில் இந்த நிறுவனம் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தோனேசியாவில் Air Products நிறுவனம் நிறுவியதை போலவே, இந்தியாவிலும் நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் Air Productsம் மூத்த தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரிச்சர்ட் பூகாக் தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகப்பெரிய சந்தை
 

இந்தியா மிகப்பெரிய சந்தை

Air Products உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 750க்கும் மேற்பட்ட உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. 1,800 மைல் தொழில்துறை எரிவாயு இணைப்புகளையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு பெரும் நிறுவனத்திற்கு, வளர்ந்து வரும் இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தைதான். அதோடு எரிசக்தி பாதுகாப்புக்காக, இந்தியா, ஒரு மிகப்பெரிய வழியை திறந்து வருவதால், இந்தியா Air Productsக்கு மிகப்பெரிய சந்தையாகவே பார்க்கப்படுகிறது.

இறக்குமதியை குறைக்க முடியும்

இறக்குமதியை குறைக்க முடியும்

இந்தியா உற்பத்திக்கான வளர்ந்து வரும் சந்தையாகும். இதான் வளர்ந்து வரும் சந்தை நுகர்வினை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் இங்கே உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதி குறையும். இதற்கிடையில் சமீபத்தியில் வெளியான அறிக்கையில், நிலக்கரி சுரங்கத்தில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 41 சுரங்கங்களைத் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது கவனிக்கதக்கது.

நிலக்கரி இலக்கு

நிலக்கரி இலக்கு

மேலும் எரிசக்தி துறையில் இந்தியா தற்சார்பு பெற இன்று ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக, நாட்டின் நிலக்கரித் துறை ஒரு வலையில் சிக்கியிருந்தது. போட்டிகள் இல்லாமல், வெளிப்படைத் தன்மையற்று சிக்கலான நிலையில் இருந்தது. 2014 க்குப் பிறகு, இந்த நிலைமையை மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் நிலக்கரித் துறை தற்போது வலுப்பெற்றுள்ளது. 2030 க்குள் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிபொருளாக்க இலக்கு வைத்துள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

நல்ல விஷயம் தானே

நல்ல விஷயம் தானே

அது மட்டும் அல்ல அதற்காக நான்கு திட்டங்கள் வைத்துள்ளதாகவும், இதற்காக 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிடுவதாகவும் மத்திய அரசு அப்போது கூறியிருந்தது. ஆக அதன் பகுதியாக கூட இந்த முதலீட்டு திட்டம் இருக்கலாம்.

எப்படியோங்க இந்த நெருக்கடியான நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு, இந்தியாவுக்கு சாதகமான அறிவிப்பு தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US company planning to invest thousands of crores in coal gasification in india

US based Air products and chemical is planning to invest 5 – 10 billion dollars over the next five years in coal gasification projects in india.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X