8 ஆண்டு குடியுரிமை மசோதா.. ஜோ பிடனின் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு சாதகமாகுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் விரைவில் புதிய குடியுரிமை சட்டத்தினை அறிமுகப்படுத்த, புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.

 

இது குறித்த புதிய குடியேற்ற மசோதாவை தனது நிர்வாகத்தின் முதல் நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் நாட்டில் சட்டபூர்வ அந்தஸ்து இல்லாமல் வாழும், 11 மில்லியன் மக்களுக்கு 8 ஆண்டுகளுக்கான குடியுரிமையை திட்டத்தினை வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் கடுமையான குடியேற்ற விதிகள்

டிரம்பின் கடுமையான குடியேற்ற விதிகள்

இது டொனால்டு டிரம்பின் கடுமையான குடியேற்ற விதிகளுக்கு எதிராக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தேர்தலை விட மிக பரபரப்பாக பேசப்பட்டது, அமெரிக்க தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட பரப்புரைகள் தான். அதில் இந்திய மக்கள் மனதில் மிக ஆழமாக பதிந்தது, ஜோ பிடன் தான் ஆட்சிக்கு வந்தால், கடுமையான ஹெச் 1பி விசா தடையை நீக்குவேன் என்று கூறியது தான்.

புதிய குடியுரிமை மசோதா பற்றிய விவாதம்

புதிய குடியுரிமை மசோதா பற்றிய விவாதம்

அதுமட்டும் அல்ல, டிரம்பின் குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவேன் என்றும் பிடன் கூறியதும் இதில் அடங்கும். இந்த விசா பிரச்சனையினால் உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான். ஆக அதன் படி நாளை நடக்கவிருக்கும் பதவியேற்பு விழாவுக்கு பிறகு, ஜோ பிடன் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

விரைவில் நடவடிக்கை
 

விரைவில் நடவடிக்கை

எனினும் பிடன் குடியுரிமை குறித்த தடையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிடன் தனது ஆரம்ப காலத்திலேயே குடியுரிமை பற்றிய திருத்தங்களை பற்றி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களுக்கு நல்லது?

இந்தியர்களுக்கு நல்லது?

அமெரிக்காவில் சுமார் 11 மில்லியன் வெளி நாட்டவர்கள் தங்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். ஆனால் இன்னும் பலர் கீரின் கார்டு பெறவில்லை. இதில் சுமார் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு மேலும் வேலை அடிப்படையிலான விசாக்கள், ஹெச்1பி விசா வழங்குவது அதிகரிக்கப்படும், க்ரீன் கார்டுகள் போன்றவை மூலம் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வழி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ இந்தியர்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US's new president Joe Biden plans to propose 8 year citizenship path for immigrants

US latest news updates.. US's new president Joe Biden plans to propose 8 year citizenship path for immigrants
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X