பங்கை வாங்கிக்கோங்க.. இல்லாட்டி பதவி கொடுங்க.. நெருக்கும் வள்ளி.. சிக்கலில் முருகப்பா குழுமம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த வாரம் முருகப்பா குழுமத்தில் தனக்கு பதவி வேண்டும் என்று, அந்த குழுமத்தின் மறைந்த தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தார்.

ஆனால் அவருக்கு பதவிகள் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கடந்த வாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது.

இதற்காக அவர் லண்டனில் இருந்து இந்திய வர திட்டமிட்டுள்ளதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

டிராய்க்கு எதிராக போர்கொடி தூக்கும் ஒளிப்பரப்பாளர்கள்.. காரணம் என்ன..!

பதவி பிரச்சனை
 

பதவி பிரச்சனை

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வரும் முருகப்பா குழுமத்தில், சுமார் 50,000 பேருக்கு மேல் பணி புரிந்து வருகிறார்கள். இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிறுவனத்தில் பதவிக்காக ஒரு பிரச்சனையா என்றால், உண்மைதான்.

பதவி இல்லை என மறுப்பு

பதவி இல்லை என மறுப்பு

முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம். முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் தான் பதவி மறுக்கப்பட்டதாகவும், இவர்களுக்கு அந்த நிறுவனத்தில் 8.15% பங்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பங்கு விற்பனை

பங்கு விற்பனை

வள்ளி அருணாச்சலத்திற்கு பதவி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அக்குழுமத்தில் உள்ள தங்களது 8.15% பங்குகளை அவரின் உறவினர்களுக்கு விற்பனை செய்துவிட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஒரு வேளை அவரது உறவினர்கள் இந்த பங்கு விற்பனைக்கு ஒத்துவரவில்லை எனில், பதவி வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை
 

சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை

பங்கு விற்பனை அல்லது பதவி என்று கோரிக்கை வைத்துள்ள வள்ளி, தற்போது மும்பையில் சட்ட ஆலோசகர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இவரது கோரிக்கைக்கு குடும்பத்தினரின் பதிலை கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்க உள்ளதாக வள்ளி அருணாச்சலம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னார் தலைவர்

முன்னார் தலைவர்

20 ஆண்டுகளாஜ குழுவின் தலைவராக இருந்த எம்வி முருகப்பன் 2017 செப்டம்பர் மாதம் காலமானார். இந்த நிலையில் அவரது பங்குகள் மனைவி வள்ளி முருகப்பன், மகள்களுக்காக அனைத்தையும் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. முருகப்பா குழுமம் ஐந்து தலைமுறைகளாக பரவியுள்ள நிலையில், பட்டியிலிடப்படாத நிறுவனத்தில் குடும்பம், 91% பங்குகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பதில் இல்லை

பதில் இல்லை

இது குறித்து வள்ளி அருணாச்சலம் கூறுகையில், அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த விஷயத்தை தாமதப்படுத்தி வருகிறார்கள். எங்கள் கோரிக்கைக்கு எந்தவொரு திட்டவட்டமான பதிலும் கொடுக்கவில்லை. பல முறை இது பற்றிக் கேட்டுக் கொண்டேன். ஆனால் இது கேளாத காதில் விழுந்துள்ளது. மூன்றாவது தலைமுறையில் ஒவ்வொரு கிளைக்கும் அம்பாடி குழுவில் பிரதி நிதித்துவம் கிடைத்துள்ளது. ஆனால் எங்களைத் தவிர என்றும் அருணாச்சலம் பிசினஸ் ஸ்டுடேவிடம் கூறியுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆண் வாரிசுகள் மட்டுமே ஆதிக்கம்

ஆண் வாரிசுகள் மட்டுமே ஆதிக்கம்

சமீபத்தில் வள்ளி அருணாச்சலம் பத்திரிக்கைகளுக்கு அளித்த அறிக்கையில், இந்த குழுவில் ஆண் வாரிசுகள் மட்டுமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக புகார் கூறியிருந்தார். மேலும் ஐந்து தலைமுறைகளாகவே ஆண் வாரிசுகளை மட்டுமே இந்த குழுமம் காண்பித்துள்ளது என்றும் கூறியிருந்தது கவனிக்கதக்கது.

அனுபவமும் தகுதியும் உண்டு

அனுபவமும் தகுதியும் உண்டு

மேலும் வள்ளி அருணாச்சலம் முன்னதாக ஓர் அறிக்கையில், நானும் என் சகோதரியும் நன்கு படித்தவர்கள் தான். எங்களுக்கு தொழிலில் பல வருட அனுபவம் உள்ளது. எங்களது திறமைகளை நாங்கள் செயல்படுத்தவோ அல்லது குடும்ப வணிகத்திற்கு பொருந்தாது என்று கூறவோ எந்த காரணமும் இல்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Valli arunachalam wants to exits the holding company, if they don’t agree she wants a board position

Valli arunachalam wants to exits the holding company, if they don’t agree she wants a board position. And she consulted legal advisers in Mumbai, she said will take action only after the family responses to her proposal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more