இந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூத்துக்குடி ஸ்டர்லைட் தொழிற்சாலை மூலம் உலகம் முழுவதும் பிரபலமான வேதாந்தா நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து மொத்தமாக வெளியேறி தனியார் நிறுவனமாக இயங்க உள்ளது.

 

சுரங்க தொழிலில் முன்னோடியாக இருக்கும் வேதாந்தா நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், தனது யார் நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் நிர்வாகமும், அதன் தலைவருமான அனில் அகர்வால் ஆகியோர் வேதாந்தா நிறுவனத்தை இந்தியப் பங்குச்சந்தையில் வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதலீட்டாளர்களின் நிலை என்ன..??!!

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் 50.14 சதவீத பங்குகளைத் தனது தாய் நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட்-ம், மீதமுள்ள 49.46 சதவீத பங்குகளைப் பொதுச் சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் கையில் இருக்கிறது.

இந்நிலையில் பொதுச் சந்தையில் இருக்கும் 49.46 சதவீத பங்குகளைத் தாய் நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது.

விலை

விலை

இதன் படி வேதந்தா இந்த 49 சதவீத பங்குகளை ஒரு பங்கு 87.5 ரூபாய் மதிப்பில் வாங்குவதாக அறிவித்துள்ளது, திங்கட்கிழமை முடிவு விலையை ஒப்பிட்டால் தற்போது வேதாந்தா நிறுவன அறிவித்துள்ள விலை 9.9 சதவீதம் அதிகம். ஆனால் அதுவே செவ்வாய்க்கிழமை விலையை ஒப்பிட்டால் சற்றுக் குறைவு தான்.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வேதாந்தா நிறுவனப் பங்குகள் 89.30 ரூபாய் விலையில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய் நிறுவனம்
 

தாய் நிறுவனம்

இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் 49. 46 சதவீத பங்குகளைத் தாய் நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் தனியாகவோ அல்லது தனது கிளை நிறுவனங்களின் கூட்டணியில் வாங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவை இன்னும் வேதாந்தா அறிவிக்கவில்லை.

இதன் மூலம் பொதுச் சந்தையில் இருக்கும் அனைத்து பங்குகளும் வேதாந்தா குழும கட்டுப்பாட்டிற்குள் வர உள்ளது.

லண்டன் பங்குச்சந்தை

லண்டன் பங்குச்சந்தை

இதேபோல் வேதாந்தா குழுமத்தின் வடிவத்தை எளிமையாக்கும் முயற்சியாக ஜூலை 2018இல் லண்டன் பங்குச்சந்தையில் இருந்த வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தை மொத்தமாக வெளியேற்றுவதாக அறிவித்த அனில் அகர்வால், அக்டோபர் 2018இல் பொதுச் சந்தையில் இருந்த அனைத்து பங்குகளையும் கைப்பற்றி மொத்தமாக வெளியேறினார்.

தற்போது இந்திய பங்குச்சந்தையை விட்டும் வேதாந்தா நிறுவனம் வெளியேறுகிறது. லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vedanta to be delisted from Indian bourses: Anil Agarwal

Mining major Vedanta is set to take the company private. In a late evening stock exchange filing, billionaire Anil Agarwal’s company announced the decision by its parent Vedanta Resources. Promoter holding in the company stood at 50.14 per cent, while public shareholders held 49.46 per cent as per March-end shareholding data.
Story first published: Wednesday, May 13, 2020, 6:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X