என்னை விட்டு விடுங்கள்.. ரூ.13,960 கோடி தரத் தயார்.. விஜய் மல்லையாவின் ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் மல்லையாவை பற்றி அறிந்திருக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனெனில் அவர் லண்டனுக்கு தப்பி சென்ற நேரத்தில், அந்த சமயத்தில் கொரோனாவை விட மீடியாக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒருவர்.

Vijay mallaya ready to pay Rs.13,690 crore for banks
 

ஏனெனில் இந்திய வங்கிகளிடம் கடனை வாங்கி விட்டு நாடு விட்டு தப்பி சென்றவர்.

இதனால் அவரை இந்தியா அழைத்து வரும் பொருட்டு வங்கிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

லண்டனில் தஞ்சம்

லண்டனில் தஞ்சம்

இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடனை பெற்று விட்டு, அதனை கட்டாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் தலைவர் விஜய் மல்லையா, இந்தியாவில் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், லண்டன் அரசிடம் தஞ்சமடைந்து அங்கு வாழ்ந்து வருவது அறிந்த விஷயமே.

யாரிந்த மல்லையா?

யாரிந்த மல்லையா?

சரி யார் இந்த விஜய் மல்லையா? கொல்கத்தாவை சேர்ந்த இவர் முன்னாள் ராஜ்ய சபா மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் ஆவர். இவர் மதுபானம் மற்றும் விமானத் தொழில் முன்னணியில் இருந்தவர். யுனைடெட் ப்ரூவெரீஷ் க்ரூப்ஸ் மற்றும் கிங்க்பிஷ்ஸர் விமான நிறுவனத்தின் தலைவரான இவர், விளையாட்டு துறைகளிலும் முதலீடு செய்து வந்தவர்.

என்ன தான் பிரச்சனை
 

என்ன தான் பிரச்சனை

இந்திய அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளி நாட்டுக்கு தப்பி போகலாம் என்று இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்தவரே விஜய் மல்லையாதான். சுமார் 9000 கோடி ரூபாய் கடனை வாங்கி விட்டு, திருப்பி கட்டச் சொன்னால் கட்ட முடியாமல், நான் கடன் வாங்கவில்லை, கிங்க் பிஸ்ஷர் நிறுவனம் கடன் வாங்கியது என்று கூறியவர். இப்படி எப்போதும் அவரை பற்றிய பரப்பரப்பான செய்திகள் தான் வெளி வந்த வண்ணமே உள்ளன.

சில சட்ட சிக்கல்கள்

சில சட்ட சிக்கல்கள்

இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும் அதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதால் இந்தியாக்கு அழைத்து வர முடியாத நிலையே உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இது குறித்தான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா தரப்பில் காரணமே இன்றி நாள் கடத்தி வருகின்றது.

பணத்தினை வாங்கிக் கொடுங்கள்

பணத்தினை வாங்கிக் கொடுங்கள்

அவரது மதுபான நிறுவன சொத்துகள், அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அந்த சொத்துகள் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவதாக அவர் கூறுவதை நிச்சயம் ஏற்க முடியாது. அப்படி நினைப்பவர் இந்தியா வரும் முன் பணத்தினை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யட்டும். மல்லையா மீது திவால் நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடனை திரும்ப செலுத்துவரா?

கடனை திரும்ப செலுத்துவரா?

எனினும் விஜய் மல்லையா தரப்பில் 13,960 கோடி ரூபாய் கடனை செலுத்த தயாராக இருப்பதாக, அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உண்மையில் வங்கிகள் சொல்வது போல், இதுவரை விஜய் மல்லையாவே கூட பல முறை நான் 100% கடன் களை திரும்ப செலுத்த தயாராக உள்ளேன் என்றே தனது டிவிட்டல் பதிவில் கூட கூறியுள்ளார். ஆனால் அதனை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்திருந்தால் இந்த பிரச்சனையே இவ்வளவு பெரியதாகி இருக்காதே. வங்கிகள் சொல்வது போல் இவர் வாயால் வடை சுடுகிறாரோ?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay mallaya ready to pay Rs.13,690 crore for banks

Vijay mallaya debt issue.. Vijay mallaya ready to pay Rs.13,690 crore for banks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X