கிங்பிஷர் ஹவுஸ் ஒருவழியா வித்தாச்சு.. சொன்னது ரூ.150 கோடி விற்றது ரூ.52 கோடி..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் விஜய் மல்லையா வாழ்க்கையைப் பார்த்துப் பொறாமைப்படாதவர்களே இல்லை, எப்போதும் ஆடம்பரத்தின் உச்ச நிலையில் வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் இன்று அனைவரும் பாவம் என்று பார்க்கும் நிலைக்கு வீட்டிற்கும், நீதிமன்றத்திற்கும் நடையாய் நடந்து வருகிறார்.

 

விஜய் மல்லையா தலைமையில் இயங்கி வந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு நாட்டைவிட்டு எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில் விஜய் மல்லையா கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள் அவரின் சொத்துக்களைக் கைப்பற்றி விற்பனை செய்து வருகிறது.

தங்கம் விலை தொடர் சரிவு.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

கிங்பிஷர் ஏர்லையன்ஸ்-ன் கிங்பிஷர் ஹவுஸ்

கிங்பிஷர் ஏர்லையன்ஸ்-ன் கிங்பிஷர் ஹவுஸ்

கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் தலைமையிடமாக இயங்கி வந்த கிங்பிஷர் ஹவுஸ் கட்டிடத்தைச் சுமார் 8 முறை ஏலம் விட்டு வங்கி நிர்வாகம் தோல்வி அடைந்த நிலையில், தற்போது 9வது முயற்சியில் 3ல் ஒரு பங்கு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

2016 முதல் முயற்சி

2016 முதல் முயற்சி

கிங்பிஷர் ஹவுஸ்-ஐ வங்கி நிர்வாகக் குழு 2016ஆம் ஆண்டு முதல் முறையாக விற்பனை செய்ய ஏலம் விட்டபோது 135 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு செய்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் இந்தப் பிரம்மாண்ட சொகுசு கட்டிடம் 150 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

8 முறை தொடர்ந்து தோல்வி
 

8 முறை தொடர்ந்து தோல்வி

கடந்த 8 முறையும் தொடர்ந்து தோல்வி அடைந்த காரணத்தால் வங்கி நிர்வாகக் குழு படிப்படியாகக் கட்டிடத்தின் விலையை ஒவ்வொரு ஏலத்திலும் குறைத்து வந்த நிலையில், தற்போது வெறும் 52 கோடி ரூபாய் தொகைக்கு ஹைதராபாத்-ஐ சேர்ந்த Saturn Realters நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ரூ. 52.25 கோடிக்கு விற்பனை

ரூ. 52.25 கோடிக்கு விற்பனை

இந்த விற்பனை மூலம் விஜய் மல்லையா வங்கிகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன் அளவில் 52.25 கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் மிகவும் பிசியாக இருந்த கிங்பிஷர் ஹவுஸ் இன்று ஆள் நடமாட்டமே இல்லாமல் பூட்டப்பட்டு உள்ளது.

அதிகப்படியான விலை நிர்ணயம்

அதிகப்படியான விலை நிர்ணயம்

2016ல் வங்கி நிர்வாகம் இந்தக் கிங்பிஷர் ஹவுஸ்-ஐ விற்பனை செய்யும் போது அதிகப்படியான விலையை நிர்ணயம் செய்தது மட்டும் அல்லாமல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால் இதை வாங்க யாருமே முன்வரவில்லை. இதன் மூலம் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்பு வங்கி நிர்வாகம் விற்பனை செய்துள்ளது.

9000 கோடி ரூபாய் கடன்

9000 கோடி ரூபாய் கடன்

9000 கோடி ரூபாய் கடனை வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடி பிரிட்டன் நாட்டின் தஞ்சம் புகுந்துள்ள கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது.

விஜய் மல்லையா திவால்

விஜய் மல்லையா திவால்

ஜூலை மாத இறுதியில் விஜய் மல்லையாவை திவால் ஆனவர் என லண்டன் நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இது எஸ்பிஐ தலைமையிலான வங்கிகளுக்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

திவால் மனு

திவால் மனு

2021 மே மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற விசாரணையில், வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இது வங்கிகளுக்குப் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

விஜய் மல்லையா இந்திய சொத்து

விஜய் மல்லையா இந்திய சொத்து

இந்தியாவில் விஜய் மல்லையா கடன் பெற்றதற்கு ஈடாகச் சொத்துகள் வைத்துள்ளதாகக் கூறி நிறுத்தி வைத்தது. இதற்கிடையில் தான் சமீபத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு விஜய் மல்லையாவை கைது செய்தது, வழக்கின் விசாரணையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

பிரிட்டன் உயர் நீதிமன்றம்

பிரிட்டன் உயர் நீதிமன்றம்

விஜய் மல்லையா மீதான விசாரணை பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்கப் பிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவிட்டு இந்திய வங்கிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்தது.

வங்கிகளுக்குக் கொண்டாட்டம்

வங்கிகளுக்குக் கொண்டாட்டம்

விஜய் மல்லையாவுக்கு எதிரான இந்தத் திவால் உத்தரவால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், மல்லையாவின் சொத்துக்களை முடக்கி அதை விற்பனை செய்து கொடுத்த கடன் தொகையை மீட்க, வங்கிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vijay Mallya owned Kingfisher House sold for Rs 52 crore by Banks

Vijay Mallya owned Kingfisher House sold for Rs 52 crore by Banks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X