விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: டாட்டா சன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான விஸ்டாரா நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியான சஞ்சீவ் கபூர் டிசம்பர் 31 முதல் பதவி விலக உள்ளார் என்று டாடா குழும நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விஸ்டாராவில் டாட்டா சன்ஸ் 51 சதவிகிதமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், 49 சதவிகிதமும் பங்கு மூலதனத்தை கொண்டுள்ளன. டாட்டா குழுமம், ஏற்கனவே, ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில், 30 சதவிகித பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..!

இந்த நிலையில் விமான நிறுவனத்தின் தலைமை வியூக அதிகாரி வினோத் கண்ணன், தற்போதைக்கு பின்னர் சிசிஓ ஆக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து சஞ்சீவ் கபூர் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், துரதிஷ்டவசமாக எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும். எனது சொந்த காராணங்களுக்காக இப்படி முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளதாகவும், தனது சொந்த காரணங்களுக்காக நான் இந்த நிறுவனத்திலிருந்து செல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்நாட்டு விமான சேவையையும் 3 மற்ற நாடுகளுக்கான சேவைகளை மட்டுமே வழங்கி வரும் விஸ்டாரா, சர்வதேச அளவில் அனைத்து இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டில் ஆறாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனமாக விஸ்டாரா உள்ளது.

அதிலும் தனது விமான சேவையை மேம்படுத்தும் விதமாக பற்பல நடவடிக்கைகளை இந்த நிறுவனம் தொடர்ந்து எடுத்து வருகிறது. குறிப்பாக டிக்கெட் பதிவு செய்தவர்கள் 24 மணி நேரத்தில் கேன்சல் செய்தால், கட்டணம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளது. இது தவிர விஸ்டாராவில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு போனஸ் பாயிண்ட்டுகள் உள்ளது. இது தொடர்ச்சியாக பயணம் செய்பவர்களுக்கு பயன் அளிக்கும் விதமாகவும் உள்ளது.

இது தவிர குழுமமாக பயனிப்பவர்கள், குறிப்பாக குடும்பம், நண்பர்கள் குழு, மூத்த குடிமக்கள் மற்றும் இந்திய ஆயுதப்படை வீரர்களுக்கு பிரத்யேக தள்ளுபடியை நாங்கள் வழங்குகிறோம். மேலும் மொபைல்குவிக் தளத்தில் டிக்கெட்களை பதிவு செய்பவர்களுக்கு சரியான சலுகை அளித்து வருவதாக இந்த நிறுவனத்தின் பிரத்யேக தளத்தில் தெரிய வந்துள்ளது.

 

விஸ்டாரா, குர்கானை தளமாகக் கொண்ட ஒரு இந்திய முழு சேவை விமானமாகும் , அதன் மையமாக டெல்லியில் உள்ளது . டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான இந்த கேரியர், டெல்லி மற்றும் மும்பை இடையே அதன் தொடக்க விமானத்துடன் 2015 ஜனவரி 9 அன்று நடவடிக்கைகளைத் தொடங்கியது.

31 அக்டோபர் 2019 நிலவரப்படி , விஸ்டாரா 3 சர்வதேச இடங்கள் உட்பட 33 இடங்களுக்கு சேவை செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vistara CCO step down from his position from December end

Vistara CCO step down from his position from December end. And The airline's Chief Strategy Officer Vinod Kannan will take over as the CCO.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X