10 நாளில் 129% வளர்ச்சி.. வோடபோன் ஐடியா பங்குகள் தாறுமாறான வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வந்த பின்பு இத்துறை நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டு நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்ட முக்கியமான நிறுவனங்களில் வோடபோன் ஐடியா-வும் ஒன்று. பல முறை வோடபோன் ஐடியா நிறுவன தலைவர் குமார் மங்களம் பிர்லா, நிறுவனத்திற்கு அரசு உதவவில்லை எனில் நிறுவனத்தை மூடுவது தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்தார்.

 

ஜியோ அறிமுகத்திற்கு முன்பு 100 ரூபாய்க்கும் அதிகமாகத் தொகைக்கு வர்த்தகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் சில நாட்களுக்கு முன்பு வெறும் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் கடந்த 10 நாட்களில் இந்நிறுவனப் பங்குகள் எப்போதும் இல்லாத அளவிற்கு 129 சதவீதம் வளர்ச்சி அடைந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம்.

வீட்டுக் கடன் வாங்குவதில் புதிய சிக்கல்! தவிக்கும் சம்பளதாரர்கள் & பில்டர்கள்!

கூகிள்

கூகிள்

தற்போது டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த நிலையில், இந்திய டெலிகாம் சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவிலான தொகையை முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் நிலையில் அமெரிக்க டெக் நிறுவனமான கூகிள், வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மே 29ஆம் தேதி தகவல் வெளியானது.

அடித்தது யோகம்

அடித்தது யோகம்

வர்த்தகச் சரிவு, தொடர் நஷ்டம், 30000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவை என நிறுவனத்தை மூடம் நிலைக்குத் தள்ளப்பட்ட வோடபோன் ஐடியா நிறுவனத்திற்குக் கூகிள் நிறுவனத்தின் முதலீடு பேச்சுவார்த்தை மிகப்பெரிய விஷயமாக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாகவே முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளுக்கு மீது அதிகளவிலான நிதியை முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பங்கு வளர்ச்சி
 

பங்கு வளர்ச்சி

மே 18ஆம் தேதி வெறும் 4.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் படிப்படியாக உயர்ந்து இன்றைய வர்த்தகத்தில் மட்டும் 14.29 சதவீதம் வரையில் உயர்ந்து சுமாப் 12 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் சுமார் 129 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

வருமானம்

வருமானம்

தொடர்ந்து பிரச்சனைகள் சந்தித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்குச் சராசரியாகச் சுமார் 109 ரூபாய் வருமானம் பெற்று வருகிறது. இது ஏர்டெல் நிறுவனத்தை விடவும் 20 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஐியோ

ஐியோ

இதேபோல் சக போட்டி நிறுவனமான ஜியோ கடந்த 3 மாதத்தில் பேஸ்புக் உட்படப் பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாகச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை கூட ஜியோ நிறுவனத்தின் அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனம் சுமார் 5,683.50 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஜியோ டிஜிட்டல் தேவை வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளது.

 இந்திய டெலிகாம்

இந்திய டெலிகாம்

இதன் மூலம் அடுத்த சில வருடங்களில் இந்திய டெலிகாம் சந்தை மிகப்பெரிய மாற்றங்களையும், வர்த்தக விரிவாக்கத்தையும் சந்திக்க உள்ளது. இந்தப் போட்டியில் சில நிறுவனங்கள் மட்டுமே தாக்கும் பிடிக்கும் என்பதால் முதலில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone Idea extends rally, zooms 129% in 10 trading sessions

In the past 10 sessions, the stock price of the telecom services provider has zoomed 129 per cent from level of Rs 5.50 hit on May 26, as compared to 12 per cent rise in the Nifty 50 index.
Story first published: Monday, June 8, 2020, 22:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X