அதள பாதளம் நோக்கிய வோடபோன் பங்கு.. கதறும் வோடபோன் தலைவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையால் பல துறைகள் வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் தொலைத் தொடர்பு துறை இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இந்த நிறுவனங்கள் இருக்குமா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

ஏற்கனவே கடுமையான பிரச்சனைகளை சந்தித்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனம், கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தினையே எதிர்கொண்டு வருகின்றது.

ஒரு புறம் ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால், போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த நிறுவனம், மறுபுறம் வந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிலை குலைந்து போனது. அப்படி என்ன தீர்ப்பு என்று கேட்கிறீர்களா?

வோடபோனுக்கு நெருக்கடி

வோடபோனுக்கு நெருக்கடி

தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்து வேண்டிய நிலுவை தொகையான 92,641 கோடி ரூபாய் தொகையை செலுத்த, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, ஜியோவின் வருகையால், கடும் ‍போட்டி காரணமாக, நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, நெருக்கடியை ஏற்படுத்தியது.

கால அவகாசம்

கால அவகாசம்

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நீதிமன்ற உத்தரவு இந்தத் துறைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக அதன் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் விதமாக கால அவகாசத்தை நீடிப்பு செய்தது.

பிரச்சனையை குறைக்க வழி கண்டறிய கோரிக்கை
 

பிரச்சனையை குறைக்க வழி கண்டறிய கோரிக்கை

ஏற்கனவே இந்த நிதி அழுத்தத்தைத் தணிப்பதற்கான வழிகளைக் கண்டறிய இந்த விஷயத்தில் அரசாங்கம் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் அவசரமாக கேட்டுக் கொள்கிறோம் என்று வோடபோன் ஐடியா ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. வோடபோன் ஐடியா இணைந்தாலாவது பிரச்சனை குறையும் என்ற நிலையில், இந்த இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டன. ஆனால் இணைப்புக்கு பிறகும் நஷ்டம் அதிகரித்து வருகிறது.

என்னென்ன கட்டணம்?

என்னென்ன கட்டணம்?

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை வருவாய் பங்கு வடிவத்தில் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தொலைத் தொடர்பு துறை அறிவித்துள்ளது. இந்த வருவாய் பங்கைக் கணக்கிட பயன்படுத்தப்படும் வருவாய் தொகை AGR என அழைக்கப்படுகிறது. இதைத் தான் மத்திய தொலைத் தொடர்பு துறையும், தொலைத் தொடர்பு நிறுவனங்களை செலுத்த வலியுறுத்தி வந்தது.

ஏஜிஆர் உள்ளடக்கம்

ஏஜிஆர் உள்ளடக்கம்

எனினும் இதை தொடர்ந்து, கடந்த 2015ம் ஆண்டில், தொலைத் தொடர்பு துறை தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மூலதன ரசீதுகள் மற்றும் அடிப்படை அல்லாத மூலங்களான வாடகை, நிலையான சொத்துக்களின் விற்பனையின் லாபம், ஈவுத்தொகை, வட்டி மற்றும் இதர வருமானங்கள் தவிர அனைத்து ரசீதுகளையும் ஏ.ஜி.ஆர் உள்ளடக்கியதாக தீர்ப்பளித்தது. இதற்கிடையில், வருவாயைக் குறைவாகப் புகாரளிக்கும் பிரச்சினையை அரசாங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

பாக்கியை செலுத்த உத்தரவு

பாக்கியை செலுத்த உத்தரவு

இந்த நிலையில் தொலைத் தொடர்பு துறையின் மனுவானது உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது, அதில் நிலுவைத் தொகைக்கு வட்டி, அபராதம் மற்றும் அபராதத்திற்கான வட்டி ஆகியவற்றை தொலைத் தொடர்பு துறையை கோரியது. இதன் படி 92,641 கோடி ரூபாயாக என மதிப்பிடப்பட்டது. இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 40,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய பாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

நஷ்டம் வேறு

நஷ்டம் வேறு

இப்படி ஒரு சூழ்நிலையில் தான் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில் 50,922 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. இதன் செயல்பாட்டு வருவாய் கிட்டதட்ட பாதியாக குறைந்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே லைசென்ஸ் கட்டணமாக 27,610 கோடி ரூபாயும், இதே ஸ்பெக்ட்ரம் கட்டணம் 16,540 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வேண்டும்

நிவாரணம் வேண்டும்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணம் எதிர்பார்க்கின்றன. ஆனால் இதுவரை அப்படி எதுவும் வரவில்லை. நிலுவை தொகை குறித்தான முன்மொழியப்பட்ட இரண்டு கால தடைக்காலம் பெரிதும் உதவியது. அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் வணிகத்தில் அதிக பணத்தை செலுத்த வேண்டாம் என்று நிறுவனமும் தேர்வு செய்யலாம். ஆக அரசு அப்படி ஏதும் நிவாரணம் வழங்காவிட்டால், நிறுவனத்திற்கு பெரிய பூட்டாக போட வேண்டியது தான் என்றும் தெரிவித்துள்ளார் வோடபோன் குழுமத்தில் தலைவர் குமார் மங்கல பிர்லா.

பங்கு படு வீழ்ச்சி

பங்கு படு வீழ்ச்சி

இந்த நிலையில் வோடபோன் ஐடியா குழுமத்தின் பங்கு விலையானது ஏற்கனவே சரிவில் இருந்தாலும், குமார் மங்கலம் பிர்லா அரசு நிவாரணம் அளிக்காவிட்டால், நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 6.16 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone idea shares down over 6% today

Vodafone idea shares down over 6%, when kumar mangalam birla said Vodafone idea may shut down if govt not give relief.
Story first published: Friday, December 6, 2019, 16:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X