அடடா.. பஃபெட் பல்டி அடிச்சுட்டார்.. போட்டதை திரும்ப எடுக்கிறார்.. நீங்கெல்லாம் என்ன பண்ணப் போறீங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பங்கு சந்தை என்றாலே லாபம் கொடுக்கும் பங்குகளை வாங்கி, பின்னர் லாபம் கிடைப்பதும் விற்பதும் நடக்கும் ஒரு விஷயம் தான். அதிலும் உலகின் பங்கு சந்தையின் தந்தை என்றழைக்கப்படும் வாரன் பஃபெட்டுக்கு சொல்லவா வேண்டும்.

 

ஆனால் கடந்த ஆண்டில் நிலவிய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் பங்கு சந்தைகள் படு பாதாளம் சென்றன. அந்த நேரத்தில் பலரும் தங்களது முதலீடுகளை பங்கு சந்தைகளில் இருந்து வெளியே எடுத்தனர். மாறாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திலும், தங்கம் சார்ந்த முதலீடுகளிலும் செய்தனர்.

அந்த வகையில் பங்கு சந்தையின் தந்தை என்றழைக்கப்படும் வாரன் பஃபெட் கூட, தனது முதலீடுகளை தங்கம் சார்ந்து முதலீடு செய்தார்.

குறுகிய கால காதல் கதை

குறுகிய கால காதல் கதை

தங்கம் விலை தொடர்ச்சியாக சரிந்து வரும் நிலையில், சில நிபுணர்கள் இனி தங்கம் விலையானது இன்னும் குறையலாம் என்று கணித்து வருகின்றனர். இதனால் வாரன் பஃபெட்டும் கூட தங்கம் சார்ந்த பங்குகளை விற்றுள்ளார். அவரின் குறுகிய கால தங்க காதல் கதையும் முடிந்து விட்டது.

தங்கம் சார்ந்த பங்குகள் விற்பனை

தங்கம் சார்ந்த பங்குகள் விற்பனை

முன்னணி பங்கு சந்தை முதலீட்டாளரான வாரன், பெர்க்ஷர் ஹதவே என்கிற பெயரில் தான் தன் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்க பங்கு சந்தையில் வர்த்தகமாகும் barrack gold corporation என்ற கனேடியன் தங்க சுரங்கத்தின் பங்குகளில் 317 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்கியிருந்தார். அந்த பங்குகளைத் தான் தற்போது இந்த விற்றுள்ளார்.

லாபம் சரிவு
 

லாபம் சரிவு

இந்த barrack gold corporation நிறுவனத்தின் லாலம் கடந்த காலாண்டில் 50.7% சரிந்துள்ளது. இது கொரோனா காரணமாக அதன் உற்பத்தி சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. உண்மையில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது. பொருளாதாரமும் வளர்ச்சி பாதையினை நோக்கி சென்று கொண்டுள்ளது.

யோசிக்க வேண்டியது தான்

யோசிக்க வேண்டியது தான்

இதனால் வாரனின் குறுகிய கால ஹனிமூன் முடிவுக்கு வந்துள்ளது. ஆக நீங்களும் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், வாரனின் முடிவினை பற்றி யோசிக்கலாம். நீங்களும் முதலீடுகளை குறைக்க வேண்டிய நேரமிது. ஆனால் இது குறித்த ஆய்வில் பதிலளித்தவர்களில் பலர் மொத்த போர்ட்போலியோவில் 5 - 10 மடங்கு தங்கம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

போர்ட்போலியோவில் தங்கம் அவசியம்

போர்ட்போலியோவில் தங்கம் அவசியம்

இதே நிபுணர்கள் தரப்பில் வாரனின் போர்ட்போலியோ என்பது பெரியது. ஆக எந்தவொரு ஏற்றமும் சரிவும் தாங்கிக் கொள்ளும் சக்தி உண்டு. ஆனால் நமது போர்ட்போலியோக்கள் அப்படி இல்லை. ஆக நமது போர்ட்போலியோவை நிர்வகிக்க தங்கத்தின் கொஞ்சமேனும் முதலீடு தேவை என்று கூறுகின்றனர்.

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து 18 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. அப்போது 56,200 ரூபாயினை இந்திய சந்தயில் தொட்டது. ஆனால் தற்போது 46,000 ரூபாய் லெவலில் உள்ளது. இதே மற்றொரு நிபுணர், தங்கம் என்பது சில்லறை முதலீட்டாளர்களை நிச்சயமற்ற நிலையிலிருந்து பாதுகாக்கிறது என்று கூறியுள்ளார்.

இதனையும் யோசித்து செயல்படுங்கள்

இதனையும் யோசித்து செயல்படுங்கள்

யார் என்ன சொன்னால் என்ன? நீங்கள் உங்களது முதலீடுகளை செய்யும் முன்னர் யோசித்து செயல்படுங்கள். முடிந்த அளவு ஒரு பாதுகாப்பான ஒரு ஆலோசனையாளருடன் தொடர்பில் இருங்கள். எதில் முதலீடு செய்யலாம், எதில் செய்யக்கூடாது என்பதை ஆலோசனை செய்யுங்கள். ஆனால் இறுதி முடிவு என்பது உங்களுடையதாக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் பங்கு சந்தையின் தாத்தாவே சொல்லியிருக்கிறார் அதனையும் கொஞ்சம் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்களேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Warren Buffett sold gold mine shares: should you sell gold too

Gold latest updates.. Warren Buffett sold gold mine shares: should you sell gold too
Story first published: Friday, February 19, 2021, 19:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X