ஆன்லைனில் ஏகப்பட்ட தள்ளுபடி.. தரக்கூடாது.. நாடாளுமன்றத்தில் எழுந்த பிரச்சினை! அமைச்சர் பதில் இதுதான்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிக தள்ளுபடியை வழங்குகின்றன, பிற நிறுவனங்களை அழிக்கும் வகையில் விலையை நிர்ணயிக்கின்றன என்று கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு (டிபிஐஐடி) துறைக்கு, புகார்கள் வந்துள்ளன என்று மத்திய, அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுகின்றன என்றும், அரசின், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை வெளிப்படையாக மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள வர்த்தகர்கள் அமைப்பு, சமீபத்தில் நாடு தழுவிய போராட்டம் நடத்தின.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டின் இ-காமர்ஸ் போர்ட்டல்களுக்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று இந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

நெறிமுறை இல்லை

நெறிமுறை இல்லை

"ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள், இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தையை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை தங்களது நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் அரசின் அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை வெளிப்படையாக மீறுவதன் மூலம் மிகவும் நச்சுத்தன்மையடையச் செய்துள்ளன" என்று கண்டித்தனர் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

பியூஷ் கோயல் பதில்

பியூஷ் கோயல் பதில்

இந்த பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் இதுபற்றி கூறியுள்ளதாவது: அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) விதிமுறைகளை மீறுவது, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (ஃபெமா), 1999 இன்கீழ் தண்டனைக்குறிய குற்றம். ரிசர்வ் வங்கி ஃபெமாவை நிர்வகிக்கிறது. அமலாக்க இயக்குநரகம் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் கொண்ட அமைப்பு.

தள்ளுபடி அதிகம்
 

தள்ளுபடி அதிகம்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் மிக அதிக தள்ளுபடியை வழங்குகின்றன, வியாபார தர்மத்திற்கு மாறாக செயல்படுகின்றன என்று, எங்கள் துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. சரக்குகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் வருகிறது. அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை ஃபெமா சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மூலம் இந்தக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் குறித்த கேள்விக்கு வழங்கிய மற்றொரு பதிலில், உள்நாட்டில் வெங்காயம் கிடைக்கும் தன்மை மற்றும் விலை நிலைமையைக் கருத்தில் கொண்டு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில், குறிப்பாக மகாராஷ்டிராவில், வெங்காய உற்பத்தியாளர்களுக்கு பாதகமான சூழல் இருப்பதாக எந்த அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தனது பதிலில் அவர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

We received some complaints of e-commerce companies offering over discounts: Piyush Goyal

The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) has received complaints that e-commerce companies are offering deep discounts, indulging in predatory pricing, exercising control over inventory and influencing the prices of goods sold on the platform, Parliament was informed on Friday. In a written reply to the Rajya Sabha, Commerce and Industry Minister Piyush Goyal said that any violation of foreign direct investment (FDI) regulations is covered by the penal provision of the Foreign Exchange Management Act (FEMA), 1999.
Story first published: Friday, November 22, 2019, 17:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X