சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு இதுதான்.. நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான அறிவிப்புகள் இதுதான்.

 

ஆனால் இதை மோடி அரசும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் நிறைவேற்றுவார்களா..?

பட்ஜெட் 2022-ல் குட் நியூஸ்: வருமான வரி சலுகையில் உயர்வு.. யாருக்கெல்லாம் நன்மை..!

 நிதிப் பற்றாக்குறை

நிதிப் பற்றாக்குறை

நிதிப்பற்றாக்குறையின் அளவு ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரிக்கக் கூடாது எனப் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இதைச் சமாளிக்க மத்திய அரசு கிராமப்புறங்களை மையமாகக் கொண்ட பணம் அல்லது வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்வதை விட, நிதியமைச்சர் கேபெக்ஸ் பாதையில் செல்ல வேண்டும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் சில கூறுகின்றனர். மேலும் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மூலதன சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

 செல்வம் மற்றும் பரம்பரைச்சொத்து வரி

செல்வம் மற்றும் பரம்பரைச்சொத்து வரி

கோவிட் தொற்றுக் காரணமாக இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவமின்மை பிரச்சனையைச் சமாளிக்கச் செல்வம் மற்றும் பரம்பரைச்சொத்து வரியை (wealth and inheritance tax) மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு மத்தியில் 84% இந்தியக் குடும்பங்கள் வருமானச் சரிவைக் கண்டு உள்ள வேளையில், இந்தியப் பணக்காரக் குடும்பங்கள் 2021-ல் தங்கள் செல்வச் செழிப்பு உச்சத்தை எட்டியுள்ளன என்று ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.

 standard deduction உயர்வு
 

standard deduction உயர்வு

மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் standard deduction பிரிவில் அளிக்கப்பட்டு வரும் 50,000 ரூபாய் வரி சலுகையை 75,000 முதல் 1,00,000 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் சமாளிக்க முடியும் எனப் பொருளாதார வல்லுனர்கள் கூறுகினர்.

 WFH ஊழியர்கள்

WFH ஊழியர்கள்

இந்தியாவில் தற்போது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது பொதுவான ஒன்றாக மாறியுள்ள நிலையில், வீட்டில் அலுவலகத்திற்காகச் செலவு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை அல்லது கணக்கில் தனிப்பட்ட முறையில் கணக்கு வைக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

 ஹெல்த் இன்சூரன்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ்

இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்குத் தரமான சுகாதாரச் சேவையைப் பெறுவதற்கு, ஹெல்த் இன்சூரன்ஸ்களை 5% ஜிஎஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் அனைத்து பர்சனல் திட்டங்களும் தற்போதுள்ள 18% லிருந்து 5% ஜிஎஸ்டி வரியாகக் குறைக்கும் போது சுகாதாரக் காப்பீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் மூத்த குடிமக்களுக்கு இதில் முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் எனக் காப்பீட்டு வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

 எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இதேபோல் எலக்ட்ரிக் வாகனங்களுக்குக் குறைவான வட்டியில் வாகன கடன் அளிக்க வேண்டும். மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகன பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் சிறிய மற்றும் நடுத்தர ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்கிறது. இதைச் சரி செய்ய மத்திய அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறை கோரிக்கை வைத்துள்ளது.

 ஹாஸ்பிடாலிட்டி துறை

ஹாஸ்பிடாலிட்டி துறை

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் விடுதி, ஹோட்டல் போன் ஹாஸ்பிடாலிட்டி துறை அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் மீண்டும் ஜிஎஸ்டி இன்புட் டாக்ஸ் கிரெடிட் முறையைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

wfh allowance and other imp things India wants from Nirmala Sitharaman's Budget 2022

wfh allowance and other imp things India wants from Nirmala Sitharaman's Budget 2022 சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு இதுதான்.. நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன் என்ன..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X