“சிறு வியாபாரங்கள் எந்த ஒரு பொருளாதாரத்திலும் முக்கியம். அவர்களுக்கு நம் உதவி தேவை” ஃபேஸ்புக் CEO!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று காலையில் இருந்தே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 5.7 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி இருக்கும் செய்தியைத் தான் இணையம் எங்கும் பார்க்க முடிகிறது.

 

இந்த டீலைப் பற்றி முகேஷ் அம்பானி தன் கருத்தைச் சொல்லியது மற்றும் இந்த டீல் எதற்கு போடப்பட்டது, ஜியோவுக்கு என்ன லாபம், என்பதை எல்லாம் விரிவாக "மளிகை கடை அண்ணாச்சிகளை வளைக்க Whatsapp-ஐ கையில் எடுக்கும் ஜியோ! இனி சும்மா கிழி தான்!" என்கிற தலைப்பில் எழுதி இருக்கிறோம்.

இப்போது இந்த டீலைப் பற்றி, ஃபேஸ்புக் நாயகன் மார்க் சக்கர்பெர்க் என்ன சொல்லி இருக்கிறார் என்பதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

ஜியோ டீல்

ஜியோ டீல்

உலகில் இப்போது நிறைய நடக்கிறது, இருப்பினும், ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் செய்து கொண்டு இருக்கும் வேலை தொடர்பாக ஒரு அப்டேட் கொடுக்க விரும்புகிறேன். ஃபேஸ்புக் நிறுவனம், இந்தியாவின் ஜியோ நிறிவனத்துடன் சேர்ந்து,

ஜியோ பிளாட்ஃபார்ம்களில் வேலை செய்ய இருக்கிறது.

முதலீடு

முதலீடு

ஃபேஸ்புக் நிறுவனம், இந்த டீலில் நிதி முதலீடு (Financial Investment) செய்து இருக்கிறதாம். அதோடு மேற்கொண்டு வரும் சில திட்டங்களில் ஒன்றாக செயல்பட இருக்கிறோம். அந்த திட்டங்களால், இந்தியாவில், வணிகம் பெருவாரியாக பல தரப்பட்ட மக்களுக்கு திறந்துவிடப்படும் எனச் சொல்லி இருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்.

ஜியோ பங்கு
 

ஜியோ பங்கு

இந்தியாவில் பலரும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை பயன்படுத்திக் கோண்டு இருக்கிறார்கள். நிறைய திறமையான தொழில் முனைவோர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியா தற்போது ஒரு முக்கிய டிஜிட்டல் மாற்றத்திற்கு மத்தியில் உள்ளது. ஜியோ போன்ற நிறுவனங்கள், கோடிக்கணக்கான இந்தியர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை ஆன்லைனில் கொண்டு வருவதில் மிக முக்கிய பங்காற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

சிறு வியாபாரங்கள்

சிறு வியாபாரங்கள்

சிறு வியாபாரங்கள் தான், எந்த ஒரு பொருளாதாரத்திலும் முக்கியம். அவர்களுக்கு நம் உதவி தேவை. அந்த உதவி இந்த நேரத்தில் மிகவும் அவசியம். இந்தியாவில் சுமார் 6 கோடி சிறு வியாபாரிகள் இருக்கிறார்கள். இந்த வியாபாரிகளைச் சார்ந்து பல கோடிக் கணக்கான மக்களின் வேலை இருக்கிறது.

வியாபாரம் மேம்படுத்த உதவும்

வியாபாரம் மேம்படுத்த உதவும்

இன்று பல தரப்பு மக்களும் லாக் டவுனில் இருக்கிறார்கள். பல வியாபாரிகளுக்கு, தங்கள் வியாபாரங்களை நடத்த டிஜிட்டல் உதவி தேவைப்படுகிறது. இந்த டிஜிட்டல் உதவியோடு, வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கண்டு பிடித்து, அவர்களோடு தொடர்பு கொண்டு வியாபாரத்தை வளர்க்க முடியும்.

நம் தரப்பு

நம் தரப்பு

இது நம்மால் முடிந்த உதவி. ஆகையால் தான், மக்களுக்கு உதவ, இந்தியாவில் வணிக ரீதியாகவும் மற்றும் வியாபார ரீதியாகவும் பல வாய்ப்புகளை உருவாக்க, ரிலையன்ஸ் ஜியோ உடன் பார்ட்னர்ஷிப் டீல் போட்டு இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg). ஃபேஸ்புக் CEO-வின் போஸ்டைக் காண க்ளிக்கவும்:

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Facebook CEO Mark Zuckerberg said about Jio partnership deal

Facebook CEO Mark Zuckerberg said his opinion about the reliance Jio partnership deal. Especially he said that "the small businesses are the core of every economy and they need our support" is really touching.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X