விவசாயிகள் & மீனவர்களுக்கு ஓபிஎஸ் சொன்ன திட்டங்கள் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடுத்த 2021-ம் ஆண்டு தேர்தல் சூடு பிடித்து இருப்பதால், இன்று பன்னீர் செல்வம் தாக்கல் செய்த தமிழக அரசின் பட்ஜெட்டும் பெரிய அளவில் சூடு பிடித்து இருப்பதாகவே தெரிகிறது.

 

இந்த ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில், எப்படி விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதே போல, தமிழக அரசின் பட்ஜெட்டிலும், விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதாகவே தெரிகிறது.

இந்த பட்ஜெட்டில் அப்படி விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு என்ன சொல்லிவிட்டார்..? வாருங்கள் பார்ப்போம்.

சாதாரண மக்களுக்கு என்ன சொன்னார் ஓபிஎஸ்..!

பதப்படுத்தும் மண்டலங்கள்

பதப்படுத்தும் மண்டலங்கள்

ஒட்டு மொத்தமாக, வேளாண் துறைக்கு 11,894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். எட்டு மாவட்டங்களில் தமிழகத்தின் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படுமாம். தேனி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படுமாம்.

மீன் வளத் துறை

மீன் வளத் துறை

தமிழக அரசின் மீன் வளத்துறைக்கு ரூ.1,129.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். அதோடு 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடி செலவு செய்து தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். இதனால் விசைப் படகைப் பயன்படுத்தி கடலுக்கு, மீன் பிடிக்கச் செல்பவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கும்.

நீர் பாசனம்
 

நீர் பாசனம்

பல்வேறு நீர் பாசன திட்டங்களுக்கு 6,991 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார் ஓ பன்னீர் செல்வம். அதோடு பல்வேறு நீர் தேக்கங்கள் மற்றும் அணைகளை பராமரிக்க மற்றும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர சுமார் 610 கோடி ரூபாய் இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார்.

நீர் பாசனம் 1

நீர் பாசனம் 1

நீர் பாசனத்துக்கு மேலே சொன்ன திட்டங்கள் போக, சில குறிப்பிட்ட நீர் பாசன திட்டங்களுக்கு 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். இது போக குடிமராமத்து பணிகளுக்கு (நீர் வளத்தை பாதுகாக்க) தனியாக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார் ஓபிஎஸ்.

திருத்திய நெல் சாகுபடி

திருத்திய நெல் சாகுபடி

நெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும். இதற்கான மானியங்கள் அளிக்கப்படும். திருத்திய நெல் சாகுபடி தமிழகம் முழுக்க 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படுமாம். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மட்டும் இந்த திருத்திய நெல் சாகுபடி 11.1 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தபடுமாம்.

மற்ற வேளா சார் அறிவிப்புகள்

மற்ற வேளா சார் அறிவிப்புகள்

  • ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு கொள் முதல் செய்யும் பாலின் அளவு 33.94 லட்சம் லிட்டராக உயர்ந்து இருக்கிறதாம்.
  • கால்நடைத் துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறார்.
  • பொது விநியோக திட்டத்தை விரிவு படுத்த 400 கோடி ரூபாய் மானியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is there for farmers and fishing people in Tamil nadu budget 2020

What is there for farmers and fishing people in Tamil nadu budget 2020. What are the plans and fund allocations that will help the farmers and fishing people.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X