வந்தாச்சு வாட்ஸ்அப் பே.. இனி கூகிள் பே, போன்பே எல்லாம் அரோகரா தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல கோடி வாடிக்கையாளர்களை வைத்துள்ள வாட்ஸ்அப் இதுநாள் வரையில் மெசேஜிங் சேவை மட்டுமே கொடுத்து வந்த நிலையில் பேமெண்ட் சேவை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய பேமெண்ட் சந்தைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2018ஆம் ஆண்டில் இருந்து பேஸ்புக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வாட்ஸ்அப் இந்தியாவில் பேமெண்ட் சேவையைச் சோதனை திட்டமாக இயக்கி வருகிறது.

இதற்குக் காரணம் வாட்ஸ்அப் மேமெண்ட் திட்டத்திற்குப் பல்வேறு ஒழுங்குமுறை கட்டுப்பாடு விதிமுறை மீறல்கள் மற்றும் பல நீதிமன்ற வழக்குகள் இருக்கும் காரணத்தால் மக்களுக்கு முழுமையான சேவையை அளிக்க முடியவில்லை.

தற்போது வாட்ஸ்அப் பேமெண்ட் தளத்திற்கு அரசு ஒப்புதல் கொடுத்துள்ள காரணத்தால் இனி இச்சேவையை மக்களுக்கு முழுமையாக எவ்விதமான தங்கு தடையுமின்றி அளிக்க முடியும்.

வாட்ஸ்அப் பே

வாட்ஸ்அப் பே

புதிய விதிமுறைகள் படி வாட்ஸ்அப் பே, இந்தியாவின் தேசிய பேமெண்ட்ஸ் கார்ப் நிர்வாகம் செய்யும் யூபிஐ தளத்தின் கீழ பேமெண்ட் சேவையை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் யூபிஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வாட்ஸ்அப் இணைப்பு மூலம் இரட்டிப்பு வளர்ச்சி அடையவும் வாய்ப்புகள் உள்ளது.

10 மொழி பல வங்கிகள்

10 மொழி பல வங்கிகள்

வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையில் இந்திய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பல வங்கிகளுடன் இணைந்து சுமார் 10 மொழியில் பேமெண்ட் சேவையை அளிக்க முடியும்.

இதன் மூலம் இதுவரை டிஜிட்டல் பேமெண்ட் தளத்திற்கு வர முடியாத பல கோடி மக்கள் வாட்ஸ்அப் பே சேவையைப் பயன்படுத்த முடியும். இச்சேவையின் பெரிய அளவில் டிஜிட்டல் மற்றும் இண்டர்நெட் விபரம் இல்லாத சமானிய கிராம மக்களும் இச்சேவையைப் பயன்படுத்த முடியும்.

இலவசம் இலவசம்
 

இலவசம் இலவசம்

கூகிள் பே, பேடிஎம் போலவே வாட்ஸ்அப் பே மூலம் பண அனுப்பவும் இவ்விதமான கட்டணத்தையும் பேஸ்புக் வசூலிக்கவில்லை. இதனால் இந்திய மக்கள் இச்சேவையை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

2 கோடி மக்கள்

2 கோடி மக்கள்

வாட்ஸ்அப்-க்கு ஒப்புதல் அளித்த National Payments Corporation of India (NPCI) இதன் முதற்கட்ட சேவையில் 2 கோடி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. 2 கோடி வாடிக்கையாளர்களை அடைந்த பின்பு மறு ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்டத்திற்கு நகர ஒப்புதல் அளிக்கப்படும்.

30 சதவித சந்தை

30 சதவித சந்தை

வாட்ஸ்அப் இந்தியாவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டாலும், NPCI அமைப்பு 2 கோடி வாடிக்கையாளர்களை மட்டுமே சேர்க்க ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில் யூபிஐ நெட்வொர்க் சந்தை வர்த்தகத்தில் 30 சதவீத வர்த்தகத்தை மட்டுமே அதிகப்படியாத பெர முடியும் எனப் புதிய விதமுறையைக் கொண்டு வந்துள்ளது.

போன்பே மற்றும் கூகிள் பே

போன்பே மற்றும் கூகிள் பே

இப்புதிய விதிமுறையால் தற்போது யூபிஐ வர்த்தகத்தில் 30 சதவீதத்திற்கும் அதிக ஆதிக்கத்தைக் கொண்டு இருக்கும் போன்பே மற்றும் கூகிள் பே அதன் எண்ணிக்கையை 2023ஆம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் எனக் கெடு வித்துள்ளது ரிசர்வ் வங்கி.

அக்டோபர் மாதம் மட்டும் போன்பே 835 மில்லியன் பரிமாற்றங்கள் செய்தி சுமார் 40% யூபிஐ சந்தையைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்து கூகிள் பே 820 மில்லியன் பரிமாற்றங்கள் செய்து 2வது இடத்தில் உள்ளது.

வாட்ஸ்பே வாடிக்கையாளர்கள்

வாட்ஸ்பே வாடிக்கையாளர்கள்

2018 முதல் வாட்ஸ்அப் சோதனை திட்டத்தின் கீழ் இந்தியாவில் சேவை அளித்து வரும் நிலையில் இத்தளத்தில் தற்போது 10 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Whatsapp Pay Officially entered India: Google pay, Paytm, phonepe faces trouble

Whatsapp Pay Officially entered India: Google pay, Paytm, phonepe faces trouble
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X