இந்திய பங்குச்சந்தை ஒமிக்ரான், சர்வதேச சந்தை மதிப்பில் இருந்து தொடர்ந்து சந்தை வளர்ச்சிப் பாதையில் இருக்க மிக முக்கியமான காரணம் ஐபிஓ என்றால் மிகையில்லை, கடந்த ஒரு வருடத்தில் வெளியான ஐபிஓ-வில் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பல ஐபிஓ-க்கள் தோல்வியும் சந்தித்துள்ளது.
ஆனந்த் ஈஸ்வரன்.. அமெரிக்க நிறுவனத்தின் அடுத்த இந்திய சீஇஓ..!

1000 கோடி ரூபாய் ஐபிஓ
இந்தச் சூழ்நிலையில் 1000 கோடி ரூபாய் அளவிலான ஐபிஓ-வை வெளியிட்ட மேப்மைஇந்தியா 53 சதவீதம் ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டுப் பெரிய அளவிலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்குப் பின் இருப்பவர் கணவன் மனைவியான ராகேஷ் மற்றும் ராஷ்மி வர்மா தான்.

ராகேஷ் மற்றும் ராஷ்மி
பிட்ஸ் பிலானி கல்லூரி பட்டதாரியான 71 வயதான ராகேஷ் மற்றும் ஐஐடி ரூக்கி பட்டதாரியான 65 வயதான ராஷ்மி திருமணமான பின்பு அமெரிக்காவில் சுமார் 12 வருடம் பணியாற்றி வந்த நிலையில் நிறுவனத்தைத் துவங்க வேண்டும் எனக் கனவில் 1990ல் கை நிறையச் சம்பளம் கொடுக்கும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினர்.

மேப்மைஇந்தியா நிறுவன
20 வருடமாக மேப்மைஇந்தியா நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு அங்குலமும் அலந்து டிஜிட்டலாக உருமாற்றம் செய்துள்ளனர் ராகேஷ் மற்றும் ராஷ்மி, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் தளத்தை உருவாக்குவதற்கு முன்பாகவே மேப்மைஇந்தியா இந்தப் பிரிவில் பணியாற்றத் துவங்கியுள்ளது தான்.

டிஜிட்டல் மேம் கான்செப்ட்
20 வருடத்திற்கு முன்பு டிஜிட்டல் மேம் கான்செப்ட்-ஐ யாராலும் புரிந்துகொள்ள முடியாத நேரத்தில் நிறுவனத்தைத் துவங்கி, இன்று இந்தியாவின் மொத்த நிலப்பரப்பையும் டிஜிட்டல் முறையில் சேமித்து நிறுவனங்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு, அரசு அமைப்புகளுக்கும், அமைச்சகங்களுக்கும் அளித்து வருகிறோம் என ராகேஷ் தெரிவித்துள்ளார்.

ராகேஷ் மற்றும் ராஷ்மி நிர்வாகம்
ஆரம்பம் முதல் மேப்மைஇந்தியா நிறுவனத்தை ராகேஷ் மற்றும் ராஷ்மி மட்டுமே நிர்வாகம் செய்து வருகின்றனர், ராஷ்மி தொழில்நுட்ப பணிகளையும், ராகேஷ் வர்த்தகப் பணிகளையும் பிரித்துப் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஸ்டார்ட்அப் என்ற சொல்லே இல்லாத போது மேப்மைஇந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனமாக இயங்க துவங்கியது.

6,925.85 கோடி ரூபாய் மதிப்பீடு
மேப்மைஇந்தியா இன்று 6,925.85 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்பட்டுச் சுமார் 1040 கோடி ரூபாய்க்கு ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் படைத்துள்ளது, இந்த ஐபிஓ-வில் மேப்மைஇந்தியா பங்குகள் சுமார் 150 மடங்கு அதிக முதலீடு குவிந்துள்ளது.

586 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு
மேப்மைஇந்தியா நிறுவனத்தில் ராகேஷ் மற்றும் ராஷ்மி இணைந்து சுமார் 54 சதவீத பங்குகளை வைத்துள்ளதால் இந்த ஐபிஓ மூலம் இவரின் மொத்த சொத்து மதிப்பு 586 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ராகேஷ் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலும், ராஷ்மி ஐபிஎம் நிறுவனத்தில் 1970 முதல் 1990 வரையில் பணியாற்றியுள்ளனர். மேலும் மேப்மைஇந்தியா தனது சேவை சுமார் 200 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.