யார் இந்த ஜெகதீஷ் கட்டார்..? இவரின் மறைவு இந்திய வாகனத் துறைக்கு பேரிழப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாருதி சுசூகியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் கார்னேஷன் ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைவருமான ஜெகதீஷ் கட்டார் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

 

அவரின் வயது 78 ஆகும். கடந்த 1993ம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவில் இயக்குனராக பெறுப்பேற்றவர், அதன் பிறகு 1999ம் ஆண்டு மாருதியின் நிர்வாக இயக்குனராகவும் பொறுப்பேற்றார்.

இன்போசிஸ்-ன் கோவிட் கேர் சென்டர்.. ஊழியர்களுக்கு இலவசமாகச் சிகிச்சை.. வேற லெவல்..!

இதற்கிடையில் கடந்த 2007ம் ஆண்டில் தான் மாருதி நிறுவனத்தில் இருந்து ஓய்வும் பெற்றார்.

ஐஏஎஸ் அதிகாரியும் கூட

ஐஏஎஸ் அதிகாரியும் கூட

மாருதி உத்யோக் நிறுவனத்தில் தனது பணியை துவங்குவதற்கு முன்பே, கட்டார் 37 வருடம் அனுபவமுள்ள ஐஏஎஸ் அதிகாரியாகவும் இருந்தார். மாருதி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கார்னேஷன் ஆட்டோ என்ற வாகன விற்பனை நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த நிறுவனம் பல பிராண்டுகளின் விற்பனை மற்றும் சேவையை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையில் சிக்கிய கட்டார்

சர்ச்சையில் சிக்கிய கட்டார்

இவரின் மீது கடந்த 2009ம் ஆண்டு நிறுவன செயல்பாடுகளுக்கென, பஞ்சாப் நேஷனல் வங்கியியிடமிருந்து 110 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். அந்த கடனை முறையாக செலுத்தவில்லை. இதனால் கடந்த 2015ல் அந்த கடனை வாராக்கடனாக அறிவித்தது இவ்வங்கி. அதோடு இந்த அடமான சொத்தை அந்த சமயத்தில் விற்றதாகவும், பெரும் சர்ச்சை வெடித்தது.

கட்டாரின் பதில்
 

கட்டாரின் பதில்

அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த, கார்னேஷன் ஒரு தோல்வியடைந்த வணிகம். இதில் எந்த தவறும் இல்லை. இது குறித்து ஒரு முன்னணி தணிக்கையாளரால் தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது எந்த தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து சிபிஐ ஆய்வு நடத்தியது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட படி, எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணை முடிந்ததும் நாங்கள் நீருபிக்கப்படுவோம் என்றும் கூறியிருந்தார்.

கட்டாரின் முக்கிய பங்கு

கட்டாரின் முக்கிய பங்கு

இவரின் மீது பல சர்ச்சை வழக்குகள் பதியப்பட்டிருந்தாலும், 65 வயதில் ஒரு மல்டிபிராண்ட் நிறுவனத்தினை நிறுவியவர். பேரன் பேத்திகளை கொஞ்சும் வயதில் ஒரு தொழிலதிபராக வலம் வந்தவர். இந்த சர்ச்சை நிறுவனம் கார் விற்பனை மற்றும் சேவையை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு மாருதி சுசூகி இன்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய பிராண்டாக வளர்ந்துள்ளதுக்கு கட்டாரின் பங்கும் மிக முக்கியமானது என்பதும் மறுபதற்கில்லை.

ஆழ்ந்த இரங்கல்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்

மாருதி சுசூகியின் தற்போதைய தலைவரான ஆர் சி பார்கவா, மாருதி சுசூகியில் என்னை சேர கூறிய எனது நண்பரும் அற்புதமான மனிதருமான ஜெகதீஷ் கட்டாரின் மறைவு மிக வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார். மாருதியின் வளர்ச்சிக்கு கட்டாரின் பங்கு மிக முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.

மாருதியில் மகத்தான பங்களிப்பு

மாருதியில் மகத்தான பங்களிப்பு

இதே நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த், ஜெகதீஷ் கட்டார், ஆற்றல் மிக்க மற்றும் நேர்மையான மனிதர். இவர் அரசாங்கத்திலும் மற்றும் பொதுத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். மாருதிக்கு அவரின் பங்களிப்புகள் மகத்தானவை. அவரின் மறைவு மிக வருத்தமளிக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மிக வருத்தம்

மிக வருத்தம்

இதே எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜீவ் சாபா, ஜெகதீஷ் கட்டாரின் மறைவு செய்தி கேட்டு வருத்தப்படுகிறேன். வாகனத் துறையில் அவரின் பங்களிப்புகள் மிகப்பெரியது என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

who is jagdish khattar? Indian auto industry loses a stalwart

who is jagdish khattar? Indian auto industry loses a stalwart
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X