டீசல் விலை: ஏன் இந்த திடீர் குறைப்பு..? எண்ணெய் பத்திரங்கள் பெரும் சுமையா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும் இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து வரலாற்று உச்ச அளவிலேயே வைத்துள்ளது.

 

இந்நிலையில் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் டீசல் விலையைச் சுமார் 32 நாட்களுக்குப் பின்பு புதன்கிழமை 20 பைசா குறைத்த நிலையில் வியாழக்கிழமையும் 19 முதல் 20 பைசா வரையில் குறைந்துள்ளது. ஆனால் சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல் விலையை இன்னும் குறைக்கப்படாமல் அதன் உச்ச விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எரிபொருள் மீதான விலை குறைக்கப்படாமல் இருக்க எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசினார். இதை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் பத்துச் சென்ட் உயர்ந்தாலே உடனே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிடும்.

உச்ச விலையில் பெட்ரோல், டீசல்

உச்ச விலையில் பெட்ரோல், டீசல்

ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அரசுக்கு வரி வருமானம் ஈட்டி கொடுக்க வேண்டும் என்ற ஒன்றை இலக்குடன் பெட்ரோல், டீசல் உச்ச விலையிலேயே விற்பனை செய்வது வருகிறது. இதன் மூலம் சாமானிய மக்களிடம் இருந்து அதிகளவிலான வருமானத்தை மத்திய அரசுக்குப் பெறுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க எவ்விதமான திட்டமும் இல்லை எனப் பதில் அளித்தார்.

எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம்

எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மீதான விலை மற்றும் வரியைக் குறைக்க முடியாமல் இருக்கும் நிலைக்கு முன்னாள் அரசு கொடுத்துள்ள எண்ணெய் பத்திரங்களும் அதன் மீதான வட்டியும் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ப.சிதம்பரம் டிவீட்

ப.சிதம்பரம் டிவீட்

இதற்குப் பதில் கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு எண்ணெய் பத்திரங்கள் தடையாக இருக்கிறது எனக் கூறுவது வியப்பு அளிக்கிறது.

இந்தக் கருத்து நம்பமுடியாத அளவிற்கு அறியாமையை வெளிப்படுத்துகிறது என டிவீட் செய்துள்ளார்

தமிழ்நாடு அரசு நெருக்கடி

தமிழ்நாடு அரசு நெருக்கடி

இதேபோல் தற்போது டீசல் விலையைக் குறைக்க மிக முக்கியக் காரணம் தமிழ்நாடு அரசு பெட்ரோல் லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் குறைத்துள்ளது மத்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை. இதன் வாயிலாகவே 20 பைசா குறைத்துள்ளது.

எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன?

எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன?

கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கொடுத்த எண்ணெய் பத்திரங்கள் குறித்துப் பல கருத்துக்களை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முன்வைத்து வருகிறது. சரி எண்ணெய் பத்திரங்கள் என்றால் என்ன..? ஏன் சிதம்பரம் நிதியமைச்சர் கருத்து வியப்பு அளிக்கிறது எனக் கூறுகிறார்..?

எதற்காக எண்ணெய் பத்திரங்கள்

எதற்காக எண்ணெய் பத்திரங்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முந்தைய காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கும். இந்த மானிய தொகையை அரசு நிதி நெருக்கடியாக இருக்கும் காலகட்டத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பணமாக அளிக்காமல் பத்திரங்களாக வழங்கியது. இது தான் எண்ணெய் பத்திரங்கள்

எண்ணெய் பத்திரங்கள் முதிர்வு காலம்

எண்ணெய் பத்திரங்கள் முதிர்வு காலம்

இப்படி மத்திய அரசு வழங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்கள் 15 முதல் 20 ஆண்டுக் காலம் வரையில் முதிர்வு காலம் கொண்டது. இந்தப் பத்திரங்களுக்குக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குக் குறித்த தொகைக்கு வட்டி தொகையும் அரசு செலுத்த வேண்டும். காங்கிரஸ் அரசு சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மானிய தொகைக்குப் பத்திரங்களாக வழங்கியுள்ளது.

கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி

கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒன்றிய அரசு தனது பங்கிற்குக் கலால் வரியும், மாநில அரசு தனது பங்கிற்கு மதிப்புக் கூட்டு வரி (VAT) விதித்து வருகிறது.

100 ரூபாய் விலை கணக்கீடு

100 ரூபாய் விலை கணக்கீடு

இதன் படி ஒரு லிட்டர் விலை 100 ரூபாய் என்றால் பெட்ரோலுக்கு 58 சதவீதமும், டீசலுக்கு 52 சதவீதம் வரியாகவும் செலுத்த வேண்டியுள்ளது. வரியா வசூலிக்கப்படும் 58 ரூபாயில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு 32 முதல் 33 ரூபாய் வரியாக வருமானத்தைப் பெற்று வருகிறது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

மோடி அரசு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எவ்விதமான மானியமும் இல்லாமல் சர்வதேச சந்தை விலை அளவீட்டை வைத்துக் கணக்கிடத் துவங்கிய முதல் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்படுவது இல்லை. இதற்கு மாறாகக் காங்கிரஸ் கொடுத்த மானியத்தை முழுமையாக நீக்கிவிட்டு மொத்த தொகையும் மக்களிடமே வசூலிக்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 34.16 டாலரில் இருந்து 110 டாலர் வரையில் உயர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

ஆனால் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 7 வருடத்தில் அதாவது 2014 முதல் கச்சா எண்ணெய் விலை 109 டாலரில் இருந்து 78.85 டாலர் அளவிற்கு (ஜூன் 2021 சராசரி விலை) குறைந்துள்ளது.

வரி மற்றும் டீலர் கமிஷன் வித்தியாசம்

வரி மற்றும் டீலர் கமிஷன் வித்தியாசம்

2014க்கு முன் ஒரு லிட்டருக்கு வரி மற்றும் டீலர் கமிஷன் வாயிலாகக் காங்கிரஸ் அரசு 26.6 ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில் தற்போது 59.5 ரூபாய் வரியாக வசூலிக்கிறது மோடி தலைமையிலான பிஜேபி அரசு.

ரூ.3.35 லட்சம் கோடி வரி வருமானம்

ரூ.3.35 லட்சம் கோடி வரி வருமானம்

இதன் எதிரொலியாகப் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பு மூலம் ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையில் சுமார் 3.35 லட்சம் கோடி ரூபாய் வரி வருமானத்தை மத்திய அரசு பெற்று, 88 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது. 2020 நிதியாண்டில் நிதியாண்டில் இதன் அளவு வெறும் 1.78 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

எதற்காக அதிக வரி

எதற்காக அதிக வரி

கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட 1.3 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்களுக்குப் போதுமான நிதியைத் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 7 வருடத்தில் திரட்டப்பட்ட பின்னரும் எதற்காக அதிக வரி விதிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தான் ப.சிதம்பரம் அவர்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எப்படி எண்ணெய் பத்திரங்கள் தடையாக உள்ளது என வியப்புடன் கேட்கிறார்.

மக்களின் கேள்வி

மக்களின் கேள்வி

பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ஏற்கனவே உபரி வரி வருமானத்தைப் பெற்றுள்ள போதிலும் மக்கள் தலையில் ஏன் இன்னும் சமையை வைக்க வேண்டும் என்ற கேள்வி தான் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் தற்போது எழுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Diesel price cut by 20 paise after 32 days; PC tweets on FM oil bond statement

Why Diesel price cut by 20 paise after 32 days; PC tweets on FM oil bond statement
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X