பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை தேடி செல்கிறீர்கள் எனில், உங்களது கல்வி தரம், கம்யூனிகேஷன் உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் தான் இண்டர்வியூ மூலம், உங்களை தேர்வு செய்வார்கள்.
ஆனால் ஒருவரை பணிக்கு தேர்ந்தெடுக்கும் முன்பு நிறுவனங்கள் என்னென்ன விஷயங்களையெல்லாம் கவனிக்கும் தெரியுமா?
இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
டெல்லியில் எலக்ட்ரானிக் சிட்டி.. 80000 பேருக்கு வேலை..!

சமூக வலைதள பதிவுகளில் கவனம்
டிரடெண்ட் குழுமத்தின் தலைமை மனிதவள அதிகாரியான பூஜா பி லுத்ரா, HR கன்சல்டன்ஸி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றார். தற்போதைய காலக்கட்டங்களில் ஒரு ஊழியரை பணிக்கு தேர்வு செய்யும் முன்பு, அவர்கள் சமூக வலைதள பதிவுகளையும் பார்வையிடுவது பொதுவான ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார்.

ஏன் எதற்காக?
இவ்வாறு சமூக வலைதள பதிவுகளை பார்த்து பலரும் நிராகரிக்க படுகிறார்கள் என APAC நிறுவனத்தின் தலைவர் மணிஷ் சின்ஹா, இது அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பின்னணி, பெரு நிறுவன கலாச்சாரம் போன்ற அம்சங்களை பார்க்கும். இதன் மூலம் ஊழியர்களின் பின்னணியை நிறுவனங்கள் தெரிந்து கொள்கின்றன எனவும் சின்ஹா கூறியுள்ளார்.

எந்தெந்த துறைகள்
டெலிகாம், மீடியா, இன்சூரன்ஸ், நுகர்வோர் வங்கி, பணியாளர் நிறுவனங்கள், அக்கவுண்ட்ஸ் மற்றும் ஆடிட்டிங் நிறுவனங்கள் ஆகிவற்றில் தங்களது உயர்மட்ட வாடிக்கையாளர்களில் பலர் இந்தியாவில் இருப்பதாக கூறுகின்றார். மேலும் மின்சாரம் மற்றும் எரிவாயு, தனியார் ஈக்விட்டி மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களும், சமூக ஊடகங்களை கண்கானிப்பதில் முக்கிய பங்கு உள்ளவையாக உள்ளன.

என்னென்ன சமூக வலைதளங்கள்
இவர்கள் லிங்க்ட் இன் மற்றும் ட்விட்டர் ஆகியவை வழக்கமான சந்தேக நபர்களாகும். இதில் பேஸ்புக், இன்ஸ்டா கிராம் உள்பட சிலவும் பார்க்கப்படுகின்றது. இது தவிர சில துறைகளில் Pinterest, யூடியூப் உள்ளிட்ட தளங்களையும் பார்க்கின்றன. சில நிறுவனங்கள் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட சுயவிவரங்களை பார்த்தும் ஆய்வதாக ஒப்புக் கொள்கிறார்கள் என சுட்டிக் காட்டியுள்ளது.

பயம் வேண்டாம்
பொதுவாக இதுபோன்ற ஆராய்வுகள் எதிர்மாறாக காரணிகளை மட்டும் பார்ப்பதில்லை. நல்ல விஷயங்களையும் தோண்டி எடுக்கின்றனவாம். ஆக சமூக வலைதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தி வரும் எந்த நபரும் இது குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. மொத்தத்தில் புதியதாக வேலை தேடுபவராக இருந்தாலும், வேலை தேடுபவராக இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது நல்லது.