6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சற்று முன்பு வெளியிடப்பட்ட ஜிடிபி விகிதமானது பொருளாதார நிபுணர்கள் கணித்தது போலவே 4.5%மாக வீழ்ச்சி கண்டுள்ளது.

 

இந்த விகிதமானது எதிர்பார்த்தது தான் என்றாலும், ஏன் இதற்கு என்ன காரணம்? எந்தெந்த துறைகளில் எந்தளவு வீழ்ச்சி கண்டுள்ளது. என்பதை பற்றித் தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம்.

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி.. என்ன காரணம்..!

ஒரு புறம் ஏற்கனவே அரசுக்கு நெருக்கடி இருந்து வரும் நிலையில், இந்த ஜிடிபி விகிதமானது இன்னும் பிரச்சனைகளையே அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் மொத்த உற்பத்தி விகிதமானது 6 சதவிகிதம் இருந்தாலே பெரிய விஷயமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

கார் ஷோரூம்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், மற்றும் விவசாய உற்பத்தியின் பிரதிபலிப்பே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் கருதப்படுகிறது.

முந்தைய ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி விகிதம் 7.1 சதவிகிதமாக இருந்தது.எனினும் இது நடப்பு நிதியாண்டில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 5 சதவிகித இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விவசாயத்துறை வளர்ச்சி 2.1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது பருவமழை மிகவும் தாமதமான நிலையில், அதன் எதிரொலி உற்பத்தியிலும் காணப்பட்டது. இது இந்தியாவின் முக்கிய அறுவடை பருவமான கரீப் பருவத்தை மிக பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உற்பத்தி மிக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாட்டின் தொழிற்சாலை உற்பத்தியில் சுமார் முக்கால்வாசி 75% வகிக்கும் உற்பத்தி துறை, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 1 சதவிகிதம் சுருங்கியது. மேலும் கார்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற அபிலாஷைகள் பொருட்களின் கொள்முதலை மக்கள் தள்ளி வைக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதே சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் (சியாம்) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஜூலை செப்டம்பர் காலாண்டில் பயணிகள் வாகன விற்பனையானது 23.7 சதவிகிதம் சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

இதே வீட்டு செலவினங்களை அளவிடுவதற்கான இறுதி நுகர்வு செலவு (Private final consumption expenditure) செப்டம்பர் காலாண்டில் 5.06 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 9.8 சதவிகிதமாக இருந்துள்ளது.

இது தவிர மற்ற முக்கிய துறைகளிலும் மந்த நிலையே காணப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டில் ஜிவிஏ 3.3 சதவிகிதமாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 5.7 சதவிகிதமாக இருந்தது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 6.8 சதவிகிதமாக இருந்தது.

இதே ரியல் எஸ்டேட் துறையில் ஜிவிஏ 5.8 சதவிகிதமாக மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஜூன் காலாண்டில் 7 சதவிகிதமாக இருந்தது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 6.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்பரேட் வரி விகிதத்தை 30 சதவிகிதத்திலிருந்து, 22 சதவிகிதமாக குறைத்தது. இது புதியதாக அமைக்கப்படும் கார்ப்பரேட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் 15 சதவிகிதமாகவும் குறைத்தது. இது தவிர இன்னும் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அடுத்து வரும் காலாண்டுகளில் ஜிடிபி விகிதம் சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why GDP level falls to 4.5% in second quarter?

September quarter GDP level falls to 4.5%. Because of industries slowdown, particularly manufacturing sector very down, retail sales down, vehicle sales, automobile sector slump, farm growth down also lot of sectors put pressure in GDP.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X