வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரெசிஷன் நிறைந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது பணத்தை விரைவாகப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்போர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்றைய வர்த்தகத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு உள்ளதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என மக்கள் விழித்துக்கொண்டு உள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் கொரோன தொற்றுக் காலத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது பெரு முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது முதலீட்டைத் தங்கத்தின் மீது வைத்தனர்.

கிட்டதட்ட இதேபோன்ற சூழ்நிலை தான் தற்போது ரெசிஷன் காரணமாகத் தங்கம் மீது குவியத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த தங்கம் இன்று புதிய வரலாற்று உச்சத்தை அடைய என்ன காரணம்..?

வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை சொல்வது என்ன.. மக்களே உஷார்..! வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை சொல்வது என்ன.. மக்களே உஷார்..!

தங்கம் விலை

தங்கம் விலை

இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர மிகவும் முக்கியமான காரணம் அமெரிக்காவின் டிசம்பர் மாத தரவுகள் தான். அமெரிக்கா கடந்த சில மாதங்களாக ரெசிஷன் குறித்து அச்சப்படாமல் இருக்கும் வகையில் காட்டிக்கொண்டாலும், அமெரிக்க நிறுவனங்கள் அறிவிக்கும் பணிநீக்கம் வைத்து அதன் உண்மை முகத்தைப் பார்க்க முடிந்தது.

அமெரிக்காவின் டிசம்பர் மாத டேட்டா

அமெரிக்காவின் டிசம்பர் மாத டேட்டா

இந்த நிலையில் அமெரிக்காவின் டிசம்பர் மாத சில்லறை விற்பனை ஒரு வருடத்தில் மிகக் குறைவான அளவீட்டை எட்டியுள்ளது. அதே சமயம் உற்பத்தி அளவுகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடனுக்கான வட்டி

கடனுக்கான வட்டி

அவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் மொத்த வர்த்தக அமைப்பும் பண்டிகை காலத்தில் கூட மந்த நிலையைத் தழுவியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்

இந்த நிலையிலும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அதிகாரிகள், அந்நாட்டின் பணவீக்கம் உச்சத்தில் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டும் வேளையில் பொருளாதாரச் செயல்பாடுகள் மந்தமடைந்து வருவதால், வட்டி விகிதங்கள் 5% க்கு மேல் உயர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

அமெரிக்கப் பங்குச்சந்தை

அமெரிக்கப் பங்குச்சந்தை

இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் பெரும் பகுதி பணம் தற்போது தங்கம் மீது குவிந்துள்ளது. இதனால் தங்கம் விலை வாரத்தின் கடைசி நாளில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

56,746 ரூபாய்

56,746 ரூபாய்

இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 56,746 ரூபாய் வரையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு 56,588 ரூபாய் என்ற உச்ச நிலையை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MCX சந்தை

MCX சந்தை

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை மதியம் 2.30 மணிக்கு 0.28 சதவீதம் வரையில் அதிகரித்து 56,707 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.71 சதவீதம் வரையில் உயர்ந்து 68,845.00 ரூபாயாக உள்ளது.

ஸ்பாட் மார்கெட்

ஸ்பாட் மார்கெட்

இதேபோல் உள்நாட்டு ஸ்பாட் மார்கெட்டில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 56,777.00 ரூபாயாக உள்ளது, இதே போல் 1 கிலோ வெள்ளி விலை 68,352.00 ரூபாயாக உள்ளது. சர்வதேச ஸ்பார்ட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1936 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why gold rates today hits new life-time high of 56746 per 10 gm

Why gold rates today hits new life-time high of 56746 per 10 gm
Story first published: Friday, January 20, 2023, 15:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X