டிரென்டாகும் புதிய கிரிப்டோ 'சேஃப்மூன்'.. இந்தியர்கள் வாங்குவதற்கு ஏற்க சீப்பான காயின்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிட்காயினுக்குப் போட்டியாகவும், அதன் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகவும் தற்போது பல கிரிப்டோ கரன்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டோஜ்காயின் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில் பெரு முதலீட்டாளர்களும், ரீடைல் முதலீட்டாளர்களும் பிட்காயின் மற்றும் டோஜ்காயின் முதலீட்டுக்கு மாற்றாகப் புதிய முதலீடுகளைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இதன் வாயிலாக Barstool Sports நிறுவனத்தின் நிறுவனர் டேவ் போர்ட்னி பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேஃப்மூன் என்னும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளார்.

 டிவிட்டர் வீடியோ

டிவிட்டர் வீடியோ

இதுக்குறித்துத் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், தற்போது சந்தையில் பல கிரிப்டோ இருக்கும் நிலையில் முன்னணி கிரிப்டோவை விட்டுவிட்டு புதிய கிரிப்டோவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

 SafeMoon கிரிப்டோ

SafeMoon கிரிப்டோ

SafeMoon எனப்படும் இந்தக் கிரிடோவும் பிட்காயினுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட ஒரு மீம் காயின் தான், இதில் சுமார் 40000 அமெரிக்க டாலரை முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது முதலீட்டுக்குப் பின் சேஃப்காயினில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும், தொடர்ந்து சரிவு பாதையில் தான் உள்ளது.

 ரிஸ்க் எடுக்க ரெடியா..?

ரிஸ்க் எடுக்க ரெடியா..?

இதேபோல் சேஃப்மூன் கிரிப்டோவின் யார் முதலீடு செய்தாலும் ஆபத்துக்களை உணர்ந்து முதலீடு செய்யவும் டேவ் போர்ட்னி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். சரி சேஃப்மூன் காயின் விலை என்ன தெரியுமா..?!

 சேஃப்மூன் காயின் விலை
 

சேஃப்மூன் காயின் விலை

தற்போது ஒரு சேஃப்மூன் காயின் விலை 0.000006799 டாலர், கடந்த 24 மணிநேரத்தில் 0.00000891 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் 0.00050 பைசா. அதாவது ஒரு ரூபாய்க்கு 2000 சேஃப்மூன் காயின் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why is crypto SafeMoon trending? Whats is Safemoon price in India?

Why is crypto SafeMoon trending? Whats is Safemoon price in India?
Story first published: Wednesday, May 19, 2021, 16:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X