உஷாராக தங்கத்தில் கரன்சி வெளியிடும் நித்தியானந்தா! அவர் புத்திசாலி தான் போலருக்கே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விநாயகர் சதுர்த்தி, இதுவரை நாம் காணாத ஒன்றாகவே இருக்கிறது. வழக்கம் போல, தெருக்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியவில்லை.

Nithyananda ரிலீஸ் செய்த Kailasa Gold Currency மற்றும் Kailasa Gold Coins | Oneindia Tamil
 

கொரோனா வேறு தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தன் இஷ்டத்துக்கு தனி ரிசர்வ் பேங்கையே தொடங்கி கரன்சியைக் கூட அறிமுகப்படுத்திவிட்டார்.

அவர் அச்சிடும் நாணயத்தை சர்வதேச நாடுகள் ஏற்குமா? தங்கத்தின் கரன்சி வெளியிடுவதால் நித்தியானந்தாவுக்கு என்ன நன்மை? வாருங்கள் பார்ப்போம்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தன் கைலாசா நாட்டுக்கு தனி ரிசர்வ் வங்கியைத் தொடங்கி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அந்த வங்கியின் பெயர் "ஹிந்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா". இந்த வங்கி தான் கைலாசா நாட்டின் பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்குமாம். அதோடு கைலாசியன் டாலரையும் (Kailaasian dollar) அச்சிடப் போவதாகச் சொல்லி இருக்கிறார் நித்தியானந்தா.

தங்கத்தில் தான் டாலர்

தங்கத்தில் தான் டாலர்

ஹிந்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலாசா நாட்டின் டாலரை தங்கத்தில் அச்சிடப் போகிறார்களாம். ஒரு டாலர் ஒரு டோலா (11.66 கிராம்) எடை கொண்டதாக இருக்குமாம். இதை 25 டிசைன்களில், முந்தைய ஹிந்து தேச வரலாற்றை பிரதிபலிக்கும் விதத்தில் அச்சிடப்போவதாகச் சொல்லி இருக்கிறார். ஹிந்து மதத்தில் தங்கம் புனிதமான ஒன்று எனவும் சொல்லி இருக்கிறார் நித்தியானந்தா.

அழுத்தமாகச் சொல்லும் நித்தி
 

அழுத்தமாகச் சொல்லும் நித்தி

அனைத்து கரன்சிகளும் தங்கத்தில் தான் அச்சிடப்படும் என மீண்டும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். ஆக தங்கத்தை குறி வைத்து தான் மனிதர் தன் கரன்சியை களம் இறக்குகிறார். ஏன் தங்கத்தை நம்பி கரன்சி அச்சிடுகிறார். அப்படி தங்கத்துக்கு என்ன ஸ்பெஷல்? வாருங்கள் பார்ப்போம்.

தங்கத்தின் பலம்

தங்கத்தின் பலம்

மனித சமூகத்தில் கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான் அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் எல்லாம் புழக்கத்தில் இருக்கின்றன. இவைகள் வருவதற்கு முன், தங்கம், வெள்ளி போன்ற உலோகத்தை நம்பித் தான் வர்த்தகம் செய்தார்கள். அரசாங்கங்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் தான், தங்கள் நாணயங்களை அச்சிட்டார்கள். இன்று வரை தங்கம் ஒரு அச்சிடப்படாத கரன்சி என்கிற அந்தஸ்தை இழக்கவில்லை.

எதார்த்தத்தில் எப்படி

எதார்த்தத்தில் எப்படி

உதாரணத்துக்கு, யாரோ ஒரு நபர், 22 கேரட் சுத்தமான தங்க கட்டியை வைத்து, பணம் கேட்டால் நாம் தருவோமா மாட்டோமா? இந்திய அரசு, 1990 - 91 காலகட்டத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு அதிக கைவசம் இல்லாத போது, பன்னாட்டு நிதியத்திடம், தன் தங்கத்தை அடகு வைத்து டாலரை வாங்கியதா இல்லையா? இதே லாஜிக்கை தான் நித்தியானந்தாவும் புத்திசாலித் தனமாக பயன்படுத்த இருக்கிறார் போலிருக்கிறது.

ஒரு கைலாசா டாலர் = 58,859 இந்திய ரூபாய்

ஒரு கைலாசா டாலர் = 58,859 இந்திய ரூபாய்

11.66 கிராம் எடை கொண்ட தங்கத்தை வைத்து ஒரு கைலாசா டாலர் அச்சிடப்படும் என்கிறார் நித்தியானந்தா. சரி. இந்த 11.66 கிராம் தங்கம் 22 கேரட் தரம் கொண்டது என ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். சென்னையில், இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 5,048 ரூபாய் . ஆக கைலாசா நாட்டின் 11.66 கிராம் எடை கொண்ட ஒரு கைலாசா டாலரின் மதிப்பு 58,860 இந்திய ரூபாய். இப்படி எந்த நாட்டு கரன்சியையும், தங்கத்துடன் உடனடியாக ஒப்பிட்டு விடலாம் மதிப்பீடு (Valuation) பிரச்சனை இல்லை.

பரிமாற்றம் எளிதாக நடக்கும்

பரிமாற்றம் எளிதாக நடக்கும்

இப்போது கைலாசா நாட்டு டாலரை கையில் வைத்திருக்கும் ஒருவர், அதை உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று தனக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொள்ளலாம். கைலாசா நாட்டைச் சேர்ந்தவர்கள், கைலாசா டாலரை ஒரு கரன்சியாகப் பார்ப்பார்கள். ஆனால் மற்ற நாடுகளில் இருப்பவர்கள் கைலாசா டாலரில் இருக்கும் தங்கத்தைப் பார்ப்பார்கள். அது தான் தங்கத்தின் பலம். ஆனால் நம் நித்தி "பாத்தீங்களா, என் கரன்சிய எல்லாரும் பயன்படுத்துறாங்க" என வருங்காலத்தில் சொன்னாலும் சொல்லுவார்.

வேறு கரன்சிக்கு கூட மாற வாய்ப்பு

வேறு கரன்சிக்கு கூட மாற வாய்ப்பு

இப்படி எத்தனை நாளுக்குத் தான் தங்கத்தை வைத்தே ஓட்டுவது, மற்ற நாட்டு கரன்சிகள் எல்லாம் வேண்டாமா? அப்போது தானே சட்டென பணத்தைக் கொடுத்து கைலாசா நாட்டுக்குத் தேவையானதை வாங்க முடியும்? அதற்கும் வழி இருக்கிறது.

உதாரணமாக கைலாசா நாட்டுக்கு அமெரிக்க டாலர் தேவை வருகிறது என வைத்துக் கொள்வோம். 3 கைலாசா டாலரை விற்றால் (34.98 கிராம் தங்கம்) சுமாராக 1,940 அமெரிக்க டாலர் அசால்டாக கிடைத்துவிடும். 1 ட்ராய் அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்தின் சர்வதேச விலை 1,940 அமெரிக்க டாலர்.

அங்கீகாரப் பிரச்சனையே இல்லை

அங்கீகாரப் பிரச்சனையே இல்லை

இப்படி தங்க கரன்சியை விற்று அமெரிக்க டாலரையே வாங்க முடியும் என்றால், மற்ற நாட்டு கரன்சிகளையும் இதே போல அசால்டாக வாங்க முடியுமே! பிறகு என்ன பிரச்சனை. குறிப்பாக புதிய கரன்சியை மற்ற நாடுகள் நம்பி வாங்கவோ அங்கீகரிக்கவோ யோசிக்கலம். ஆனால் தங்கத்தை சட்டென வாங்கிக் கொள்வார்களே. எனவே அங்கீகரிக்கும் பிரச்சனையே கைலாசா டாலருக்கு வராது எனலாம். நித்திஜி மெய்யாலுமே புத்திசாலி தான் போலருக்கே! ஜெகதம் நித்தியானந்தாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why nithyananda launch his currency based on gold? what are the advantages?

Nithyananda launched his Hindu Reserve Bank of Kailaasa and launched Kailaasian dollar based on 11.66 gram of gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X