கடனை வாங்கிவிட்டு வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல் அலைகழிப்பு..லாக்டவுனுக்கு முன்பே அப்படி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேண்டும் என்றே கடனை திரும்ப செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

அதுவும் கொரோனா லாக்டவுனுக்கு முன்பே இந்த விகிதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

ஒரு நிறுவனமோ அல்லது தனி நபரோ கடனை திரும்ப செலுத்தும் திறன் இருந்தபோதிலும் கூட, கடனை திரும்ப செலுத்தாமல் இருப்பவர்களைப் பற்றித் தான் நாம் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

கடன் நிலுவை

கடன் நிலுவை

இது குறித்து கடன் வழங்குனர்கள் 1,251 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் 24,765.5 கோடி ரூபாயினை மீட்டெடுக்க வேண்டியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இந்த விகிதமானது கடனை வாங்கிவிட்டு வேண்டுமேன்றே கடனை திரும்ப செலுத்தாமல் அலைகழித்து வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த தொகையானது அதிகரித்து கொண்டே வருவதையும் காண முடிகிறது. இந்த தரவில் 1 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாதவர்கள் பரீசிலிக்கப்பட்டுள்ளனர்.

லாக்டவுனால் பாதிப்பு

லாக்டவுனால் பாதிப்பு

ஏற்கனவே கொரோனாவால் இயல்பு நிலை பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இன்னும் பல இடங்களில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் கடன்களை திரும்ப செலுத்துவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

திவால் நிலையும் முயற்சியும் தள்ளிப்போகிறது
 

திவால் நிலையும் முயற்சியும் தள்ளிப்போகிறது

மேலும் இந்த லாக்டவுன் காரணமாக ஏற்கனவே திவால் நிலைக்கு தள்ளப்பட்டு பரீசிலனை செய்யப்பட்டு வந்ததும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இதன் வசூல் செய்யப்படும் தொகைகளையும் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. முன்னதாக திவால் நிலையை பற்றிய ஒரு அச்சம் இருந்து வந்தது. ஆனால் அது தற்போது இல்லை என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் அதிகரிப்பு

பொதுத்துறை வங்கிகளில் அதிகரிப்பு

ஆக இப்படி வேண்டுமென்றே கட்ட தவறிய கடன் தொகையானது பொதுத்துறை வங்கிகளில் 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதே தனியார் துறையில் இது வெறும் 17.7 சதவீதமாக மட்டுமே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொகையாக பொதுத்துறை வங்கிகளில் 20,310.7 கோடி ரூபாயாகவும், இதே தனியார் வங்கிகளில் 4,378.7 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதே வெளிநாட்டு வங்கிகளில் 76.2 கோடி ரூபாயும் உள்ளது.

அதிகரித்து வரும் நெருக்கடி

அதிகரித்து வரும் நெருக்கடி

தற்போது நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலையானது வணிக வளர்ச்சியினை ஒற்றை இலக்கில் வைத்துள்ளது. இதன் காரணமாக கடன்கள் திரும்ப செலுத்துவது தற்காலிகமாக தடைபெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் தடை காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், நிலையாக உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

வங்கிகளுக்கு அழுத்தம்

வங்கிகளுக்கு அழுத்தம்

ஹெச் டி எஃப்சி செக்யூரிட்டீஸின் ஜூன் 25 அறிக்கையின் படி, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மோசமான கடன் அல்லது வாரக்கடன் விகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆக இது இன்னும் வங்கிகளுக்கு மேலும் அழுத்ததினை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wilful defaulters increased before coronavirus lockdown

Wilful defaulters.. Number of Wilful defaulters increased before coronavirus lockdown. Its increased in Public sector banks accounted for around 82% of the total increase in wilful defaulter amounts, and Private sector banks accounted for 17.7%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X