திவால் ஆகும் டிஹெச்எப்எல் நிறுவனம்.. பணம் போட்டவர்களுக்கு திரும்ப கிடைக்குமா? என்ன வாய்ப்பு இருக்கு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் (டிஹெச்எப்எல்) மீது ரிசர்வ் வங்கி திவால் நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில், அந்த நிறுவனத்தில் போட்டு சேமித்து வந்த வைப்புத்தொகையாளர்கள் ரூ .6,000 கோடி சேமிப்பை இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு மொத்தம் ரூ .83,900 கோடி கடன் உள்ளது. இதில் அந்தநிறுவனத்தில் 7 சதவீத பொதுமக்களின் வைப்புத்தொகையும் அடக்கமாகும். கடன் பத்திரங்கள் என்ற வகையில் 37 சதவீதமும், வங்கிகளிடம் இருந்து 31 சதவீதமும் கடன் வாங்கி உள்ளது.

டிஹெச்எப்எல் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் 50,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. போலி நிறுவனங்களின் பெயரில் ஆயிரக்கணக்கில் கடன் வழங்கியதாகப் பதிவு செய்துள்ளதாம். இதேபோல பல்வேறு மோசடி புகார்கள் இந்த நிறுவனத்தின் மீது வந்துள்ளது.

ஜியோ, ஏர்டெல் வரிசையில் டிசம்பர் 1 முதல் கட்டண உயர்வு.. பிஎஸ்என்எல் திட்டம்

கட்டுப்பாட்டில்

கட்டுப்பாட்டில்

இதனால் டிஹெச்எப்எல் நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுக்க ஆர்பிஐ முடிவு செய்திருக்கிறது. அதற்காக நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

நிர்வாகம் செய்ய

நிர்வாகம் செய்ய

ரிசர்வ் வங்கி சார்பில் இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆர். சுப்பிரமணிய குமாரை நேற்று நியமனம் செய்துள்ளது,

தவிப்பில் உள்ளார்கள்

தவிப்பில் உள்ளார்கள்

இந்த சூழலில் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணம் போட்டு சேமித்து வந்த மக்கள் , அந்நிறுவனத்தில் சுமார் ரூ .6,000 கோடியை வைப்புத்தொகையாக வைத்துள்ளார்கள். இப்போது திவால் நடவடிக்கை எடுக்கப்படுவதால் போட்ட பணம் திரும்ப கிடைக்குமா என்று ஒவ்வொரு வைப்புத்தொகையாளர்களும் தவிப்பில் உள்ளார்கள்

பணம் செலுத்துவதில்
 

பணம் செலுத்துவதில்

வங்கிகள், கடன் பத்திரதாரர்கள் மற்றும் வெளிப்புற வணிக கடன் வாங்குபவர்கள் உட்பட அனைத்து கடன் வழங்குநர்களும். கடனாளிகளுக்கு பணம் செலுத்துவதில் ஏற்கனவே ஒரு முடக்கம் உள்ளது.

இடைக்கால தடை

இடைக்கால தடை

இந்நிலையில் "ரிசர்வ் வங்கி திவால் நடவடிக்கைகாக என்சிஎல்டிக்கு விண்ணப்பத்தை தாக்கல் செய்வதன் மூலம், ஒரு இடைக்கால தடை விதிக்கப்படும், இது அனைத்து பரிவர்த்தனைகளும் தடைபடும். அத்துடன் டெபாசிட் வைத்திருப்பவர்களையும் இது கட்டுப்படுத்தும் என்கிறார் எஸ்.என்.ஆர் அசோசியேட்ஸ் பங்குதாரர் சுதீப் மகாபத்ரா.

இது தான் சிறந்தது

இது தான் சிறந்தது

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வைப்பு தொகை வைத்திருப்பவர்கள் உச்ச நீதிமன்றம் செல்லலாம். உச்ச நீதிமன்றம் வைப்புத்தொகையாளர்களுக்கு சிறிது நிவாரணம் வழங்க முடியும். எனவே டொபசிட்தார்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே சிறந்தது என்றும் சுதீப் மகாபத்ரா.கூறினார்.

தீர்வு கேட்கலாம்

தீர்வு கேட்கலாம்

டிஹெச்எஃப்எல் நிலையான வைப்புத்தொகையாளர்களால் திவால் நடவடிக்கை காரணமாக கடன் தீர்வு தீர்ப்பாயத்தில் உதவி கேட்க முடியாது. எனவே கடன் கொடுத்தவர்களுடன் இணைந்து ஒரு பகுதி பேர் உச்சநீதிமன்றத்தில் நீதி கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் சுதீப் மகாபத்ரா கூறினார்.

மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை உயர்நீதிமன்றம்

டிஹெச்எஃப்எல் பொது வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதையும், ஏற்கனவே உள்ள வைப்புத்தொகையை புதுப்பிப்பதையும், மே 21 முதல் வைப்புத்தொகையை முதிர்ச்சியடையச் செய்வதையும் நிறுத்தியது. அத்துடன் அக்டோபர் 10 ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னர், அனைத்து கடனாளிகளுக்கும் பணம் செலுத்துவதையும் டி.எச்.எஃப்.எல் நிறுத்தியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: dhfl
English summary

Will DHFL depositors get their money back ? After the Reserve Bank of India superseded

.Will DHFL depositors get their money back ? After the Reserve Bank of India superseded the board of Dewan Housing Finance, the deposit holders with overall exposure of Rs 6,000 crore are at risk of losing their savings.
Story first published: Friday, November 22, 2019, 12:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X