கொரோனாவின் வருகைக்கு பிறகு பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வேறு வழியின்றி வீட்டில் இருந்து பணியாற்ற கூறின. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் குறைந்து, ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர்.
ஆனால் இந்த நிலையிலும் கூட வீட்டில் இருந்து பணிபுரிவது தொடரலாம் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
மேலும் ஹைப்ரிட் கலாச்சாரம் என்பது தொடரும் என கூறியுள்ளார்.
ஒரே வாரத்தில் 2.62 லட்சம் கோடி இழப்பு கண்ட 9 நிறுவனங்கள்.. பலத்த அடி வாங்கிய பஜாஜ் பைனான்ஸ்..!

டெக் மகேந்திராவின் கையகப்படுத்தல்
சமீபத்தில் மஹிந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான டெக் மஹிந்திரா, ஆக்டிவஸ் கனெக்ட் (Activus Connect) என்ற நிறுவனத்தை 62 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. இந்த கையகப்படுத்தல் மூலம் நிறுவனம் மேற்கொண்டு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் திறனை மேம்படுத்தும். இது வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தும்.

திறனை மேம்படுத்தும்
சந்தையில் தற்போது டிஜிட்டல் தேவையானது அதிகரித்துள்ள நிலையில், அதிவேக தேவை உள்ளது என, டெக் மகேந்திராவின் BFSI மற்றும் HLS கார்ப்பரேட் மேம்பாட்டு தலைவர் விவேக் அகர்வால் கூறியுள்ளார். மேலும் ஆக்டிவஸ்-ன் கையகப்படுத்தலானது தனித்துவமான டெலிவரி மாடல் மற்றும் அதன் தளத்தில் உள்ள இடைவெளியை போக்கும். இது டெக் மஹிந்திராவின் சேவைக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளார்.

பிளெக்ஸி பணி கலாச்சாரம்
இது குறித்து ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா, கொரோனாவுக்கு பிறகு வீட்டிலிருந்து வேலை செய்யப்போவது தொடரலாம். சில வகையான கலப்பின வேலை கலாச்சாரம் சந்தையில் நிலைத்திருக்கும். இது வீட்டில் இருந்து பணிபுரியும் கலாச்சாரத்தினை மேம்படுத்தும். இதற்கிடையில் ஆக்டிவஸின் கையகப்படுத்தல் இன்னும் WFH கலாச்சாரத்தினை மேம்படுத்த உதவும் என கூறியுள்ளார்.

பிளெக்ஸி பணி கலாச்சாரம்
மஹிந்திரா நிறுவனம் வீட்டிலிருந்து வேலை மற்றும் அலுவலகம் சென்று பணிபுரியும், ஒரு பிளெக்ஸி பணி கலாச்சாரத்தினை ஊக்குவிக்கும் வகையில் ஆதரவு கொடுத்து வருகின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ட்வீட்டில் ஆனந்த் மஹிந்திரா, கொரோனாவிற்கு பின்பும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது அதிகமாக இருக்கலாம் என நம்புவதாக கூறியிருந்தார்.