இந்தியாவில் தற்போது work from home அனைத்துத் தரப்பு நிறுவனங்களுக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அதிகளவிலான பொறுப்பு ஏற்கும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டமைப்பு மூலம் யாருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது, என்றும் நிறுவனங்கள் ஊழியர்களை அரசு அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப பணிக்காலம் மற்றும் இதர விஷயங்களை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்க முடியும்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது மிகவும் அடிப்படை ஒன்றாக மாறியுள்ள நிலையில் இதற்காக அரசு விதிமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது மட்டும் அல்லாமல் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஹைப்ரிட் வர்த்தக முறையைப் பின்பற்றும் காரணத்தாலும் இந்த விதிமுறை மாற்றம் மிகவும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் உள்ளது.

ஊழியர்களுக்கு நன்மை
மத்திய அரசு உருவாக்கி வரும் புதிய work from home கட்டமைப்பில் ஊழியர்களுக்கு நிலையான வேலைநேரம் நிர்ணயம் செய்வது, மின்சாரம் மற்றும் இண்டர்நெட் பயன்பாட்டுக்கான கட்டணத்தை நிறுவனம் ஏற்பது போன்ற முக்கியமான விஷயங்கள் இடம்பெற உள்ளது.

ஆலோசனை
இந்தியாவில் work from home-ஐ ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசும், அதிகாரிகளும் ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளனர். இது வரும் காலத்தில் கட்டாயமான ஒன்றாக மாற உள்ளது என்பதால் அரசின் ஒழுங்குமுறை நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக உள்ளது.

கொரனாவுக்குப் பின்பு
மத்திய அரசு work from home-ஐ ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான பணிகளைச் செய்ய ஒரு கன்சல்டன்சி அமைப்புடன் இணைந்துள்ளது. கொரனாவுக்குப் பின்பு மக்களின் பணிகளில் ஏற்பட்டு உள்ள மாற்றம், அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேவைத்துறை
மத்திய அரசு 2021 ஜனவரி மாதம் சேவைத்துறையில் இருக்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை முறைப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வமான அரசு ஆணையை வெளியிட்டது. இதனால் இத்துறை நிறுவனங்கள் பெரிய அளவில் வீட்டில் இருந்து பணியாற்றத் துவங்கியுள்ளனர், குறிப்பாகக் கொரோனா தொற்று குறைந்தும் தொடர்ந்து ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள்.

போர்ச்சுகல்
மத்திய அரசுக்கான புதிய work from home ப்ரேம்வொர்க் நடைமுறைக்கு வந்தால் ஊழியர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். சமீபத்தில் போர்ச்சுகல் நாட்டில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களைப் பாதுகாக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.