திருமணமான பெண்களுக்கு Work From Home ஒரு ஜாக்பாட்.. கொரோனா கொடுத்த வரப்பிரசாதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றும் வாழ்வில் மறக்க முடியாத பல மோசமான நிகழ்வுகளையும், நினைவுகளையும் அளித்தாலும் சில நல்ல விஷயங்களையும் அளித்துள்ளது.

 

வீட்டில் பெற்றோர் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்தார் போல் ஒரு 10 நாள் இருக்க முடியாதா என்ற ஏகத்துடன் இருந்த பலருக்கு மிகப்பெரிய வாய்ப்பை இந்தக் கொரோனா லாக்டவுன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதேபோல் திருமணத்திற்குப் பின்பு குடும்பம், குழந்தையின் காரணமாக வேலையை விடும் பெண்களுக்கு இந்தக் கொரோனா லாக்டவுன் கொடுத்த மிகப்பெரிய ஜாக்பாட் தான் Work from home.

Work from Home ஆப்ஷன்

Work from Home ஆப்ஷன்

இந்திய ஐடி, டெக், டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் எவ்விதமான பாதிப்பும் இல்லை என உணர்ந்துள்ள நிர்வாகங்கள் தற்போது அதிகளவிலான பெண்களை Work from Home ஆப்ஷன் உடன் நிறுவனங்கள் பணியில் சேர்க்கத் துவங்கியுள்ளது.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்-க்கு பின்பு இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பம் செய்யும் திருமணம் ஆன பெண்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் Work From Home ஆப்ஷன் கொடுக்கப்படும் காரணத்தால் திருமணத்திற்குப் பின் வேலையை விட்ட பெண்களும், புதிதாக வேலைக்குச் செல்ல விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருமணம் ஆன பெண்கள்
 

திருமணம் ஆன பெண்கள்

Work From Home ஆப்ஷன் இருக்கும் காரணத்தால் திருமணம் ஆன பின்பும் பெண்கள் வீட்டில் இருந்து பணியாற்ற முடியும் என்பதால் வீட்டை சிறப்பாக நிர்வாகம் செய்யும் பெண்கள் தற்போது வேலைக்கும் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இது பெண்களுக்கு அதிகப்படியான சுமை என்றாலும் விருப்பத்தோடு ஏற்கின்றனர்.

முக்கியமான ஆய்வு

முக்கியமான ஆய்வு

இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட Avtar குரூப் டிசம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலத்தில் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பம் செய்த பெண்கள் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வை வெளியிட்டு உள்ளது.

20 சதவீதம் பெண்கள்

20 சதவீதம் பெண்கள்

இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ள பெரும் பகுதியினர் 25 முதல் 35 வயதுடையவர்கள் தான், மேலும் மொத்த விண்ணப்பங்களில் 44 சதவீதம் பேர் தங்களது கரியரில் மிட் லெவலில் இருப்பவர்கள். 20 சதவீதம் பேர் திருமணத்திற்குப் பின் வேலையை விட்டு பிரேக் எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான மாற்றம்

முக்கியமான மாற்றம்

கடந்த வருடத்தின் இதே டிசம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலத்தை ஒப்பிடுகையில், இந்த வருடம் கரியர் பிரேக் உடன் புதிய வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்தியா போன்ற வளரும் சமுகத்திற்கு இந்த மாற்றம் மிகவும் முக்கியமானது என அனைவராலும் நம்பப்படுகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீர்கள்.?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Work from home helps married women back to Work: Thanks to lockdown

Work from home helps married women back to Work: Thanks to lockdown
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X