உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் 'இது'தான்.. இந்தியாவின் நிலை என்ன தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022ஆம் ஆண்டுக் கொரோனா மற்றும் ஒமிக்ரான் அச்சத்தில் துவங்கியிருந்தாலும், அனைத்து நாடுகளும் புத்தாண்டை மிகவும் நம்பிக்கை உடன் துவங்கியுள்ளது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலை ஹென்லி வெளியிட்டுள்ளது.

 

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 17 வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டதில் இருந்து 2022ல் வெளியிட்ட பட்டியலில் தான் குளோபல் மொபிலிட்டி கேப் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதேவேளையில் இரு நாடுகளின் பயணச் சுதந்திரத்தைக் கொண்டாடியுள்ளது.

Bitcoin: 5 மாத சரிவில் இருந்து மீண்டது.. திரும்பவும் 42,000 டாலர்..!

 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்

உலக நாடுகளில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பல பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் ஆய்வில் இந்தக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் கணக்கிடப்பட்டு உள்ளது முன்கூட்டியே விளக்கம் அளித்துள்ளது.

 ஜப்பான், சிங்கப்பூர்

ஜப்பான், சிங்கப்பூர்

2022 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் கொண்டவர்கள் விசா இல்லாமல் (முன்கூட்டியே விசா பெறத் தேவையில்லை) சுமார் 192 நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என்ற நிலையை எட்டியுள்ளது. இதனால் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்டு நாடுகளாக ஜப்பான், சிங்கப்பூர் விளங்குகிறது. அப்போ இந்தியா...?

இந்தியா
 

இந்தியா

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியா தனது பாஸ்போர்ட் மதிப்பீட்டை மேம்படுத்தியுள்ளது, 2021-இல் 90வது இடத்தில் இருந்த நிலையில் 2022 முதல் காலாண்டில் 7 இடங்கள் முன்னேறி 83வது இடத்தைப் பிடித்துள்ளது.

 83வது இடம்

83வது இடம்

2021 ஆம் ஆண்டில், 58 நாடுகளுக்கு மட்டுமே இந்திய பாஸ்போர்ட்-க்கு முன்கூட்டியே விசா பெறாமல் On Arrival visa பெற கூடிய வசதி இருந்தது. தற்போது ஓமன் மற்றும் ஆர்மீனியா ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டு 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய அந்தஸ்தைப் பெற்ற காரணத்தால் 83வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய பாஸ்போர்ட்.

 டாப் 5 இடங்கள்

டாப் 5 இடங்கள்

ஜப்பான், சிங்கப்பூர் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் அளவிற்கு உயர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், 190 நாடுகள் உடன் 2வது இடத்தை ஜெர்மனி, தென் கொரியா பெற்றுள்ளது. 189 நாடுகள் உடன் 3வது இடத்தைப் பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், 188 நாடுகள் உடன் ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் 4வது இடத்தையும், 187 நாடுகள் உடன் அயர்லாந்து, போர்ச்சுகல் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.

 அமெரிக்கா, பிரிட்டன்

அமெரிக்கா, பிரிட்டன்

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் 186 நாடுகள் உடன் 2022 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. இதே 6வது இடத்தை அமெரிக்கா, பிரிட்டன் உடன் பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பங்குப்போட்டுக் கொண்டு உள்ளது.

 மோசமான நாடுகள்

மோசமான நாடுகள்

2022 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியலில் சுமார் 199 நாடுகளின் பாஸ்போர்ட் சக்தியை ஆய்வு செய்து இப்பட்டியலை வெளியிட்டு உள்ளது. இப்பட்டியலில் கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஆப்கானிஸ்தான் கடைசி இடம்

ஆப்கானிஸ்தான் கடைசி இடம்

  • 104வது இடத்தில் வட கொரியா (39 நாடுகள் மட்டுமே)
  • 105வது இடத்தில் நேபாளம் மற்றும்   பாலஸ்தீனிய பிரதேசங்கள் (37 நாடுகள்   மட்டுமே)
  • 106வது இடத்தில் சோமாலியா (34 நாடுகள் மட்டுமே)
  • 107வது இடத்தில் ஏமன் (33 நாடுகள் மட்டுமே)
  • 108வது இடத்தில் பாகிஸ்தான் (31 நாடுகள் மட்டுமே)
  • 109வது இடத்தில் சிரியா (29 நாடுகள் மட்டுமே)
  • 110வது இடத்தில் ஈராக் (28 நாடுகள் மட்டுமே)
  • 111வது இடத்தில் ஆப்கானிஸ்தான் (26 நாடுகள் மட்டுமே)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's most powerful passports in 2022: Check India and Afghanistan ranking

World's most powerful passports in 2022: Check India and Afghanistan ranking உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் 'இது'தான்.. இந்தியாவின் நிலை என்ன தெரியுமா..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X