புதிய அவதாரம் எடுக்கும் சீனா.. ஏற்றுமதியை நம்பி இனி காலம் தள்ள முடியாது.. சீன அதிபர் கவலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று உலகமே அல்லாடிக் கொண்டு இருகிறது எனில் அதற்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு காரணம் எனலாம். ஏனெனில் இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமியை, முதன் முதலாக தோற்றுவித்தது சீனா தான்.

 

இதற்கிடையில் இன்று உலகம் முழுவதும் கொரோனா காரணமாக, விநியோக சங்கிலி பாதிப்பு மற்றும் தேவை பாதிப்பு உள்ளிட்டவற்றால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

இதனால் உலகின் பல நாடுகள், இனி ஏற்றுமதி இறக்குமதியினை மட்டும் நம்பியிருக்க முடியாது என, மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

உலகளாவிய ஏற்றுமதியினை நம்ப முடியாது

உலகளாவிய ஏற்றுமதியினை நம்ப முடியாது

அந்த வகையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவே தற்போது அதனை தெரிவித்துள்ளது தான் மிகப்பெரிய ஆச்சரியமே. உலகளாவிய ஏற்றுமதியைப் பொறுத்து சீனா தனது முந்தைய பொருளாதார மேம்பாட்டு மாதிரியை இனி நம்பியிருக்க முடியாது. தொழில்துறை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுயகட்டுப்பாட்டுடன் கூடிய, பாதுகாப்பான மற்றும் நம்பகமான உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக முறையை உருவாக்க வேண்டும் என்றும் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இலக்கினை அடைய திட்டம்

இலக்கினை அடைய திட்டம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான நிறைவு அமர்வு, தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு மற்றும் நீண்ட காலத்திற்கான 14-வது ஐந்தாண்டு திட்டத்தை (2021 - 2025) வகுப்பதற்கான தனது திட்டங்களை ஏற்றுக் கொண்டது. இது 2035ம் ஆண்டின் அடைய வேண்டிய இலக்குகளை முன் வைத்து திட்டங்களை வகுக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

நுகர்வை அதிகரிக்க திட்டம்
 

நுகர்வை அதிகரிக்க திட்டம்

சீனாவின் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பல்வேறு காரணங்களால் சரிந்து வரும்நிலையில், நுகர்வை அதிகரிப்பதற்காக நாட்டின் உள்நாட்டு சந்தையை பெருமளவில் மாற்றியமைக்க, 14'வது ஐந்தாண்டுத் திட்டம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விஷன் 2035 ஒரு நீண்டகால திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் சீனா மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டிலேயே நுகர்வினை அதிகரிக்க முடியும். இதன் மூலம் வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்

ஜின்பிங் சக்தி வாய்ந்த மனிதர்

ஜின்பிங் சக்தி வாய்ந்த மனிதர்

இதற்கிடையே அரசியல் ரீதியாக, அதிபர் ஜின்பிங்கின் விஷன் 2035 திட்டம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும் என்ற ஊகத்தையும் காட்டுகிறது. 67 வயதான ஜின்பிங் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார். அக்கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்குப் பிறகு, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி மற்றும் இராணுவத் தலைவர் பதவிகளை வகித்து வாழ்நாள் முழுவதும் பதவியில் இருப்பார் என்றும் என்டிடிவி தளத்தில் வெளியான செய்தியொன்றில் கூறப்பட்டுள்ளது.

வளர்ச்சியினை அடைய திறவுகோல்

வளர்ச்சியினை அடைய திறவுகோல்

ஜின்பிங் முந்தைய மாதிரியை நாம் மீண்டும் செய்யக்கூடாது. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் இறக்குமதி மாற்றீட்டை மேம்படுத்துவதற்காக புதிய தொழில்துறை விநியோக சங்கிலியை வடிவமைக்க முயற்சிக்க வேண்டும். இது விநியோக கட்டமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கும், வளர்ச்சியினை அடைவதற்கான திறவுகோல் எனவும் கூறியுள்ளார்.

மாற்றினைக் கொண்டிருக்க வேண்டும்

மாற்றினைக் கொண்டிருக்க வேண்டும்

சீனாவின் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய, பாதுகாப்பான மற்றும் நம்பகமான உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியை உருவாக்க வேண்டும், முக்கியமான தயாரிப்புகள் மற்றும் விநியோக சேனல்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாற்று மூலத்தைக் கொண்டிருக்க நாம் மேலும் முயற்சிக்க வேண்டும் என்று ஜின்பிங் கூறியுள்ளார்.

ஜின்பிங் எச்சரிக்கை

ஜின்பிங் எச்சரிக்கை

அது மட்டும் அல்ல, தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலியின் முக்கியத்துவத்தையும் ஜின்பிங் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கும், சீனாவின் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலி ஒரு முக்கியமான தருணத்தில் சீர்குலைக்கப்படக்கூடாது எனவும் ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சார்பினை குறைக்க திட்டம்

சார்பினை குறைக்க திட்டம்

சர்வதேச அளவிலான கொரோனா தாக்கம், அமெரிக்காவுடனான வர்த்தக யுத்தம், சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஹவாய் மற்றும் சில நாடுகளில் டிக்டாக் போன்றவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் சீனாவின் வர்த்தக பொருளாதாரத்தில் சற்று பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவுடனான மோதலும், இந்த பிரச்சினையை சீனாவுக்கு மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. ஆக இந்த பிரச்சனைக்கு மாற்றாக சீன இப்படி திட்டமிட்டிருக்கலாம். அதாவது உள்நாட்டு சந்தையை வலுபடுத்த திட்டமிடலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xi jinping said China can no longer rely on old model of development, its time for change

China’s president Xi jinping said China can no longer rely on old model of development, its time for change
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X