சியோமி-யின் புதிய அறிமுகம்.. 'ரெட்மி ஸ்மார்ட் டிவி' விலை ரொம்பக் கம்மி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய எலக்ட்ரானிக்ஸ் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனமான சியோமி. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், தனது பிராண்ட் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் சியோமி தற்போது புதிதாக ரெட்மி பிராண்ட் கீழ் புதிதாக ஸ்மார்ட் டிவி-யை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

 

இப்புதிய ரெட்மி டிவி மூன்று ஸ்கிரீன் அளவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. இந்தியாவில் தற்போது மக்கள் அதிகம் விரும்பும் 65 இன்ச், 55 இன்ச், 50 இன்ச் ஆகிய 3 திரை அளவு கொண்டு ஸ்மார்ட் டிவி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஆன்லைன் விற்பனை

ஆன்லைன் விற்பனை

இந்த ஸ்மார்ட் டிவி மார்ச் 26ஆம் தேதி இரவு 12 மணி முதல் விற்பனைக்குச் செய்யப்பட உள்ளது, எப்போதும் போலவே சியோமி தனது விற்பனை தளமான Mi.com இணையதளத்தில் விற்பனை செய்ய உள்ளது.

அமேசான் மற்றும் ரீடைல் விற்பனை

அமேசான் மற்றும் ரீடைல் விற்பனை

இதனுடன் கூடுதலாக அதிக வாடிக்கையாளர்களை அடைய வேண்டும் என்பதற்காக அமேசான் ஷாப்பிங் தளத்திலும் சியோமி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவியை விற்பனை செய்ய உள்ளது. இதுமட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக Mi ஹோம், Mi ஸ்டூடியோ ஆகியவற்றிலும் விற்பனை செய்ய உள்ளது.

ரெட்மி ஸ்ம்ர்ட் டிவி விலை
 

ரெட்மி ஸ்ம்ர்ட் டிவி விலை

ரெட்மி ஸ்ம்ர்ட் டிவி எக்ஸ் 65 இன்ச் 57,999 ரூபாய்க்கும்

ரெட்மி ஸ்ம்ர்ட் டிவி எக்ஸ் 55 இன்ச் 38,999 ரூபாய்க்கும்

ரெட்மி ஸ்ம்ர்ட் டிவி எக்ஸ் 50 இன்ச் 32,999 ரூபாய் விலையில் சியோமி தனது விற்பனையைத் துவங்க உள்ளது.

தள்ளுபடி சலுகை

தள்ளுபடி சலுகை

இவை அனைத்திற்கும் மேலாக மார்ச் 26ஆம் தேதி ரெட்மி ஸ்ம்ர்ட் டிவி-யை வாங்கும் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக 2000 ரூபாய் தள்ளுபடியை அறிவித்துள்ளது சீன நிறுவனமான சியோமி.

ரெட்மி ஸ்ம்ர்ட் டிவி டெக்

ரெட்மி ஸ்ம்ர்ட் டிவி டெக்

இந்தப் புதிய ரெட்மி ஸ்ம்ர்ட் டிவியில் 4K HDR, Vivid Picture Engine, HDR 10+, டால்பி விஷன், 30W டால்பி ஆடியோ ஸ்பீக்கர் ஆகியவை உள்ளது. மேலும் இவை அனைத்தும் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தில் இயங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி

இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் டிவி அல்லது LED/LCD டிவி வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 70,000 ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆனால் சியோமி தனது ஸ்மார்ட் டிவி-யை அறிமுகம் செய்த பின்பு 55 இன்ச், 65 இன்சி டிவிகளையும் 50000 ரூபாய்க்கு குறைவாக வாங்க முடியும் நிலை உருவாகியுள்ளது.

சியோமி விலை போர்

சியோமி விலை போர்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகப்படியான விலைக்கு விலைக்கு விற்கப்பட்டு வந்த நிலையில், சீனா நிறுவனங்கள் வருகைக்கு பின்பு இதன் விலை பாதியாக குறைந்துள்ளது என்றால் மிகையில்லை.

அதிக விற்பனை

அதிக விற்பனை

சீனா தயாரிப்புகளின் விலை குறைவாக இருக்கும் காரணத்தால் இந்தியா போன்ற பொருளாதார ரீதியில் நடுத்தர மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் சியோமி, விவோ, ஓன்பிளஸ், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான விற்பனையை பெற்றுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் சீன நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் மிகையில்லை.

சீன தயாரிப்புகளின் தரம்

சீன தயாரிப்புகளின் தரம்

சீன தயாரிப்புகளின் தரம் கடந்த 15 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருந்தாலும், தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி-கள் எவ்வளவு காலம் தொடர்ந்து எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் இயங்கும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஓனிடா, சாலிட்டர் பிராணட் டிவிகள் இன்னமும் பலரது வீட்டில் இயங்கிக்கொண்டு இருப்பது நாம் பார்த்து வருகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi launches new Budget smart TV from Redmi Brand

Xiaomi launches new Budget smart TV from Redmi Brand
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X