பாவம் யெஸ் பேங்க்.. 2 பேரால் 21,000 கோடி கடன் காலி! யார் அவர்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யெஸ் பேங்கை நம்பி பல லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் சுமாராக 2.09 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்து இருக்கிறார்கள்.

சுமார் 2.25 லட்சம் கோடி கடன் கொடுத்து இருக்கிறார்கள். வாரா கடன் 17,134 கோடி ரூபாய் இருக்கிறது.

1,337 ஏடிஎம்களும் 1,122 வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. சுமாராக 28.6 லட்சம் டெபிட் கம் ஏடிஎம் கார்ட்கள் பயன்பாட்டில் இருக்கிறதாம். சுருக்கமாக இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கி இது.

ஆர்பிஐ
 

ஆர்பிஐ

ஒரு காலத்தில் யெஸ் பேங்கின் பெயரைச் சொன்னாலே மிக நல்ல வங்கிகள் பட்டியலில் வைப்பார்கள். ஆனால் இன்று, யெஸ் பேங்கின் பெயரைச் சொன்னால் சீண்டுவார் இல்லாமல் தனியாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக கடந்த மார்ச் 05, 2020-க்குப் பின், யெஸ் பேங்க் வாடிக்கையளர்கள், 50,000 ரூபாய் மட்டுமே தங்கள் பணத்தை எடுக்க முடியும் என்று சொன்ன பின் யெஸ் பேங்க் செய்திகள், தலைப்புச் செய்திகளுக்கே வந்துவிட்டது.

ஆர்பிஐ கண்காணிப்பு

ஆர்பிஐ கண்காணிப்பு

யெஸ் பேங்கில் வாராக் கடன்களை குறைத்து மதிப்பிடுகிறார்களோ என ஆர்பிஐ கண்காணிக்கத் தொடங்கியது. இந்த இடத்தில் இருந்தே யெஸ் பேங்கை ஆர்பிஐ தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கிவிட்டது. அதோடு ரானா கபூரின் பதவிக் காலத்தை ஜனவரி 31, 2019 உடன் முடித்துக் கொள்ளச் சொன்னது ஆர்பிஐ.

ஆசை

ஆசை

நம் யெஸ் பேங்கின் முன்னாள் தலைவர் ரானா கபூருக்கோ யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க் போல பெரிதாக வளர வேண்டும் என ஆசை. எனவே அதிகம் ரிஸ்க் எடுத்து பலருக்கும் கடன் கொடுத்தார்கள். விளைவு வாரா கடன் தாறுமாறாக அதிகரித்துவிட்டது. ஆர்பிஐ களத்தில் இறங்கி வாராக் கடனை கணக்கிட்டது.

6,355 கோடி ரூபாய் எங்க
 

6,355 கோடி ரூபாய் எங்க

கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் ஆர்பிஐ கணக்குப் படி 8,373 கோடி ரூபாய் வாராக் கடன் வந்தது. ஆனால் யெஸ் பேங்கோ வெறும் 2,018 கோடியை மட்டுமே வாராக் கடனாக கணக்கு காட்டியது. ஆக சுமார் 6,355 கோடி ரூபாய் வாரா கடனை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டு பிடித்தது ஆர்பிஐ. இப்படி வாராக் கடன்கள் மோசமாகும் அளவுக்கு யாருக்கு எல்லாம் கடன் கொடுத்து இருக்கிறார்கள்..? வாருங்கள் பார்ப்போம்.

44 கம்பெனிகள்

44 கம்பெனிகள்

யெஸ் பேங்க் கடன் கொடுத்து பெரிய அளவில் கடன்கள் திரும்பி வராத கம்பெனிகளை கணக்கு எடுத்தால் சுமார் 44 கம்பெனிகள் வருகின்றன. இந்த 44 கம்பெனிகளும் 10 பெரிய கார்ப்பரேட் குழுமங்களுக்கு சொந்தமானதாம். இந்த 10 கார்ப்பரேட் குழுமங்கள் மட்டும் யெஸ் பேங்கிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் தொகை 34,000 கோடி ரூபாயாம்.

அந்த 2 பேர்

அந்த 2 பேர்

அதிலும் குறிப்பாக இரண்டு பெரிய கார்ப்பரேட் குழுமங்கள் மட்டும் சுமார் 21,000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தவில்லையாம். அதில் முதலாமவர் அனில் அம்பானி. இவருடைய நிறுவனங்கள் வாங்கிய கடன்களில் சுமாராக 12,800 கோடி ரூபாயை யெஸ் பேங்குக்குத் திருப்பிச் செலுத்தவில்லையாம்.

இரண்டாமவர்

இரண்டாமவர்

அனில் அம்பானியைத் தொடர்ந்து யெஸ் பேங்கில் கடன் வாங்கி, அதில் பெரிய தொகையை திருப்பிச் செலுத்தாதவர் எஸ்ஸல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா. இவர் யெஸ் பேங்குக்கு செலுத்த வேண்டிய 8,400 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையாம். ஆக இந்த இருவர் மட்டும் (12,800 + 8,400) = 21,200 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவில்லை.

மற்ற நிறுவனங்கள் 1

மற்ற நிறுவனங்கள் 1

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் குழும நிறுவனங்கள் 4,735 கோடி ரூபாய்,

ஐ எல் & எஃப் எஸ் 2,500 கோடி ரூபாய்,

ஜெட் ஏர்வேஸ் 1,100 கோடி ரூபாய்,

கெர்கர் குழுமம் (Cox & Kings மற்றும் Go travels)1,000 கோடி ரூபாய்,

ஓம்கார் ரியாலிட்டி 2,710 கோடி ரூபாய் என வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லையாம்.

மற்ற நிறுவனங்கள் 2

மற்ற நிறுவனங்கள் 2

பி எம் கெய்தான் குழுமம் (B M Khaitan Group

Bharat Infra, McLeod Russel Assam Tea and Eveready) 1,250 கோடி ரூபாய்,

ரேடியஸ் டெவலப்பர் 1,200 கோடி ரூபாய்,

தாபர் குழுமத்தின் சி ஜி பவர் 500 கோடி ரூபாய்... என 10 குழுமத்தினர்கள் மொத்தமாகச் சேர்த்து சுமார் 34,000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையாம். சார் கொஞ்சமாவது கடனை திருப்பிச் செலுத்துங்களேன் உங்களுக்கு புண்ணியமா போகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yes bank: 2 corporate groups defaulted around 21000 crore

Anil ambani group companies and Subash chandra Essel group companies had defaulted around 21,000 crore loan amount to the stress striking yes bank.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more