டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிடிஹெச் வை அளிக்கும் டிஷ் டிவி (Dish Tv) நிறுவனத்தின் 24.19 சதவீதம், அதாவது 44.53 கோடி பங்குகளை யெஸ் வங்கி (Yes Bank) கைப்பற்றியுள்ளது. இந்தப் பங்குகளை அடமானமாக வைத்து டிஷ் டிவி, யெஸ் வங்கியிடம் கடன் வாங்கியது. தற்போது கடனை செலுத்த முடியாத நிலையில் டிஷ் டிவி பங்குகளை, யெஸ் வங்கி கைப்பற்றியுள்ளது.

 

மார்ச் 31ஆம் தேதி படி, டிஷ் டிவி நிறுவனர்கள் (Promoters), தங்கள் நிறுவனத்தின் 54.56 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் 93 சதவீத பங்குகளை அடமானம் வைத்து கடனாகப் பெற்றுவிட்டனர் டிஷ் டிவி நிறுவனர்கள். இதில் அதிகப்படியான கடனை யெஸ் வங்கி தான் வழங்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..!

தற்போது யெஸ் வங்கி இடம் அடமானம் வைக்கப்பட்ட பங்குகளைக் கைப்பற்றிவிட்ட நிலையில், டிஷ் டிவி நிறுவனர்களிடம் 30 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளது.

இது குறித்து யெஸ் வங்கி பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், கடன் விதிமுறைகள் மீறியதற்கு அல்லது கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணமாக டிஷ் டிவி பங்குகளைக் கைப்பற்றப்பட்டது என யெல் வங்கி நிர்வாகம், டிஷ் டிவி நிறுவனர்களான Essel Business Excellence Services, Essel Corporate Resources, Living Entertainment Enterprises, Last Mile Online, Pan India Network Infravest, RPW Projects, Mumbai WTR, Pan India Infraprojects ஆகியோருக்கு தெரிவித்துள்ளது.

டிஷ் டிவி டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் டிஷ் டிவி 2.4 கோடி வாடிக்கையாளர்களுடன் சுமார் 867.8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் இயங்க லாபமாக 505.6 கோடி ரூபாயும், மொத்த நஷ்டத்தின் அளவு 66.8 கோடி ரூபாயாக உள்ளது.

 

கடந்த வருடம் டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் தங்களது டிடிஹெச் வர்த்தகத்தை இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் காரணங்களுக்காக அது தோல்வி அடைந்தது. இப்போது தான் யெஸ் வங்கியை ஆர்பிஐ உதவியுடன் மீட்டு இருக்கிறார்கள், அதற்குள் மீண்டும் வாரா கடனா..? புதிய யெஸ் வங்கி நிர்வாகம் ஜாக்கிரதையாக இருந்தால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

YES Bank acquires 24% in Dish TV by invoking share pledges

Private sector lender YES Bank has acquired 24.19% stake in Dish TV India’s largest direct-to-home (DTH) company in terms of subscribers, by invocation of 44.53 crore pledged shares.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X